இடுகைகள்

எட்வர்ட் சோன்ஸ்டட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடலில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான தங்கப் புதையல்கள்!

படம்
  கடலில் கொட்டிக்கிடக்கும் தங்கம்! ஆங்கில சாகச பயண திரைப்படங்களில் பெரும் சுவாரசியம் தருவது  புதையல் தேடும் பகுதிகள்தான்.  நிலத்தில் உள்ள தங்கப் பொக்கிஷங்களை பெருமளவு கண்டுபிடித்துவிட்டோம் ;சரி, ஆனால் கடலில் கிடந்தால் கிடக்கட்டும் என  விட்டுவிட முடியுமா? தோராயமாக கடலில் 45 ஆயிரம் டன்கள்(1 டன் - 907 கி.கி) தங்கம் கடலில் ஆதரவின்றி கிடக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  1872 ஆம் ஆண்டு வேதியியலாளர்  எட்வர்ட் சோன்ஸ்டட்(Edward  Sonstadt)  கடலில் கொட்டிக்கிடக்கும் தங்கப் புதையல்களைப் பற்றி நம்பகமான தகவல்களை உலகிற்கு சொன்னார். உடனே  ஆய்வாளர்கள், கடல்பயணிகள் ஆகியோருக்கு பொக்கிஷப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடல்நீரிலுள்ள தங்கத்தை கணக்கிட பல்வேறு செயல்முறைகள் உண்டு.  கடல் நீரில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு கனிமங்கள் உண்டு. அவற்றிலிருந்து தங்கத்தை  தனியே பிரிக்க அதனை ஆவியாக்க வேண்டும். இரண்டாம் வழிமுறை, அதிலுள்ள சோடியம்,  குளோரின் உப்புகளை தனியாக பிரித்தெடுக்கலாம். மூன்றாவது வழிமுறை, தங்கத்தை கரைத்து நீரிலிருந்து தனியாக எடுப்பது. இதற்கு பல்வேறு இயற்கையான கரைப்பான்களை பயன்படுத்தலாம். நான்காவது வழி