மயிலாப்பூர் டைம்ஸ் - கூட்டு மிளகுத்தூள் எனும் பேரமுது!

 






Mylapore Times

வந்தே ஏமாத்துறோம்...

அல்டிமேட் லெஜண்ட்ஸ் -1




எனக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அலர்ஜி பிரச்னை இருப்பதால், பால் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் சில சமயங்களில் பால் பொருட்களை சேர்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் தயிரை சேர்த்து அதில் மிளகுப் பொடியைப் போட்டு சாப்பிட்டு வருகிறேன். இதில் தயிர் பிரச்னையில்லை. பெரும்பாலும் ஹெரிடேஜ் கர்ட் பத்து ரூபாய் பாக்கெட்டில் தடையின்றி கிடைத்து விடுகிறது. ஹட்சன் என்றால் எப்போதும் டப்பாதான். அதில் தயிரின் அளவு 40 கிராம் குறைவாக இருக்கும். எனவே, பாக்கெட் தான் வாங்குபவர்களுக்கு லாபம். டப்பா, பாக்கெட் இரண்டுமே பத்து ரூபாய் என்றாலும் கிராம்களை வேறுபடுத்தியுள்ளனர். 

இந்த நேரத்தில் தான் மிளகுத்தூளை வாங்க கடைக்குப் போனேன். மயிலாப்பூரின் பஜார் ஸ்ட்ரீட்டில், பூக்கடை ஒன்று இருக்கும் அதற்கு அருகில் இளங்கோ என்ற நவீன நாகரிக கடை இருக்கும். அதில் வேலை செய்பவர், அவர்தான் முதலாளி. என் ரேஞ்சு என்ன தெரியுமா, என்னைப் போய் பொட்டுக்கடலை மடிக்கச்சொல்லி கேட்குற என்பது போன்ற அலுப்பு முகத்தில் தெரியும். இவர் கடையில் வாங்கிய 50 ரூபாய் அரிசி இன்னொரு அநியாயம். அதில் இருந்த செல் பூச்சி எத்தனை என எண்ண முடியவில்லை. எப்படியோ விரைந்து அதனை சாப்பிட்டு முடிக்கும்படியாகிவிட்டது. எல்லாம் 500 க்கும் பச்சை மிளகாயை வாங்கி வந்து சாப்பிட்டு வருத்தம் தொலைக்கும் முல்லா கதைதான். வேறென்ன மறி.....

அதற்கு அருகில் உள்ள கடையை பலரும் கவனிக்க மாட்டார்கள். முஸ்லீம் பெரியவர் ஒருவர் பொங்கு பொங்கு என பொருட்களை கேட்டு எடுத்து சில்லறையை மாற்றி தப்பாக கொடுப்பார். அவர் கடையில்தான் நான் போய் மாட்டியது. மிளகுத்தூள் அன்று திடீரென தேவையாக இருந்தது. டக்கென தலைமீது தொங்கிய மசாலா தரத்தில் ஒன்றை பிய்த்து கொடுத்தார். பார்த்தால் மிளகின் படம் இருந்தது. 12 கிராம் ரூ.12 என விலை போட்டிருந்தது. அதே ரேட்டுதான் வாங்கினார்கள். அதை தயிரில் போட்டால் என்னடா சாம்பலை கொட்டியது போல இருக்கிறது என தோன்றியது. கூடவே, மிளகின் தன்மை இல்லை. மிளகாயின் காரம் இருந்தது. என்னவென்று பார்த்தால், கம்பெனிக்காரன் பெயர் டிஎம்ஆரோ என்னவோ...கூட்டு மிளகாய் தூள் என டிரிக்ஸாக பெயர் வைத்திருந்தான். 

கூட்டு மிளகாய் தூளில் கலந்துள்ள பொருட்கள் என்னென்ன தெரியுமா? அரிசி உமி, மிளகாய்த்தூள், மிளகு. உமியும், மிளகாய்த்தூளும் அதிகம். பிறகு போனால் போகிறதென கொஞ்சூண்டு மிளகு தோல் இருந்தது. 

பிறகு நான் அந்த கம்பெனியை முஸ்லீம் அய்யா கடையில் வாங்கவும் இல்லை. கூட்டு மிளகாய் தூளை நினைத்துப் பார்க்கவும் இல்லை. நான் கொடுத்த 12 ரூபாய் செல்லாமல் போனால் என்னை சும்மா விடுவார்களா? ஆனால் எனக்கு நான் வாங்கிய பொருள் நினைத்துப் பார்க்க முடியாத மோசடியாக இருக்கிறது. ஏறத்தாழ இங்கு நடந்தது வணிகமல்ல. மோசடிதான். சுரண்டல்தான். 






கருத்துகள்