இன்டர்வியூவில் பேசுவது எப்படி? - ஈஸி இம்ப்ரஷன் டிப்ஸ்!
இன்டர்வியூவில்
பேசுவது எப்படி?
- ஈஸி இம்ப்ரஷன் டிப்ஸ்! -ச.அன்பரசு
கனவு வேலைக்கான
அப்ளிகேஷனை அம்சமாக தயாரித்து, சுபமுகூர்த்தத்தில் தினத்தில் இன்டர்வியூ அழைப்பும்
வந்துவிட்டது. அதில் ஃபார்மலான பேச்சு தாண்டி நேர்காணல் செய்பவரோடு
செய்யும் ஜாலியாக மாட்லாடும் குட்டிப்பேச்சுகளும் சூப்பர் இம்ப்ரஷனை ஏற்படுத்தி உங்களுக்கான
வேலைக்கு கான்க்ரீட் கேரண்டி தரக்கூடும்.
தொடர்புகள் அவசியம்!
ஓட்டேரி நரி, கெடா குமார்
போன்ற உங்கள் லோக்கல் நட்புகளைத் தாண்டி வேலைக்கு புரஃபஷலான நிறுவன ஆட்களின் தொடர்பு
அவசியம் தேவை. ஹார்வர்ட் யுனிவர்சிட்டியில் ஆய்வு, நேர்காணல் செய்பவர்களோடு, பேசும் திறன் அவசியம் என்று
கூறுகிறது. எனவே நேர்காணல் செய்பவர்களின் சமூக கணக்குகளை ஃபாலோ
செய்தால் அவர்களிடம் பேசுவதற்கான ஐடியாவை பிடிக்கலாம்.
அப்டேட் சாதனைகள்
அவசியம்!
அந்த காலத்தில்... என ஜவ்வாக
இழுக்காமல் வேலையின் ட்ரெண்டை நூல்பிடித்து பேசுங்கள். நேர்காணல்
செய்பவர், குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரைகளை லிங்க்டு இன் தளத்தில்
ஷேர் செய்திருந்தால், பேசுவதற்கு வேறென்ன பாஸ் வேண்டும்?
டாபிக்கை எடுங்கள். அமர்க்களமான பேச்சில் உங்கள்
சாதனைகளையும் லைட்டாக கலந்து வசீகரமாக டிஸ்கஷன் செய்து குட்மார்க் வாங்குங்க.
கம்பெனியை தெரிஞ்சுக்கோங்க!
மூல பௌத்திர நோட்டீஸை
படிக்கும் ஆர்வத்தை கொஞ்சமே கொஞ்சம் செலவிட்டு, கம்பெனியின் புரொஃபைல் பற்றி ஏடூஇசட்
படித்துவிடுங்கள். கம்பெனி தனிப்பெருமையாக, பரம்பரை சொத்தாக நினைப்பது என்ன, ஹிட், ஃபிளாப் திட்டங்கள், ஃப்யூச்சர் பிளான்கள் என்று சமர்த்தாய் உள்வாங்கி
ஹோம்வொர்க் செய்தால் உங்கள் மீது ஹெச்ஆரின் கவனம் சூப்பராக ஃபோகஸாகும். வேலையும் கன்ஃபார்மாகும்.
நியூட்ரல் பேச்சு! நிச்சய
வெற்றி!
வேலை மீது எவ்வளவு
ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று நீங்கள் வெளிப்படுத்தினால்தானே மற்றவர்களுக்கு தெரியும். எனவே,
ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக பேசினாலும் கருத்தாக இருந்தால் ஓகே. எந்த டாபிக்காக இருந்தாலும் நியூட்ரலாக பேசுவது நல்லது. டி.ஆர். போல ஆவேச புலியாகி பேச்சில்
உணர்ச்சியை கொட்டினால், அந்த நிமிடமே வேலை காலி. கவனம் தேவை!
அனைவருமே முக்கியம்!
இன்டர்வியூ போகும்
ஆபீசின் செக்யூரிட்டி,
பார்க்கிங் அட்டென்டன்ட் முதற்கொண்டு புன்னகைத்து பேசலாம். வேலை கிடைத்தால் நாளை நீங்கள் பழகப்போவது அவர்களோடுதான் என்பதை மறக்காதீர்கள்.
மதிப்பளிப்பது, கவனிப்பது ஆகியவை எந்த இடத்திலும்
உங்களை சூப்பர் ஸ்பெஷலாக கவனிக்க வைக்கும். இன்டர்வியூக்கு முன்னதாக
பேசும் வெட்டிப்பேச்சு என்று அலட்சியம் காட்டாதிருந்தால் எளிதில் வேலையை கைவசப்படுத்தலாம்.
நன்றி: தினகரன் கல்வி வேலைவாய்ப்பு மலர்