இடுகைகள்

ராஜாஜி மருத்துவமனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீரா நோய்களைக் கொண்டவர்களுக்கு உதவும் மனிதர் - பிலிப் ஜெயக்குமார்

படம்
  சிறிதே வெளிச்சம் ! நோய்மை ஒருவரது வாழ்க்கையை பெருமளவு மாற்றிவிடும். நோய்மையில் இருக்கும்போது மனிதன் தான் செய்த விஷயங்களை மீண்டும் அசை போட்டு தவறுகள் என்ன என்பதை அறியலாம். இந்த வகையில் நோய் ஏற்படும்போது மெல்ல மனமும் துவண்டுவிடும். அந்த நேரத்தில் அவருக்கு துணையாக இருப்பவர்களை அவர் என்றும் மறக்க முடியாது. பிலிப் ஜெயக்குமார் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை செய்து மீண்டவர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது ஒருமுறை அவரது கால்களை நகர்த்த முடியவில்லை. அதேநேரம் அவரது சிறுநீர் வெளியேற வைக்கப்பட்டிருந்த பை நிரம்பியிருந்தது. அப்போது அதை அகற்றினால்தான் மீண்டும் சிறுநீர் கழிக்கும் நிலை. பக்கத்து படுக்கையில் இருந்த நோயாளியின் உறவினர் பிலிப்பின் உதவிக்கு வந்தார். அவரது சிறுநீர் பையை கழிவறையில் கொட்டிவிட்டு காலிசெய்து உதவினார். 1993 -2003 வரையில்   மருத்துவமனையில் எலும்பு புற்றுநோயோடு போராடி மீண்டார். அந்த போராட்டம்தான் பிலிப்பின் வாழ்க்கையில் பிறரைப் பற்றிய அக்கறையை உருவாக்கியது. பின்னாளில் 2012ஆம் ஆண்டு, ஒண்டர்புல் சர்விங் ட்ரஸ்ட் என பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, குணம