இடுகைகள்

கருத்துரிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியர்களின் மரபணுக்களில் உள்ள ஜனநாயகம்!

படம்
  பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிர்ப்பு நமது மரபணுக்களில் ஜனநாயகம் உள்ளதா? இந்திய பிரதமர், அண்மையில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார். அங்கு சென்று உரையாற்றியதில் அவர் ஒரு விஷயத்தை மட்டும் தவறவிட்டுவிட்டார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் மனித உரிமைகள் இந்தியாவில் எப்படி நசுக்கப்பட்டன என்பதைக் கூறவில்லை. அமெரிக்க அதிபர்   மனித உரிமை பற்றி தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கலாம். வெள்ளை மாளிகையில் மோடியின் வருகையொட்டி பூக்களின் அலங்காரம் செய்யப்ப்பட்டிருந்தது. மேசையில் சைவ உணவு பரிமாறப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் மோடி பங்கேற்ற முதல் ஊடக சந்திப்பில் அமெரிக்க நிருபர் மனித உரிமைகள் பற்றி கேள்வியைக் கேட்டார். உடனே   மோடி மறைமுகமாக ‘’ஜனநாயகம் எங்கள் மரபணுக்களில் உள்ளது. அதுதான் எங்கள் ஆன்மா. எங்கள் ரத்த நாளங்களில்   ஓடுகிறது’’ என்று உரையாற்றினார். பிரதமர் கூறியதில் சற்றும் உண்மை இல்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பசுக்களை வளர்க்கும் முஸ்லீம்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பால் கண்காணிக்கப்பட்டு தொடர்ச்சியாக தாக்கப்பட்டனர். அல்லது திட்டமிட்டு மதவாத கும்பல்களால் கொல்லப்பட்டனர். பிரதமர் மோட