காதல் வந்தால் உடலுக்கு என்னாகிறது?
maureen mayieka /pinterest ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர். ரோனி காதலில் விழுந்தால் என்னாகிறது உடல்? சூரியன் பனியாவதும், பனி எரிமலையாகத் தோன்றுவதும் நிகழ்வது இந்த உணர்ச்சியில்தான். காதலைத் தடுக்கும் குடும்பங்கள் எம கிங்கரர்களாக மாறுவதும் இதையொட்டித்தான். சமூகத்தை விடுங்கள். நம் உடலில் என்ன மாற்றங்களைக் காணலாம். ரத்தத்தில் காதல் நினைவுகள் கலந்தால் புரதம் விறுவிறுவென ஏறுகிறதா? மூளையின் நியூரான்கள் ஓவர் டூட்டி பார்ப்பதும் காதல் டைமில்தான். காதல் சமயத்தில் டோபமைன் மற்றும் ஆக்சிடோசின் சுரப்பதால் உடலில் கோகைன் அடித்தது போன்ற போதை ஏற்படும். வெட்கமின்றி சிரிப்பது இப்படித்தான் நிகழ்கிறது. Michelle Jacokes \pinterest மூளையில் சுரக்கும் வாசௌபிரசின் ஹார்மோன், உங்கள் காதலி மீது அதிகப்படியான காதலை ஏற்படுத்தும். எப்படி? அவர் தன் கல்லூரியிலுள்ள ஆண் தோழர் கூட பேசினால் கூட உங்களுக்கு ரத்தம் அழுத்தம் கிறுகிறு வென ஏறும். கூடவே காதலைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வேகத்தை செரடோனின், நோர்பைன்பிரைன் ஆகிய ஹார்மோன்களின் சுரப்பு தரும். suziuu \pinterest க...