இடுகைகள்

தானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வி, மனநலன் ஆராய்ச்சிக்கென தானமளிக்க தொடங்கியுள்ள தொழிலதிபர்கள்!

படம்
  Graeme hart rank group க்ரீம் ஹார்ட் தலைவர், ரேங்க் குழுமம் வயது 58 நியூசிலாந்து க்ரீம் ஹார்ட் இன்றைக்கு பல்வேறு பொருட்களை அடைத்து விற்கும் பேக்கேஜிங் பொருட்களை விற்கலாம். ஆனால், அவருக்கு ஒருகாலத்தில் பள்ளியில் படிக்கும்போது, பள்ளிப்படிப்பை தொடரமுடியாத பொருளாதார சூழ்நிலை இருந்தது. தற்போது பால் பாக்கெட், குடிநீர் புட்டிகள், காகிதம், அலுமினிய தாள் ஆகியவற்றை தயாரித்து வழங்கிவருகிறார். இவரின் சொத்து மதிப்பு 8.8 பில்லியன் டாலர்களாக உள்ளது.  அண்மையில் ஸ்டார்ஷிப் எனும் குழந்தைகள் மருத்துவமனைக்கு ஹார்ட், அவரது மனைவி ராபின் ஆகியோர் இணைந்து 3.8 மில்லியன் டாலர்களை தானமாக வழங்கியுள்ளனர். அந்த மருத்துவமனை தொடங்கி 32 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த மருத்துவமனைக்கு கிடைத்த தனிநபர் நன்கொடையில் இதுவே அதிகம். கிடைத்த நிதியில், தீவிரமாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை பராமரிக்கவும், செவிலியர்களுக்கு பயிற்சிகளை அளிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 2018ஆம் ஆண்டு, ஹார்ட் தம்பதியினர் 10 மில்லியன் டாலர்களை ஒடாகோ பல்கலைக்கழகத்திற்கு வழங்கினர். ஆக்லாந்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரிக்கு 28.2 மில்லியன்

வறுமையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிய தொழிலதிபர்!

படம்
 ரமோன் ஆங்க் அதிபர், இயக்குநர், மிகுல் கார்ப் வயது 69 பிலிப்பைன்ஸ்  Ramon ang miguel corp சுயம்பாக முளைத்தெழுந்த தொழிலதிபர். மணிலாவில் ஏழை குழந்தைகளுக்கு பள்ளி கட்டுவதற்காக ஒன்பது மில்லியன் டாலர்களை தானமாக வழங்கியுள்ளார். மதுபானம், உணவு, வங்கி, ஆற்றல், மின்சாரம், சாலை பராமரிப்பு நிறுவனங்களை ரமோன் நடத்தி வருகிறார். நாட்டின் வலிமையை, வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் மக்களின் கல்வி, திறன் அதிகரிக்கவேண்டும். வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மட்டுமல்ல வயது வந்தோருக்கும் கூட நல்ல பணி கிடைக்கவேண்டும். அல்லது அவர்கள் சுயமாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும். அதற்கான திறன்களை வழங்க முயல்கிறோம் என்று தான் வளர்ந்த டோன்டோ மாவட்டத்தில் பள்ளி வளாகம் ஒன்றைத் தொடங்கி வைத்து பேசினார்.  ரமோன், சான் மிகுல் பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் வழியாக பள்ளிகளைக் கட்டுவது, கோவிட் 19 நிவாரண நிதி, நகர ஆறுகளை தூய்மைப்படுத்துவது, கல்விக்கான உதவித்தொகை, மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. ஆர்எஸ்ஏ பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பிற்கும் கல்வி சார்ந்து நிதி நல்கையை கொடுக்கிறது.  -ஜேபி லீ கா ஷிங் மூத்

கல்வி, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கென வாரி வழங்கிய தொழிலதிபர்கள்!

படம்
  அள்ளிக்கொடுத்த கரங்கள் உலகிலுள்ள பெரும்பாலான தொழிலதிபர்கள் ஆண்டுதோறும் தங்களுடைய செல்வத்தில் குறிப்பிட்ட பகுதியை, தங்களுடைய அறக்கட்டளைக்கு ஒதுக்கி வருகின்றனர். பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குகிறார்கள். இதில் கணிசமான பகுதி கல்விக்கும், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கும் செல்கிறது. போர்ப்ஸ் இந்தியா ஆசியா பசிபிக் பகுதியில் இப்படி அள்ளிக்கொடுத்தவர்களைப் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் பதினைந்து பேர் இப்பட்டியலில் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.  ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் டாகேமிட்சு டகிஸாகி. இவர், 2.6 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தன்னுடைய பவுண்டேஷனுக்கு வழங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ, நிக்கோலா ஃபாரஸ்ட் ஆகியோர் 3.3 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தொண்டு நிறுவனமான மிண்டெரூவுக்கு வழங்கியுள்ளனர்.  பெரும்பாலான பணக்காரர்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்காக தங்களது செல்வத்தை தானமாக வழங்கியுள்ளனர். மிட்டியா குழும நிறுவனர், ஹே ஷியாங்ஜியான் 140 மில்லியன் டாலர்களை செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்ற ஆராய்ச்சிக்காக ஒதுக்கியுள்ளார். சீன

உறுப்புதான குற்ற கும்பலால் மனைவி, மகளை இழக்கும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் வாழ்க்கைக் கதை!

படம்
  ஜோசப்  மலையாளம்  இயக்குநர் - பத்மகுமார் இசை -ரஞ்ஜின் ராஜ்  வேலையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜோசப். கொலைகளை எளிதாக துப்பறிந்து கண்டுபிடிக்கும் திறமை கொண்டவர். இவருக்கு ஒரு மகள் உண்டு. மனைவி விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவரை மணந்துகொள்கிறார்.  ஜோசப்பிற்கு ஐந்து விசுவாச நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது மது அருந்திவிட்டு மலை உச்சியில் பாட்டு பாடிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். இங்கு ஒரு திருப்புமுனையாக ஜோசப்பின் மனைவி விபத்தில் சிக்குகிறார். மூளைச்சாவு அடைந்ததாக சொல்லி உறுப்பு தானம் செய்ய மருத்துவமனையில் கேட்கிறார்கள். முன்னாள், இந்நாள் கணவர்கள் இருவரும் ஒப்புதல் தருகின்றனர். ஆனால் முன்னாள் கணவரான ஜோசப்பிற்கு, ஸ்டெல்லா இறந்துபோனது வருத்தம் தருகிறது. அவர் இறந்துபோன இடத்திற்கு சென்று பார்த்து அது விபத்தல்ல கொலை என்று நண்பர்களுக்கு கூறுகிறார். யார் கொலையாளி,என்ன காரணம் என்பதை படம் நிதானமாக பேசுகிறது. இறுதியாக வரும் காட்சிகள் நெகிழ்ச்சியானவை. மனதை ரணப்படுத்துபவை.  படத்தின் தொடக்கத்தில் திலீஸ் போத்தன், அரசு அதிகாரி கொடுக்கும் மெடல் ஒன்றை வாங்குகிறார். அவர் நினைவுகளின்

தன் குடும்பத்தை வெட்டிக்கொலை செய்தவர்களை ரத்தப்பொரியலாக்கும் சென்னகேசவரெட்டி! - சென்னகேசவரெட்டி- விவி விநாயக்

படம்
                    சென்னகேசவ ரெட்டி   Director: V. V. Vinayak Produced by: Bellamkonda Suresh Writer(s): Paruchuri Brothers (dialogues) ரெட்டி குடும்பங்களுக்குள் நடக்கும் நீதி , அநீதி போராட்டம்தான் படம் .   கிராமத்தில் உள்ள பள்ளியில் சென்ன கேசவ ரெ ட்டியின் சிலை உள்ளது . அதனை பற்றி பிரார்த்தனை கூட்டத்தில் பெருமையாக சொல்லும் ஒருவர் , அவர் எங்கிருந்தாலும் திரும்ப நம் ஊருக்கு வருவார் என்கிறார் . அதேநேரம் பெரிய மாளிகை போன்ற வீட்டில் ஒரு போட்டோவை எடுத்துப் பார்க்கும் தேவயானியை , அவரது கணவர் அடித்து உதைக்கிறார் . அதில் இருப்பவர் வேறு யார் , சென்ன கேசவ ரெட்டிதான் . பிறகு கதை மும்பைக்கு செல்ல அங்கு அசிஸ்டெண்ட் கமிஷனராக தன் போக்கில் அரசியல்வாதிகளுக்கு போக்கு காட்டி நீதியை நிலைநாட்டும் அதிகாரி வேறு யார் பாலையாதான் . வாலிபராக இருக்கிறார் . இவரை கல்லூரியில் பார்க்கும் மருத்துவப்படிப்பு படிக்கும் பெண் தங்கள் ஊர் பெரியவருக்கு தகவல் சொல்ல , அவர் இவரைப் பார்க்க வந்து உண்மையைத் தெரிந்துகொள்கிறார் . ஆனால் அவர் யார் என்ற உ்ண்மையை சொல்லக்கூடாது என தங்கள் ஊரைச் சேர்ந்த பெர

கோவிட் -19 காலத்திலும் தானம் அளிப்பது குறையவில்லை, கூடியுள்ளது! - கிவ் இந்தியா சர்வே

படம்
            கோவிட் -19 பாதிப்பு மக்களை பிறருக்கு தானம் கொடுக்க ஊக்கம் கொடுத்துள்ளதை பெங்களூருவைச் சேர்ந்த கிவ் இந்தியா அமைப்பு தனது சர்வே மூலம் அறிந்துள்ளது.இப்போது அதற்கான டேட்டாவைப் பார்ப்போம். பிறருக்கு பொருட்களை வழ ங்குவதை கோவிட் 19 சூழல் ஊக்கப்படுத்தியுள்ளது என 85 சதவீதம் பேர் கூறியுள்ளனர். கோவிட் -19 இல்லாத விவகாரங்களுக்கு நிதியுதவி அளிக்கிறீர்களா என்று கேட்டபோது, 72 சதவீதம் பேர் அதற்கு ஆம் என்று பதில் அளித்துள்ளனர். 31 சதவீதம் பேர் முன்னர் தாங்கள் நிதியளித்த பல்வேறு விவகாரங்களுக்கு தொடர்ச்சியாக நிதியுதவியை நிறுத்தாமல் செய்து வருகின்றனர். இதில் 24 சதவீத மக்கள் தாங்கள் செய்துவந்த விவகாரங்களுக்கான உதவியை அதிகரித்துள்ளனர். 44 சதவீதம் பேர் தாங்கள் சமூக விஷயங்களுக்கு உதவுவது பற்றிய தெளிவான கருத்துடன் உள்ளனர். 74 சதவீதம் பேர் வெளிப்படையான தன்மையுடன் பணம் செலவிடப்படுவது தானம் அளிப்பதை ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ளனர். 49 சதவீதம் பேர் தாங்கள் சமூகத்திற்கு திரும்ப உதவிசெய்து நன்றிக்கடனை தீர்க்க நினைக்கிறார்கள் பிஸினஸ் ஸ்டாண்ர்டு கீதாஞ்சலி கிருஷ்ணா