மண்ணின் தரத்தை 90 நொடியில் அறியலாம்!
90 நொடியில் மண்ணின் நலம் அறியலாம்! ஐஐடி கான்பூரைச் சேர்ந்த மாணவர்கள் மண்ணின் தரத்தை எளிதில் கண்டுபிடிக்கும் பூ பரிஷக் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்க முடியும் இக்கருவியால் 90 நொடிகளில் மண்ணின் தரத்தை அறியலாம். வேகமாக மண் மாதிரிகளை சோதிக்கும் இக்கருவியால், ஒரு லட்சம் மாதிரிகளை சோதிக்கலாம். இதன்மூலம் விவசாயிகள் மண்ணிற்கு தேவையான உரங்களை எளிதாக அறிந்து பயன்படுத்த முடியும். இதற்கு முன்னர், மண்சோதனைகளை செய்து அதன் தன்மையை அறிய இரு வாரங்கள் தேவை. ஆய்வு செய்து,மண் தரம் பற்றிய அட்டையை விவசாய ஆராய்ச்சியாளர்கள் வழங்குவார்கள். இனி அத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நியர் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கிராபி தொழில்நுட்பம் (Near infrared Spectroscopy) மண்சோதனைக் கருவியில் பயன்படுகிறது. மண் சோதனை முடிவுகளை கூகுள் பிளே ஸ்டோரிலுள்ள பூ பரிஷக் ஆப்பை தரவிறக்கி அறிந்துகொள்ளலாம். இக்கருவியில் ஐந்து கிராம் மண்ணை வைத்தாலே அதிலுள்ள ஊட்டச்சத்துகளைப் பற்றி எளிதாக அறியலாம். சிலிண்டர் வடிவிலான கருவியில், மணலை சோதிக்கிறார்கள். இதனை போனில் ப்ளூடூத்...