பசுமைக் கட்சியின் வரலாறு, பின்னணி, சாதக, பாதகங்கள் - க்ரீன்பாலிடிக்ஸ் - ஜேம்ஸ் ராட்கிளிப்
கிரீன் பாலிடிக்ஸ் டிக்டேட்டர்ஷிப் ஆர் டெமோகிரசி ஜேம்ஸ் ராட்கிளிப் மேக்மில்லன் பிரஸ் 235 பக்கங்கள் நூலில் மொத்தம் பதினொரு அத்தியாயங்கள் உள்ளன. அவை அனைத்திலும் ஏராளமான சூழலியலாளர்கள் கருத்துகள், பசுமைக் கட்சி அரசியல் அதிகாரத்தில் நுழைந்த வரலாறு, அதன் தேவை, அரசின் இயக்கம் என நிறைய விஷயங்களைப் பேசப்பட்டுள்ளது. இவ்வளவு தகவல்களா, சிந்தனைகளா அயர்ச்சியே ஆகிவிடுகிறது. பொதுவாக இடதுசாரிகளே, மெல்ல பசுமை சார்ந்து இயங்குவார்கள். பிறகு மார்க்சியத்தை மறுத்துவிட்டு முழுமையாக பசுமை அரசியலில் ஆலோசகர் அல்லது செயல்பாட்டாளராக, சிந்தனையாளராக மாறுவார்கள். சூழலியலின் அடிப்படை மார்க்சியத்திலிருந்தே தொடங்குகிறது. அதுவும் கூட வளமான மேற்கு நாடுகளில்தான் பசுமைக் கட்சிக்கு வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் சு ப உதயகுமாரன் போன்றோர் பசுமைக்கட்சி என தொடங்கினாலும் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. சூழல் கவனத்தை இங்கு அடிப்படையில் இருந்து தொடங்கவேண்டும். அப்படி தொடங்காமல் நேரடியாக அரசியல் கட்சி தொடங்கினால், அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. சர்வாதிகாரமா, ஜனநாயகமா என கேள்வி கேட்டு நூல் எழுதப்பட்டு இருந்தா...