ஜாலி பிட்ஸ் 2 - விக்டர் காமெஸி




ஜாலி பிட்ஸ் -விக்டர் காமெஸி 



லைசென்ஸ் இல்லாத பார்பி ஜீப்!

கலிஃபோர்னியாவின் ஹன்டிங்டன் பீச். க்யூட் பார்பி ஜீப்பில் ரவுண்ட் அடித்த டேவி(3) என்ற சுட்டியிடம் லைசென்ஸ்,ஆர்.சி.புக் கேட்டு பீதி கிளப்பியிருக்கிறார் ஆபீசர் ஒருவர். சுட்டியின் தாய் பலமுறை கேட்டும் பெயரைச் சொல்லாமல் எஸ்கேப்பாகிவிட்டார் ஆபீசர். கமிஷன் கேட்கலியா?

சொதப்பிய ஏடிஎம் கொள்ளை!

அமெரிக்காவின் வாஷிங்டனின் எவரெட்டில்  நடந்த ஃபிளாப்பான கொள்ளை அது. கோஸ்டல் வங்கியின் ஏடிஎம் ஸ்டீல் தகடுகளை நெருப்பு மூலம் திருடர்கள் உடைத்தார்கள். ஜஸ்ட் மிஸ்ஸாகி ஸ்டீலோடு சேர்ந்து கரன்சியும் சாம்பலாகி போனது திருடர்களுக்கே செம ஷாக். தற்போது அந்த டுபாக்கூர் திருடர்களை போலீஸ் தேடிவருகிறது.

சர்ச்சையில் பிரமாண்ட தவளை!

டெக்சாஸின் அசல் வேட்டைக்காரரான மார்க்கஸ் ராங்கெல்லிடம் சிக்கியுள்ளது பிரமாண்ட தவளை. சிங்கத்தை பிடித்துவிட்டது போல மார்கஸ் போஸ் கொடுக்கும் படத்திலுள்ள தவளையின் சைஸ், படத்தில் பார்ப்பது போல் பெரியது அல்ல என சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. படேஸ்வில்லே பகுதியில் பிடிபட்ட மெகா புல்ஃபிராக் தவளையின் எடை 13 பவுண்டுகள்.


ட்ரெயினில் பட்டம் பெற்ற மாணவர்!

நியூயார்க்கின் ஹன்டர் கல்லூரி மாணவர், ஜெரிச் மார்கோவுக்கு, அன்று படிப்பு முடிந்து டிகிரி வாங்கும் நாள். ஆனால் 45 நிமிடம் ட்ரெயின் லேட்டானதால், அவருடைய நண்பர்களோடு இணைந்து ட்ரெயின் கம்பார்ட்மெண்டிலேயே அங்கேயே பட்டம் வாங்கும் ஃபங்ஷனை நடத்தி பெற்றோர்களிடம் ஆசி பெற்றுவிட்டார். டைமிங் முக்கியம்.

மெகா பீச்பால்!


பட புரோமோஷனுக்கு சாதாரணமாக எல்லோரையும் கூட்டி ஃபங்ஷன் வைப்பார்கள். ஆனால் அண்மையில் பேவாட்ச் படத்திற்காக பாரமவுண்ட் நிறுவனம் லண்டனில் மெகா சைசில் பீச்பால் ஒன்றையே உருவாக்கினர். அதன் மெகா சைஸ், கின்னஸ் சாதனையில் இடம்பெற உதவியிருக்கிறது. லண்டன் முழுக்க இப்போது பீச்பாலைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது.  எல்லாம் ஒரு விளம்பரம்தான்! 

திருடனுக்கு தண்டனை!

தைவானைச் சேர்ந்த லீவெய் சின்னின் வீட்டில் ஒரே ஒரு எலியினால் பெரும் தொல்லை. டெக்னிக்காக பொறிவைத்து பிடித்தவர், நுணுக்கமாக விலங்குகள் தயாரித்து அதில் எலியை பிணைத்து பீதியூட்டியிருக்கிறார். சோஷியல் தளங்களில் எலியை விட்டுவிட கருணைமனு குவிய, பிறகு எலியை மன்னித்து வெளியே விட்டுவிட்டாராம். எலியானாலும் குற்றம் குற்றமே!

கோமாளி கடத்தல்!

திருட்டு சீரியசாகத்தான் நடக்கவேண்டுமா என்ன? ஸ்பெயின் எல்லைப்புற போலீசுக்கு, அந்த மனிதரின் இடுப்புக்கு கீழே விகாரமாய் துருத்திய பொருளின் மீது சுனாமி டவுட். ச்சீ என எப்படி விடுவது? என கறாராய் சோதித்ததில், டவுட் மனிதரின் இடுப்பிலிருந்த அரைக்கிலோ கோகைனோடு அப்பாவி மனிதரும் மாட்டிக்கொண்டுவிட்டார். கிளி சிக்கிக்கிச்சு.

குடும்ப நிகழ்ச்சியில் கவர்ச்சி!

இங்கிலாந்தின் பிரிட்டன் காட் டேலண்டுக்கு(2007) வாண்டுகள் டூ தாத்தா வரை ஃபேன்ஸ் உண்டு. அதில் அரையிறுதியில் நடுவரான  அமண்டா, கிளுகிளு கவுனில் நிகழ்ச்சிக்கு  வந்து ரசிகர்களுக்கு கொடுத்தது ஏகபோக கிளாமர் ட்ரீட். ஆனால் பலரும் ஃபேமிலி நிகழ்ச்சியில் இப்படியொரு டிரஸ்ஸா என கொந்தளிக்க, சர்ச்சையானாலும் நிகழ்ச்சி ஹிட்.

பாம்பாட்டியின் பகீர் பலி!

ஜார்கண்டின் சேரைக்கேலா-கார்ஸ்வான் மாவட்டத்தைச் சேர்ந்த பாம்பாட்டி பாடோய் காலிண்டிக்கு குழந்தைகள் மீது  ஆசை. அதைப்பெற முயற்சித்த வழிதான் பகீர் ரகம். தனக்கு குழந்தை பிறக்க, பக்கத்து வீட்டுக்காரரான சுபாஷின் குழந்தையை தயங்காது நரபலி கொடுத்துவிட்டார் பாடோய். அப்புறம்? தற்போது ஜெயிலில்தான் சாருக்கு சோறு.


சேற்று வயலில் கோல்ஃப்!

அயர்லாந்தின் ட்ராகர் ஷியாகன் தீவிர கோல்ஃப் வெறியர். எஸ்கர் ஹில்லிலுள்ள கோல்ஃப் மைதானத்தில் அவர் தூக்கியடித்த கோல்ஃப் பந்து, நேராக ஏரி அருகேயிருந்த சேற்றில் லேண்டானது. சற்றும் மனம்தளராத ட்ராகர், பந்தை அடிக்க முயன்று சேற்றை தூர்வாரும் வீடியோ சோஷியல் சைட்டில் செம ஹிட்.   

 போலீசுடன் ஜாலி விளையாட்டு!

அயர்லாந்தின் ஹென்றி தெருவில்தான் நடந்தது அந்த விநோத கால்பந்து போட்டி. கார்டா ஓ கனல் என்ற போலீஸ்காரரும், லிமெரிக் சர்ச்சின் கன்னியாஸ்திரீயும் 'கீப்பி அப்பி' என்ற பெயரில் விளையாடிய ஸ்ட்ரீட் கால்பந்து மேட்ச் வீடியோதான் மாஸ் ஹிட்அசத்தலான மேட்சில் பந்து பவுன்ஸாகி அடுத்த தெருவுக்கு எகிறியதால் ஜெயித்தது யார் என்று தெரியவில்லையாம்.

டாய்லெட் பேப்பரில் ட்ரம்ப்!

உலகில் பலருக்கும் கிண்டலுக்கு சுண்டல் என்றால் அது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான். மெக்சிகோவின் பிசினஸ் மனிதரான அன்டானியோ பட்டாகிலியா வேறு ரகம். அதிரடியாக ட்ரம்பை நக்கலடித்து டாய்லெட் பேப்பரே தயாரித்துவிட்டார். 'அகதிகள் பயன்படுத்தலாம். இதன் மென்மைக்கு எல்லையே கிடையாது' அதன் கவர் வாசகங்களிலேயே திகுதிகு பாலிடிக்ஸ் அதிகம். பார்டர் தாண்டியும் அவமானம்!

அழகின் பெயர் லில்லி!

ரஷ்யாவின் டாட்டர்ஸ்டன் பகுதியைச் சேர்ந்த லில்லி விடோக்கின் லில்லி லோ எனும் வீடியோ மேக்கப் டுட்டோரியல்களுக்கு 13 மில்லியன் பார்வையாளர்கள். தன் 7 வயதில் மெக்யூன் ஆல்ப்ரைட் எனும் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்ட லில்லியின் முகம் சிதைந்தாலும், பிறருக்கு நம்பிக்கை தரும் வீடியோக்களை உருவாக்கி ஏராள விருதுகளை அள்ளி வருகிறார்.  

ஷார்ட்ஸூடன் ஆஹா கல்யாணம்!

கனடாவில் நடந்த சீக்கிய மேரேஜ் அது. வந்திறங்கிய மணப்பெண்தான் பலரையும் தேனடையாய் ஈர்த்தார். கிளுகிளு அழகா? இல்லை. அணிந்திருந்த நைக்கின் குட்டை ஷார்ட்ஸ்தான் காரணம். திருமணவிழாவில், ஷார்ட்ஸ் அணிந்து பங்கேற்ற மணப்பெண்ணை ட்விட்டரில் பலரும் டெய்லர் ட்ரெஸ் தரலியா? மேரேஜ் முடிஞ்சதும் ஜிம்முக்கா? என குஷியாக அட்மிட் செய்து கலாய்த்து வருகிறார்கள்

நன்றி: குங்குமம் வார இதழ்


    

  
   

பிரபலமான இடுகைகள்