இடுகைகள்

நூல் விமர்சனப்பகிர்வுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐஏஎஸ் பதவியில் சாதித்த சாதனைகளும், சிக்கல்களும் - ப.ஸ்ரீ. இராகவன்

படம்
நேரு முதல் நேற்று வரை  ராகவன்  கிழக்கு பதிப்பகம் சுதந்திரமடைந்த இந்தியாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய ராகவன், தனது பணி அனுபவங்களை நூலில் விவரித்துள்ளார். வெறும் விருப்பு வெறுப்பு மட்டுமன்றி, எதிர்கால குடிமைப்பணித் தேர்வு எழுதும் அதிகாரிகள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று இறுதிப்பகுதியிலும் வலியுறுத்தியுள்ளார். அதற்காக கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  தலைநகரான டில்லியில் பணியாற்றுவதற்காக ஆங்கிலத்தோடு இந்தியும் கற்றது தனக்கு எப்படி பயன்பட்டது என்பதை லால் பகதூர் சாஸ்திரியோடு பணியாற்றிய அனுபவத்தில் சொல்லியிருக்கிறார். இதை சொல்லும்போதும், பல்வேறு நிகழ்வுகளின்போதும் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் காரணமின்றி அரசியலுக்காக இடம் மாற்றுதல் செய்யப்படுவதை கண்டமேனிக்கு திட்டித் தீர்த்துள்ளார்.  இதற்கு காரணம் அரசு பணியில் உள்ள அரசு தலையீடூ  என புரிந்துகொண்டு நாம் வாசித்து கடந்துவிடலாம். நேரு, லால் பகதூர் சாஸ்திரி, குல்சாரிலால் நந்தா, ஜோதிபாசு என பல்வேறு அரசியல் தலைவர்களோடு பழகிய அனுபவங்களை நேர்த்தியாக தொகுத்து எழுதியுள்ளார். கொல்கத்தாவில் செய்த வளர்ச்சிப் பணிகள், அதற்கு ந

நூல் வெளி

இயந்திரம் மலயாற்றூர் ராமகிருஷ்ணன் என்பிடி                                                     கபியாஸ்           அதிகாரப்படிக்கட்டுகளை இடையறாது தேடிப்பயணிக்கும் ஒரு மனிதனின் கதை. அவனின் பயணவழியே பிற மனிதர்களின் வாழ்வும் நம் கண்களுக்கு வசப்பட கதை நகர்கிறது.      பாலகிருஷ்ணன் எனும் வசதியில்லாத அந்தஸ்து குறைந்த ஒரு மாணவன் ஐ.ஏ. எஸ் தேர்ச்சி பெறுகிறான். ஆனால் அந்த மகிழ்ச்சியைக்காட்டிலும் அவனுக்கு அவன் குடும்பம் இருக்கும் கீழ்நிலையில் மற்ற மாணவர்களான வசதி நிறைந்த குரியன் உள்ளிட்டோரை நினைத்து ஏங்குகிறான். தொடர்ந்து தன் வாழ்வை குரியனுக்கு நிகராக ஆக்கிக்கொள்ள நினைத்து திட்டமிட்டு திருமணம், நட்பு ஆகியவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.      ஆனால் அந்த உறவுகள் எதிலும் இவனால் உண்மையாக இருக்கமுடியவில்லை. அவை உண்மையாகவும் இல்லை. இயந்திரம் கவனம் பெறுவது அதனுள் இருக்கும் குறையாத அதிகார விளையாட்டுக்களின் நம்பகத்தன்மைதான். அதிகாரத்தோடு ஒருவன் இன்னொருவரோடு எப்படி உண்மையாக நேர்மையான நட்பை ஏற்படுத்திக்கொள்ளமுடியும்? அதேதான் நிகழ்கிறது இங்கேயும். இவனது வாழ்வில் இவனுக்கு கடும் குற்றவுணர்வை

நூல் வெளி

29 வெற்றிபெற காந்திய வழிகள் ஆலன் ஆக்ஸல்ராட் தமிழில்: மரு.வெ. ஜீவானந்தம் தமிழினி                                                                ரோசா       காந்திய பல்வேறு கட்டங்களில் நாடு குறித்து பேசிய பல விஷயங்கள் எப்படி ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்ய பயன்படுகின்றன என்பதை நூறு காந்தியின் வார்த்தைகள் மூலம் கூறுகிற நூல் இது.      ஏன் இந்த புத்தகம் முக்கியம் பெறுகிறது என்றால், காந்தியின் கொள்கைகள் மற்றும் பேச்சுக்களவு தவறாக புரிந்துகொள்ளப்பட்டவையும், கைகழுவப்பட்டவையும் வேறெந்த தலைவருக்கும் நிகழ்ந்திருக்குமா என்று தெரியவில்லை.      காந்தி இந்நூலில் கூறும் கருத்துக்களை சூழல் பொறுத்து மாறுதலை செயல்படுத்துவது பற்றிக்கூறும் நெகிழ்வுத்தன்மையை கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் காந்தி தன் வாழ்வு முழுமைக்குமான ஆதாரமான ஒன்றாக கூறுவது தான் கடைசி மூச்சு வரைக்கும் நம்பிய கடைபிடித்த உண்மை ஒன்றையே. இந்நூல் முக்கியத்துவம் பெறுவதும் இந்த தன்மையினால்தான்.      நமக்கு நம்பிக்கை ஏற்பட பெரிய வார்த்தைகளினாலான விஷயங்கள் இல்லாமல் எளிமையாக காந்தியின் வார்த்தைகளிலிருந்து எடுத்து பயன்பட

நூல் வெளி

27 புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம் தமிழினி                                                      ஊருணி      புயலிலே ஒரு தோணி சாதாரணமாகவே வாசிக்க சற்று சவால் தரும் நாவல்தான். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தாவித் தாவிச்செல்லும் உத்தி படிக்க முதலில் திகைப்பானதாகவே உள்ளது. மெல்ல மலேசியா ட இந்தோனேஷியா போர்ச்சூழல் மனதிற்கு பழக்கமாகிறது.      சங்கப்பாடல்களோடான அத்தியாயங்கள் திரும்பத்திரும்ப வாசிக்கவேண்டும் என்று ஆவல் ஏற்படுத்துகின்ற ஒன்று. அதன் உட்பொருளை அறியும் பரபரப்பு மனதில் ஏற்படுகிறது. எள்ளல், அங்கதம் கடலுக்கு அப்பால் பகுதியில் குறைவு. முழுக்க புயலிலே ஒரு தோணி பகுதியில் நிறைந்திருப்பது பகடிகள்தாம்.      நாவல் வெளிவந்தபோது சிறிது புரியாமல் போயிருக்க வாய்ப்புண்டு. அதிக கவனமாக, கூர்மையாக வாசிக்காவிட்டால் பலவற்றையும் தவறவிடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.      பாண்டியன், மாணிக்கம், ஆவன்னா, நாவன்னா என பலரும் தமிழிலேயே சொல்விளையாட்டு விளையாடுவது சுவாரசியமான பகுதிகள். தமிழனின் இன்றைய பெருமைகளாக பேசும் பலவற்றையும் உடைத்து போடும் பாண்டியன் பேச்சில் கலகத்தின் அடர்த்தி ரசிக

நூல் வெளி

திசைகாட்டி எஸ்.வைதீஸ்வரன் நிவேதிதா பதிப்பகம்                                                                                                                                     அந்துவன்      அம்ருதா இதழில் நினைவோடை பகுதியில் எழுதிவரும் வைதீஸ்வரன் பக்கம் அவரது இளமைக்கால நினைவுகளை கூறும் பகுதியாக வசீகரிக்கும் தன்மை கொண்டது. அத்தகைய கட்டுரைகளைக் கொண்ட நூல்தான் இது.      இதில் பெரும்பாலும் கவிதை குறித்த பகுதிகள் அதிகம் என்றாலும், அதனினூடே கட்டுரை தன்   இளமைக்காலம், தன்பிறப்பு, பார்த்த படங்கள், கவிதைகள் குறித்த குறிப்புகள் கொண்ட புத்தகம் இது எனலாம்.      தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களின் குணவியல்பை கூறுவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், தான் படிக்கச்செல்லும் இடம் பற்றியும், அர்த்தமற்ற வார்த்தை என்ற கட்டுரையில் விடுதலை ஆகப்போகும் வயது முதிர்ந்த ஒருவனின் மனநிலையையும் நுட்பமாக சுட்டிக்காட்டுகிறார்.      பார்வையற்ற ஒருவர் குறித்த கட்டுரை அற்புதமாக உள்ளது. பார்வையற்ற மனிதரின் கவிதைதான் இந்த கட்டுரைத்தொகுப்பின் தலைப்பும் கூட.                            41 அவந்திகாவ