இடுகைகள்

டெக் - ரோபோக்கள் வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும் என்று யோசிக்கலாம் வாங்க!

படம்
  cc   எதிர்கால வாழ்க்கை இப்படித்தான் ! சுவர்கள் வீடியோகேம் பாத்திரங்களுக்கு மட்டும்தான் காயங்களை குணப்படுத்திக்கொள்ளும் திறன் இருக்குமா என்ன ? வீட்டுச்சுவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள கோட்டிங் மூலம் எளிதில் சரி செய்யலாம் . இதிலுள்ள மைக்ரோகேப்சூல்தான் இப்பணியைச் செய்கிறது . ஸ்டோலோடுசன் என்ற நிறுவனம் , நீரை உள்ளேவிடாத பெயின்டை உருவாக்கியுள்ளது . 500 நிறங்களில் கிடைக்கும் இந்த பெயின்ட் மூலம் வீடுகளின் சுவர்கள் , தலைமுறைகளுக்கும் பொலிவை இழக்காது . ஜன்னல் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் ஜன்னல் அமைப்பை கண்டறிந்துள்ளனர் . அறைக்குள் வெளிச்சம் மூலம் கிடைக்கும் வெப்பத்தை தடுக்கமுடியும் . இதிலுள்ள நானோ கிரிஸ்டல்ஸ் அமைப்பு அறைக்குள் வரும் 90 சதவீத புற ஊதாக்கதிர்களைத் தடுக்கிறது . வெளிச்சத்தையும் , வெப்பத்தையும் தடுக்கும் வேளையில் , நானோகிரிஸ்டல் மின் அமைப்பு வெளிச்சம் மூலம் கிடைக்கும் வெப்ப சக்தியை மின்னாற்றலாக சேமித்துக்கொள்கிறது . பாதுகாப்பு இனிமேலும் பாதுகாப்பிற

அன்று முதல் இன்றுவரை - ரோபோக்கள் வரலாறு

படம்
ரோபோக்கள் வரலாறு 1939 மோட்டார்கள், போட்டோவோல்டைக் செல்களைப் பயன்படுத்தி ரோபோக்கள் உருவாக்கப்பட்டன. வெஸ்டிங் ஹவுஸ் எலக்ட்ரிக் கார்ப் கம்பெனியைச் சேர்ந்தவர் கண்டுபிடித்த எலக்ட்ரோ, இவ்வகையில் ஏழடி உயரம் கொண்டது. பேச, நடக்க, ஸ்டைலாக சிகரெட் புகைக்கும் திறன் கொண்டது. எடை 265 பவுண்டுகள். 1950 ஆலன் டூரிங், மனிதனைப் போல யோசித்து செயல்படும் மெஷினை உருவாக்க முயற்சித்தார். இதனை டூரிங் டெஸ்ட் என்று குறிப்பிட்டனர். 1969 இன்றைய தானியங்கி ரோபோ கைகளுக்கான அச்சாரம் அன்றே போட்டதுதான். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விக்டர் சீன்மென் ரோபோ கரத்தை உருவாக்கினார். 1973 ஜப்பானைச் சேர்ந்த வசிடா பல்கலைக்கழக பேராசிரியர் இச்சிரோ காடோ, வாபோட் -1 என்ற மனிதர்களை ஒத்த ரோபாட்டை உருவாக்கினர். 1999 அனைத்து எலக்ட்ரிக் பொருட்களையும் சுளுவாக போணி செய்யும் சோனி , பெட் விலங்கான அய்போவை உருவாக்கியது. ரோபோட்டிக் நாயான அய்போ, தன் எஜமானருடன் வளவளவென பேசும் தன்மை கொண்டது. 2000 சோனி பாய்ந்தால் ஹோண்டா சும்மாயிருக்குமா? அசிமோ என்ற ஹியூமனாய்டு ரோபோவை உருவாக்கியது ஹோண்டா. 2004 ஹெலிகாப