மண்ணின் தரத்தை 90 நொடியில் அறியலாம்!

 












90 நொடியில் மண்ணின் நலம் அறியலாம்!



ஐஐடி கான்பூரைச் சேர்ந்த மாணவர்கள் மண்ணின் தரத்தை எளிதில் கண்டுபிடிக்கும் பூ பரிஷக் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்க முடியும் இக்கருவியால் 90 நொடிகளில்  மண்ணின் தரத்தை அறியலாம். வேகமாக மண் மாதிரிகளை சோதிக்கும் இக்கருவியால்,  ஒரு லட்சம் மாதிரிகளை சோதிக்கலாம். இதன்மூலம் விவசாயிகள் மண்ணிற்கு தேவையான உரங்களை எளிதாக அறிந்து பயன்படுத்த முடியும். 

இதற்கு முன்னர், மண்சோதனைகளை செய்து அதன் தன்மையை அறிய இரு வாரங்கள் தேவை. ஆய்வு செய்து,மண் தரம் பற்றிய அட்டையை விவசாய ஆராய்ச்சியாளர்கள் வழங்குவார்கள். இனி அத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நியர் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கிராபி தொழில்நுட்பம் (Near infrared Spectroscopy) மண்சோதனைக் கருவியில் பயன்படுகிறது.

 மண் சோதனை முடிவுகளை கூகுள் பிளே ஸ்டோரிலுள்ள பூ பரிஷக் ஆப்பை தரவிறக்கி அறிந்துகொள்ளலாம். இக்கருவியில் ஐந்து கிராம் மண்ணை வைத்தாலே அதிலுள்ள ஊட்டச்சத்துகளைப் பற்றி எளிதாக அறியலாம்.  சிலிண்டர் வடிவிலான கருவியில், மணலை சோதிக்கிறார்கள். இதனை போனில் ப்ளூடூத் வழியாக இணைத்தால் 90 நொடிகளில் மண் பற்றிய முடிவை அறிந்துகொள்ளலாம். கூடுதலாக மேக கணினிய வழியில் தனி அடையாள எண்ணை வைத்தும் மண்ணின் தரத்தை அறியலாம். 

நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், வண்டல் மண், இயற்கையான கார்பன் ஆகியவை மண்ணின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான அம்சங்களாகும். மண்ணின் தரத்தை சோதிக்கும் கருவியின் பெயர் பூ பரிக்ஷக் (Bhuparikshak)என வைக்கப்பட்டுள்ளது. இதனை அக்ரோ நெக்ஸ்ட் சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனம் தயாரித்து வணிக ரீதியில் விற்கவிருக்கிறது. 

இக்கருவியை உருவாக்கி மேம்படுத்தியது ஐஐடி கான்பூரின் வேதிப்பொறியியல் துறையைச் சேர்ந்த ஜெயந்த்குமார் சிங், பல்லவ் பிரின்ஸ், அசார் அகமது, யாசாஸ்வி கெமானி, மொகத் ஆமிர்கான் ஆகியோர் கொண்டு குழுவாகும். 


source

IIT kanpur develops app to test soil health in 90 seconds

dec 14 

Hindu 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்