குங்குமம் பிட்ஸ் 4 !- விக்டர் காமெஸி



குங்குமம் பிட்ஸ்!- விக்டர் காமெஸி


1.பேலன்ஸ் செய்யும் நாய்கள்!

 டெல்லியின் விகாஸ் மார்க்கில் இரண்டு நாய்களை பின் சீட்டிலும் ஒரு நாய் முன்னேயும் வைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் சர்தார்ஜி பெருசு ஒன்று சீறிப்பாயும் வீடியோதான் இன்று மெர்சல் வைரல். ஒருதுளி கூட கால் தவறாமல் பயணிக்கும் நாயின் துணிச்சல் அளிப்பது செம பீதி.

2.ப்ரூஸ்லீ போலீஸ்!
கரப்பான் பூச்சிக்கெல்லாம் பிரேக் டான்ஸ் ஆடி பீதியானால் எப்படி இன்டர்நேஷனல் போலீஸ் ஆவதாம்? ஃபேஸ்புக் வீடியோவில் ஆமையைப் பிடித்து பெட்டிக்குள் போட முயற்சித்து போலீஸ் ஒருவர் பீதியாகி ஆடிய கராத்தே கபடிதான் இணையத்தில் அமேசிங் வைரல். 13 மில்லியன் பேர் இதனை ரசித்துள்ளனர். காமெடி துரை சிங்கம்! 

3.ஒரே வாரத்தில் ரெண்டு லாட்டரி!

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டீன்ஏஜ் லேடி ரோஸா டோமிங்யூஸ், அரிசோனா போகும் வழியில் வாங்கிய லாட்டரிக்கு 5 லட்சம் டாலர்கள் ஜெயித்தது அதிர்ஷ்டம் என்றால், க்ரீன்பீல்டில் வாங்கிய லாட்டரிக்கு கிடைத்த பரிசு எவ்வளவு தெரியுமா? 1 லட்சம் டாலர்கள்! கரன்சி வேட்டை!


4.பாட்டியின் பரவச டான்ஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸின் கான்சாஸ் நகரில் லாஸ் ஏஞ்சல்ஸ், கான்சாஸ் சிட்டி என இரு டீம்களுக்குமான பரபர பேஸ்பால் போட்டி. மேட்ச் பரவசத்தில் எழுந்த பாட்டி போட்ட குத்து செம மாஸாகி அனைவரும் ரசிக்க, திடீரென டீஷர்டை கழற்றிப்போட்டு உள்ளாடையோடு ஆடத்தொடங்கினார் பாட்டி. மெகா ஸ்க்ரீனில் டான்ஸ் ஒளிபரப்பாக, 42,225 ஆடியன்ஸ் நிறைந்த மைதானமே சிரித்துவிட்டது.

5.மிளகாய் தந்த இளமை!

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த மரியா லோபஸ் தன் பர்த்டேவை வீட்டருகே இருந்த கஃபேயில் கொண்டாடினார். வயது ஜஸ்ட் 110 தான். எப்படி? பர்கர், பன், பட்டர்பிஸ்கட் என அனைத்துக்கும் சூடான மிளகாய் சாஸ், பெப்பர் மட்டும் தடவி ஸ்பைஸியாக லபக்குவதுதான காரணம் என்பது மகள் ரோஸ்மேரி வாக்கு.

6.இந்துக்களை காப்பாற்றிய முஸ்லீம்!

அமர்நாத் யாத்திரைக்கு பஸ்ஸில் சென்ற 56 பக்தர்களை இரவு 9.30 க்கு ஆனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் திடீரெனத் தாக்க, பஸ்ஸை பிரேக் போடாமல் தொடர்ந்து ஓட்டிச்சென்று 49 உயிர்களை பலியாகாமல் காப்பாற்றி அனைவருக்கும் கடவுளாகியிருக்கிறார் முஸ்லீம் டிரைவர் ஷேக் சலீம்.


ஒரே கண்ணில் 27 லென்ஸ்கள்!

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணிக்கு திடீர் கண் வறட்சி, உறுத்தல். டாக்டர் செக் செய்தபோது, அவரின் கண்ணில் மீன்வலைபோல பின்னிக்கிடந்தது ஒன்றல்ல இரண்டல்ல, மொத்தம் 27 கான்டாக்ட் லென்ஸூகள். அம்மணி டாக்டரிடம் செக்அப்புக்கு போய் 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறதாம்.

ஹஸ்பெண்டுகளை காப்பாற்றும் சீனா மால்!

சீனாவின் குளோபல் ஹார்பர் மாலில் ஷாப்பிங் செய்ய லேடீஸூடன் வரும் கணவர்களுக்கு போரடிக்காதிருக்க, கம்மி ரூபாயில் ஹஸ்பண்ட் பாட் எனும் கேம் விளையாட்டு அறை ரெடியாகியுள்ளது. சீட் சூடாகுது, ஏசிபோடுங்க என சில கணவர்கள் மனு கொடுத்துள்ளனர்.

மானைக் காப்பாற்றிய நாய்!

நியூயார்க்கைச்சேர்ந்த மார்க் ப்ரீலே, பீச்சில்  தன் கோல்டன் ரெட்ரீவர் இன நாயுடன் ஹாயாக நடந்தபோது, திடீரென கடல் நீரில் தத்தளித்த மானின் அபயக்குரல் கேட்க, மார்க்கின் நாய் யோசிக்காமல் கடலில் குதித்து நீந்தி மானைக் காப்பாற்றியுள்ளது. தற்போது காப்பகத்தில் ரெஸ்டில் உள்ளது மான்.

கரடிபொம்மைக்கும் தடை!

டிஸ்னி அனிமேஷனில் கார்டூனில் புகழ்பெற்ற வின்னி தி பூ என்ற கரடிக்கு சீனாவில் திடீர் தடை. சீன அதிபர் ஜிங்போவையும் இந்த கரடியையும் இணைத்து எக்கச்சக்க மீம்ஸ் வெளியானதால் சீன அரசு இந்த தடையை இன்ஸ்டன்டாக விதித்துள்ளது. இனி அதிபரைப் பற்றி நோ பேச்சு!

 போலீசிடம் குளறுபடி புகார்!

ப்ளோரிடாவின் ஓகலூசா கவுன்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த டேவிட் பிளாக்மோன் என்பவர், தன் காரில் திருடுபோன பொருள் குறித்து புகார் கொடுத்தார். உடனே போலீசார் அவரை அரஸ்ட் செய்து லாக்கப்பில் தள்ளிவிட்டனர். ஏன்? காரிலிருந்த கோகைன் போதைப்பொருளை காணோம் என கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கிறார் டேவிட். சூப்பர் ஐடியா!

மின்சாரவாரியத்தில் குரங்கு விளையாட்டு!

ஆப்பிரிக்காவின் ஸாம்பியாவில் திடீரென 50 ஆயிரம் வீடுகளுக்கு பவர்கட். கரண்டை போடுங்க சார் என மின்வாரியத்துக்கு போன் செய்தால், குரங்கை ஹாஸ்பிடல் அனுப்பியிருக்கிறோம் என்று பதில். என்ன ஆச்சு? பபூன் குரங்கு மின்வாரியத்தின் ஒயர்களை பிடுங்கி எறிந்து விளையாடியதில் குரங்குக்கு பரிசு, ஐசியூ ட்ரீட்மெண்ட். மக்களுக்கு இருட்டு.

ஆபீசை உடைத்த ஆடு!

அமெரிக்காவின் லூயிஸ்வில்லேவிலுள்ள அர்கானிக்ஸ் கம்பெனி. மேனேஜர், காலையில் நிறுவனத்தின் டோரைப் பார்த்தவுடன் கொள்ளையோ என பதறிப்போனார். பின்னே கதவு சில்லுசில்லாக உடைக்கப்பட்டிருந்தால்  எப்படியிருக்கும்செக்யூரிட்டி வீடியோ பார்த்தால், கூட்டமாக வந்த ஆடுகளில் ஒன்று மட்டும், கம்பெனியின் கிளாஸ்டோரை கடமை தவறாது முட்டி உடைத்தெறிந்தது தெரிய வந்திருக்கிறது.

வேலை செய்யும்போது ஹெல்மெட்!

வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் ஓகே. ஆபீசில் வேலை செய்யும்போது எதற்கு ஹெல்மெட்? பீகாரின் பத்திரப்பதிவு அலுவலகம் ஒன்றில்தான் அத்தனை ஆபீசர்களும் ஹெல்மெட் போட்டு வேலை செய்கின்றனர். ஏன்? அலுவலகத்தின் சீலிங் உடைந்து தண்ணீர் மழைச்சாரல்களாக தலைமீது கொட்டுகிறதாம். அதிசய இந்தியா!
 


  




  நன்றி: குங்குமம் பிட்ஸ் 

பிரபலமான இடுகைகள்