இடுகைகள்

பிஸ்னஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

'அந்த லெவல்' விற்பனைக்கு டீனேஜர்களை அடிமையாக்க வேண்டும் - அமெரிக்க நிறுவனங்களின் வணிக யுக்தி

படம்
  குழந்தைகளைக் கவர பெருநிறுவனங்கள் என்ன செய்கின்றன? மிகவும் எளிமையான விஷயம். வறுத்த கோழி விற்கும் நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம். அவர்களின் அடிப்படையான அடையாளம் இரண்டு நிறங்களாக இருக்கும். சிவப்பு, மஞ்சள் அல்லது வெள்ளை இப்படி.. இவர்கள் தங்களுக்கென தனி லோகோ ஒன்றை வைத்திருப்பார்கள். பழைய உறைந்துபோன இறைச்சியை சூடுபடுத்திக் கொடுத்தாலும் அதை எப்படி அலங்காரம் செய்து கொடுக்கிறார்கள், அதை விளம்பரப்படுத்தும்போது என்னவிதமாக ஒலியை உருவாக்கிக் காட்டுகிறார்கள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது. ஆறு மாத குழந்தைகளால் டிவி சேனல்களில் காட்டப்படும் படங்களை உள்வாங்கிக் கொள்ள முடியும் என மேற்குலக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். 36 மாத குழந்தைகளால் நூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் லோகோக்களை நினைவுகூர முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.   விளம்பரங்களில் காட்டப்படும் பெருநிறுவனங்களின் எண்ணிக்கையை நினைவுகூர்ந்து கூறும் திறன் என்பது குழந்தைகள் வளர வளர அதிகரித்துக்கொண்டே செல்லும். கடையில், தனக்குத் தேவையான பொருட்களை வாங்கும் போது, அவர்கள் தங்கள் நினைவில் உள்ள பெருநிறுவனங்களின் பிராண்டுகளுக்கு முக்கியத்துவ