இடுகைகள்

டெக்- சைபர் அட்டாக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைபர் தாக்குதலில் தவிக்கும் இந்தியா!

படம்
சைபர் இந்தியா ! இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தகவல்தளங்கள் டிஜிட்டலாகி வருகின்றன . அதேசமயம் அரசுத்தளங்களின் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன . அமெரிக்கா , சீனாவுக்கு அடுத்து இந்தியாவே இணையத்தாக்குதல்களுக்கு இலக்காகும் நாடுகளில் மூன்றாவது இடம்பிடிக்கிறது . ரஷ்யா இந்தியாவுக்கு அடுத்து உள்ளது . உலகளவில் அமெரிக்கா (23.96%), சீனா (9.63%), இந்தியா (5.11%) ரஷ்யா (3.07%) என தாக்குதல்களுக்கு இலக்காகும் நாடுகளின் லிஸ்ட்டை சைமன்டெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது . ஸ்பாம் அட்டாக்குகளின் தேசிய சராசரி 54.6% எனில் இந்திய சராசரி கடந்தாண்டு 53.9%(2016) என அதிகரித்துள்ளது . ஸ்பாம் தாக்குதல்களிலும் , சாட்பாட்ஸிலும் , நெட்வொர்க் தாக்குதல்களிலும் இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது . ரான்சம்வேர் தாக்குதல்களில் மூன்றாமிடமும் , இணைய தாக்குதல்களில் ஆறாவது இடமும் வகிக்கிறது .