விநோதரச மஞ்சரி தொகுப்பு 2: ரோனி ப்ரௌன்

விநோதரச மஞ்சரி தொகுப்பு: ரோனி ப்ரௌன் சோலார் பாண்டா ! குங்க்பூ பாண்டாவின் ரசிகர்கள் உலகெங்கும் இருப்பதில் என்ன தவறிருக்கிறது ? சீனாவில் மெகா பாண்டா உருவத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் மையம் அனைவரையும் கவர்ந்து வருகிறது . சீனாவின் தாடோங் பகுதியில் பாண்டா க்ரீன் எனர்ஜி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்களை விமானத்திலிருந்து பார்த்தால் மெகா பாண்டாவின் உருவம் வசீகரமாக ஈர்க்கிறது . ஐ . நா சபையின் க்ளீன் எனர்ஜி திட்டத்தின்படி அமைக்கப்பட்ட இந்த சோலார் பேனல் மூலம் 50 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் . அடுத்து பிலிப்பைன்ஸ் மற்றும் ஃபிஜி ஆகிய இடங்களில் 100 க்கும் மேற்பட்ட பாண்டா டிசைனிலான சோலார் பேனல்கள் உருவாக்கப்படுமாம் . பாண்டா தேசம் ! நேபாளத்தின் பெயரற்ற சிறுமி ! பைக்கில் நிற்கும் ட்ராஃபிக்கில் பிச்சை எடுக்கும் சிறுமி , டீக்கடையினருகில் கந்தலான சிக்குப்பிடித்த உடையில் அமர்ந்துள்ள மனிதர்களுக்கும் ஒரு கதை இருக்கும்தானே ! மும்பையின் பவுன்சி மேத்தா நேபாளத்தில் சந்தித்த சிறுமியின் கதையும் அப்படித்தான் . சில ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தில