இடுகைகள்

கௌதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிராமத்து முத்துவீரன் பாம்பேவில் முத்து பாயாக மாறும் கதை! - வெந்து தணிந்தது காடு - கௌதம்

படம்
  வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு இயக்கம் கௌதம் இசை – பாடல்கள் - ஏ ஆர் ஆர்   பாடல்கள்-   தாமரை கதை – ஜெயமோகன் நடுவக்குறிச்சி அருகே கிராமத்தில் முள்வேலிகளை விறகுக்கு வெட்டி பிழைக்கும் முத்துவீரன், மும்பைக்கு பிழைக்கச் செல்கிறான். அங்கு நேரும் சம்பவங்கள் அவனது வாழ்க்கையை மாற்றிப்போடுகின்றன. அப்படி அங்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. முத்துவீரன் பாத்திரம்தான் படத்தில் முக்கியமானது. வன்முறை வழி அவனை பிடிக்கும் என ஜாதகத்தில் சொல்லியிருக்கிறார்கள் அவனது அம்மா, ஊரில் அல்லாமல் வேறு மாநிலத்திற்கு வேலைக்கு அனுப்புகிறாள். சேர்வத்துரை என்பவர்தான் முத்துவை மும்பைக்கு கூட்டிச்செல்வதாக ஏற்பாடு. ஆனால் அவரே கூட எதிர்பாராத சிக்கலால் தனது உயிரை மாய்த்துக்கொள்கிறார். ஆனால் அவர் மூலமாக முத்துவுக்கு துப்பாக்கி கிடைக்கிறது. அதை எடுத்து மறைத்து வைத்துக்கொள்கிறான். ஏன் அப்படி செய்தான் என அவனுக்கு புரிவதில்லை. ஆனால் சேர்வதுரை மாமாவுக்கு கெட்டபெயர் ஆக கூடாது என அந்த நேரத்தில் யோசிக்கிறான். ஊரில் துப்பாக்கி மீது கைவைப்பது அவனது வாழ்க்கையை மாற்றுகிறது. இசக்கி புரோட்டா