ஜாலி பிட்ஸ் 1 - விக்டர் காமெஸி



ஸ்ட்ராபெர்ரி சாதனை!

105அடியில் நீளத்தில் தயாரித்த கின்னஸ் சாதனை ஸ்ட்ராபெர்ரி கேக் பற்றித்தான் பிரான்ஸ் எங்கும் நாக்கில் எச்சிலூறும் பேச்சு. 25 ஆம் ஆண்டு ஸ்ட்ராபெர்ரி திருவிழாவுக்கென ஸ்பெஷலாக 720 முட்டைகள், 440 பவுண்டுகள் ஸ்ட்ராபெர்ரி கொட்டித் தயாரிக்கப்பட்ட கேக்கை விற்று, அறக்கட்டளை நிதிக்கு காசு சேர்க்கப் போகிறார்களாம்.

கிழி..கிழி சுட்டி!
சீனாவின் ஷாங்டன் பகுதியிலுள்ள காவோ என்ற தொழிலதிபர் பேங்கில் கடன் வாங்கிய 5 லட்ச ரூபாயை சிம்பிளாக ட்ராயரில் வைத்ததுதான் அவர் செய்த தவறு. அடுத்த நாள் ட்ராயரை திறந்தால், அத்தனை நோட்டுகளும் துண்டுகளாக கிடந்தன. அவரின் செல்ல வாண்டுவின் பகீர் வேலைதான் இது. அவன் குழந்தை அவனுக்கென்ன தெரியும்? என இந்த அப்பாவின் பதில்.  

மாரத்தான் காதல்!

அமெரிக்காவின் ஓஹியோவில் நடந்த க்ளீவ்லேண்ட் மாரத்தானில் ஸ்டெபானியாவுக்கு  சர்ப்ரைஸ் பரிசு அது. மாரத்தான் ஓடி முடித்தவரிடம் டக்கென முழங்கால் மடித்து காதல் சொல்லிவிட்டார் பல்லாண்டுத்தோழர் டேன் ஹார்வத். மூச்சுவாங்க, மகிழ்ச்சியில் கண்கலங்க ஸ்டெபானியா ஓகே சொல்ல, பார்வையாளர்கள்  வாழ்த்துக்கள் சொல்ல, லைஃப் மாரத்தான் ஸ்டார்ட்

ஜியோ பானிபூரி!

ஜியோதான் அன்லிமிடெட் டேட்டா தருமா?. குஜராத்தின் போர்பந்தரில் ஜியோ ஐடியாவை சுட்டு நூறுரூபாய்க்கு அன்லிமிட்டெட் பானிபூரியை அள்ளித்தருகிறார் ராஜ் தக்தம்பா. தினசரி நூறு, மாதம் என்றால் ஆயிரம் ரூபாய் பிளான் வைத்திருக்கும் இவரது அன்லிமிடெட் பானிபூரி கடையின் பெயரும் ஜியோதான். இது ஜியோ பானிபூரி.

தண்ணீர் மனிதர்!

அரசின் ரயில் நீரே காசுக்கு விற்கப்படும் நிலையில் தண்ணீர் இலவசமா? யெஸ்.மத்திய பிரதேசத்தின் டாப்ரா ரயில்வே ஸ்டேஷன். தண்ணீர் பாட்டில் வாங்க சென்ற என்னை தடுத்து அந்த மனிதரே ஜன்னலில் கேனில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். பெயர் வேண்டாம் என்று கூறி தண்ணீர் தந்த மனிதரை நெஞ்சம் நெகிழ பாராட்டுகிறார் ரயில் பயணியான ராகவ் காகார். ஆனால் மறக்காமல் போட்டோ எடுத்துவிட்டார்

நன்றி: குங்குமம் வார இதழ்