எதிர்கால ஆபத்துகளை உணர்ந்து தன்னைக் காத்துக்கொள்ள முயலும் தீயசக்தி இனக்குழுவின் இளவரசன்!
அன்ரிவல்டு வில்லன் மங்கா காமிக்ஸ் பேடோ.ஐஓ கொரியாவில் வாழ்பவர் தான் எழுதிய காமிக்ஸில் நுழைந்து துணை பாத்திரமாக மாறுகிறார். அந்த நிலையில் தனக்கு வரும் ஆபத்துகளை முன்னே உணர்கிறார். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முனைகிறார். அது சாத்தியமானதா என்பதே கதையின் மையம். நாயகன், ஃபர்ஸ்ட் மூன் கல்ட் என்ற இனக்குழுவின் நான்காவது இளவரசன். அதாவது தீயசக்தி இனக்குழு. குடித்துவிட்டு பெண்களை புணர்ந்துகொண்டு வாழ்வதே வாழ்க்கை லட்சியமாக வாழ்கிறான். திடீரென அவனது உடலுக்குள் புதிய ஆன்மா புகுந்தவுடன் அனைத்தும் மாறுகிறது. எதிர்காலத்தில் தற்காப்பு அணி கூட்டமைப்பின் வீரன் தாய் என்பவனால் வாளால் வெட்டி கொல்லப்படுவதை அறிகிறான். அந்த சம்பவம் நடக்க பத்து ஆண்டுகளே உள்ளது. அதற்குள் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். நாயகன் உடல் பலவீனமானது. எனவே, அதை வலு செய்ய முயல்கிறான். எதிர்காலம் ஒருவனுக்கு தெரிவது புனைவு கதைக்கு சிறந்த திருப்புமுனை. பிறரை விட புத்திசாலியாக நிறைய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆதரவு அணிகளை அமைக்கலாம். எதிரிகளை முன்னமே ஒடுக்கலாம். நட்பை உருவாக்கிக் கொள்ளலாம். அந்த வகையில் நாயக...