புராணம் உண்மையல்ல என்று கூறுவது சிறுமைத்தனமானது! - எழுத்தாளர் அமிஷ் திரிபாதி
எழுத்தாளர் அமிஷ் திரிபாதி |
அமிஷ் திரிபாதி
எழுத்தாளர்
லெஜண்ட்ஸ் ஆப் ராமாயணா - அமிஷ் திரிபாதி |
அமிஷ் தற்போது டிஸ்கவரி பிளஸ்சில் தி லெஜண்ட்ஸ் ஆப் ராமாயணா என்ற டாக் - சீரீஸை தொகுத்து வழங்கி வருகிறார்.
வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் மூடப்படப்போகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படியிருந்தது. அவர்கள்தான் உங்களது நூல்களை பதிப்பித்தவர்கள் அல்லவா?
எனது மனம் உடைந்து போய்விட்டது. வெஸ்ட்லேண்ட் நிறுவனம் மட்டுமே பிறர் பிரசுரிக்க மறுத்த எனது நாவல்களை பிரசுரித்த நிறுவனம். இம்மார்டல் என்ற வரிசை நூல்களை அவர்கள் தான் பிரசுரத்திற்கு ஏற்றனர். வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தின் இயக்குநர் கௌதம் பத்மநாபன் சிறந்த நபர் என இதற்கு எழுதிய எழுத்தாளர்கள் அனைவருமே கூறுவார்கள். அவரது அப்பாதான் இந்த தொழிலை உருவாகி நடத்தினார். அவரது மகனான கௌதம் மனம் எப்படிப்பட்ட வலியை அனுபவித்திருக்கும் என நினைத்துப் பாருங்கள்.
டாக் சீரிசில் ராமனுக்கு சகோதரி ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது.. ஆனால் இதுபற்றி மக்கள் பலருக்கும் தெரியாதே?
ராமாயணம் என்ற புராணத்திற்கு பல வெர்ஷன்கள் உண்டு. இந்த சீரிசின் நோக்கம் நகரத்திலுள்ள இந்தியர்களுக்கு ராமாயணத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதுதான். எனவே, வால்மீகி ராமாயணத்தில் நாங்கள் சில மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளோம். எனவே, ராமனின் சகோதரி சாந்தா பற்றி சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. இதில் அவரது பாத்திரம் முக்கியமானது. சாந்தாவின் கணவர் தான் யக்னா முறையில் பேரரசர் தசரதர் குழந்தை பெற உதவுகிறார். இதுபோல சீரிஸ் முழுக்க நிறைய ஆஹா தருணங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது.
ராமாயணா என்பது வரலாறா அல்லது புராண புனைவா?
நாம் பிரிட்டிஷ் கால காலனி ஆட்சியாளர்களின் விதிகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுடைய மதம் மட்டுமே உண்மையானது. பிறரின் புராணங்கள் உண்மையல்ல என்று நம்புகிறார்கள். வரலாறு என்பது உண்மையானது. புராணம் என்பது உண்மையல்லாதது என்று கூறுவது சிறுமைத்தனமானது.
சுகானி சிங்
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக