செயற்கை வேதி உரங்களை முழுக்க கைவிடுவது கடினம்! - டெட் நார்தாஸ், அமெரிக்க எழுத்தாளர்

 



டெட் நார்தாஸ், அமெரிக்க எழுத்தாளர்





டெட் நார்தாஸ்
இயற்கை சூழலியலாளர், ஆலோசகர்


பொதுவாக இயற்கை விவசாயம் சார்ந்த வெற்றிக்கதைகளை அதிகம் கேட்டிருக்கிறோம். ஆனால் இலங்கையில் எப்படி இயற்கை விவசாயம் தவறாக போனது?

வளர்ச்சி பெற்ற நாடுகளில் இயற்கை விவசாயம் செய்வது எளிது. அங்கு அதற்கென தனி விலை வைத்து வசதியான வாடிக்கையாளர்களுக்கு விற்பார்கள். இதில் குறைந்த விளைச்சல் வந்தாலும் கூட அவர்கள் அதற்கான இடுபொருட்களை குறைவாக பயன்படுத்துவார்கள். கிராக்கியைப் பொறுத்து விலையை கூடுதலாக வைத்து விற்பார்கள். நாட்டிலுள்ள அனைவரும் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினால் நீங்கள் கூடுதல் விலைக்கு வைத்து விற்க முடியாது. 

இயற்கை விவசாயம் சார்ந்த சந்தையில் அதிக பொருட்கள் உள்ளன. அவையும் அதிக விலையில் உள்ளன. இதனால், சாதாரண குறைந்த வருமானம் கொண்ட மக்கள் பொருட்களை வாங்க முடியாது. அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்தில் பொருட்களை உற்பத்தி செய்தால், பொருட்கள் அனைத்துமே விலை கூடித்தான் இருக்கும். இதனால் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கிறது., 

இப்படி விவசாயம் செய்வது நிலம், வேதிப்பொருள், பசுமை இல்ல வாயு வெளிப்பாடு எதிலும் நன்மை செய்யாது. பணக்கார நாடு அல்லாத நாடு இயற்கை விவசாயத்தை நாடு முழுக்க அமல் செய்தால் முடிவு அனைவருக்கும் தெரிந்ததுதான். விளைச்சல் வீழ்ச்சியடையும். அதனை அவர்களால் சமாளிக்க முடியாது. இதனால் ஏற்றுமதி சரிவாகி, ஒட்டுமொத்தமாக மனிதர்கள் உணவுக்காக அலையத் தொடங்கிவிட்டனர். 




இந்த பாதிப்புக்கு நீங்கள் யாரை குற்றம்சாட்டுவீர்கள்?

அதிபர் கோத்தபய ராஜபக்சே, செயற்கை உரங்களை தடை செய்தார். இதன் காரணமாக உடனடியாக பாதிப்பு வெளித்தெரியவில்லை. விவசாயிகள் அப்போது கையிருப்பில் இருந்த வேதி உரங்களை பயன்படுத்தினர். பிறகுதான் பாதிப்பு தொடங்கியது. ஆனால் மெல்ல வேளாண் பயிர்களின் விளைச்சல் குறைந்துபோனது. இதன் விளைவாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இறுதியாக, உள்நாட்டு மக்களுக்கான உணவுப்பொருட்களுக்கே இப்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இயற்கை விவசாயம் செய்தால் உலக மக்களுக்கு உணவு உற்பத்தி செய்ய முடியாதா? செயற்கை உரங்களால் சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் செயற்கை உரங்களின் விலையும் கூடி வருகிறதே?




இயற்கை எரிவாயு செயற்கை உரங்களை உருவாக்க முக்கியமான பகுதிப்பொருள். எனவே, எரிபொருட்கள் விலை உயரும்போது செயற்கை உரங்களின் விலையும் அதிகரிக்கிறது. இதை தவிர்ப்பது கடினம். இந்த உரங்களை எப்படி திறனுடன் பயன்படுத்துவது என்பதைப் பற்றி கவனம் செலுத்தலாம். 

 ஹாபர் போச் எனும் முறையில் செயற்கை உரங்களை தயாரிக்கத் தொடங்கினர். இந்த முறை இல்லாது போனால் நம்மால் பயிர்களை  எளிதாக விளைவிக்க முடிந்திருக்க முடியாது. நாம் செயற்கை உரங்களை உடனே தவிர்த்துவிட்டு வேறு உரங்களை நாட முடியாது. மண்ணில் நைட்ரஜனை ஈர்க்கும் நுண்ணுயிரிகளை ஆராய்ச்சி செய்து கண்டறிந்தால், உரங்களின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. 

உக்ரைனில் ஏற்பட்ட பாதிப்பு, தூய ஆற்றலுக்கு உலக நாடுகள் மாற உதவுமா? நீங்கள் இதை ஏற்கிறீர்களா?

நான் ஏற்கிறேன். இதில் நிறைய விதிகள், நெறிமுறைகள் உள்ளன. கார்பன் வெளியீடு, தூய ஆற்றல் என்பது நாடுகளின் நிலப்பரப்பு ரீதியான அரசியலோடு தொடர்புடையது. பனிப்போர் காலத்திற்குப் பிறகு, உலக ரீதியான பிரச்னைகளை ஐ.நா சபையில் பேசி தீர்வு கண்டுவிடலாம் என நம்பிவிட்டனர். காலநிலை மாற்றம் பற்றி நாம் நிறைய பேசிவிட்டோம். இதில் செய்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. 

டைம்ஸ் ஆப் இந்தியா 

நீலம் ராஜ் 





கருத்துகள்