இடுகைகள்

வளையம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கார்பனை மரங்களால் உட்கிரகிக்க முடியாது!

படம்
  காடுகளால் உள்ளிழுக்கப்படும் கார்பன் அளவு! உலக நாடுகள் அனைத்துமே கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தொழில்துறை சார்ந்த கார்பன் வெளியீட்டைக் குறைப்பதோடு, மாசடைந்த காற்றிலிருந்து பசுமை இல்ல வாயுக்களை தனியாக பிரிப்பதும் முக்கியமானது. இதற்காக மரங்கள் உதவுகின்றன. ஒளிச்சேர்கை செயல்பாடு மூலமாக தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட்டை உள்ளிழுக்கின்றன. ஒளிச்சேர்க்கை செயல்பாடு வழியாக,கார்பன் எந்தளவு உள்ளிழுக்கப்படுகிறது, அதனால் கார்பன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதா என்பது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.  சூழலில் கார்பன் டை ஆக்சைட் நிரம்பியிருப்பது தாவரங்களுக்கு முக்கியம். அப்போதுதான், அதன் ஒளிச்சேர்க்கை நடைபெற முடியும். மனிதர்களின் செயல்பாட்டால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைட் அதிகரிப்பதும், அதனை தாவரங்கள் அதிகளவு உள்ளிழுக்கின்றன. இதற்கு, கார்பன் ஃபெர்டிலைசேஷன் (Carbon Fertilization)என்று பெயர்.  வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட் அளவு அதிகரிப்பது, தாவரத்தின் வளர்ச்சி வேகத்தை பாதிக்கிறது. வளர்ச்சி காலம் அதிகரிப்பதால், வளிமண்டலத்தில் க