இடுகைகள்

தனியார் பள்ளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் கல்வி சீர்திருத்தம் - கல்வியில் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு!

படம்
வாழ்ந்து கெட்டுப்போன நாட்டிற்கு அதன் கடந்தகாலமே எதிரி. சீனாவில் காலத்திற்கேற்ப கொண்டு வரப்படும் மாற்றங்களை தடுப்பதும் இப்படியான கடந்தகால பெருமைகள்தான். சீனாவில் குடி அரசு செயல்படுத்திய கல்வி சீர்திருத்தங்கள் நாட்டின் மேற்கு, மத்தியப் பகுதிகளில் உள்ள பள்ளியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. நகரம், கிராமம் ஆகியவற்றிலுள்ள மாணவர்களிடையே திறன் இடைவெளி அதிகரித்தது. அரசின் சீர்திருத்தம் அதை அடையாளம் கண்டு குறைக்கவில்லை. மேம்படுத்தவுமில்லை. சீனா, தனது சீர்திருத்தங்களுக்கு முன்னதாகவே தேர்வுமுறை, மதிப்பெண் என தனது நடைமுறை கல்விமுறையில் பிரச்னை இருப்பதை அடையாளம் கண்டுகொண்டது. பிறகே, மேற்குலக நாடுகளில் உள்ள கல்வித்தரத்தை புரிந்து அக்கொள்கைகளை நகல் எடுத்து தனது கல்விமுறையில் கொண்டுவர முயன்றது. தொடக்கத்தில் புதுமைத்திறனோ, கண்டுபிடிப்பு ஊக்குவிப்போ சீன கல்விமுறையில் கிடையாது. எனவே, மேற்கு நாடுகளிடமிருந்து இப்படியான புதுமையான அம்சங்களை கடன் பெற்றது. பாடத்திட்டங்களை ஆசிரியர்கள் ஏற்று புரிந்துகொண்டால் மட்டுமே அது மாணவர்களை சென்றடையும். ஆசிரியர்கள் சொல்லித்தருவதை மாணவர்கள் புரிந்துகொண்ட...