பசுமை பேச்சாளர்கள் 13 வில்லியம் மெக்டோனஹ் ச.அன்பரசு





பசுமை பேச்சாளர்கள் 13
வில்லியம் மெக்டோனஹ்
.அன்பரசு

அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் மெக்டோனஹ் முக்கியமான சூழலியல் கட்டுமான கலைஞர், ஆலோசகர், எழுத்தாளர்.

ஜப்பானின் டோக்கியோவில் 1951, பிப்.20 அன்று பிறந்த வில்லியம், டர்த்மவுத் கல்லூரியிலும் பின்னர் யேல் பல்கலையிலும் தன் படிப்பை நிறைவு செய்தார். 1981 ஆம் ஆண்டு தான் கற்ற கட்டுமான கலையில் பயிற்சியைத் தொடங்கினார்.
 பசுமை கட்டிடங்களை உருவாக்குவதே வில்லியமின் லட்சியம். இதனை அவர் நைக், கேப், ஹெர்மன் மில்லர் ஆகிய நிறுவனங்களுக்கு வடிவமைத்த அலுவலகங்களின் அமைப்பிலிருந்தே அறியலாம்

William Mcdonough + Partners எனும் வில்லியமின் நிறுவனம் பசுமை கட்டுமானங்களில் முதலிடம் வகிக்கிறது. வர்ஜீனியா, சான் ஃபிரான்சிஸ்கோ, சார்லாடெஸ்வில்லே ஆகிய இடங்களில் இவரது நிறுவனம் செயல்படுகிறது. வர்ஜீனியா பல்கலையின் கட்டுமானத்து தலைவராக செயல்பட்ட இவர், தன் செயல்பாட்டிற்காக, அதிபர் விருது(1996), டைம் இதழில் பிளானெட் ஹீரோ(1999) அங்கீகாரத்தையும் பெற்றார்.மிச்சிகனிலுள்ள ஃபோர்டு தொழிற்சாலையை பசுமை கட்டிடமாக மாற்றியது தனித்துவ சாதனை. கழிவு என்பது இயற்கையில் கிடையாது என்பவர் பிளாஸ்டிக், கார்பன் என அனைத்தையும் மறுசுழற்சி செய்யமுடியும் என செய்தே காட்டியவர். "கட்டுமானத்தில் கெடுதலை ஏற்படுத்தும் தன்மையை குறைப்பதே லட்சியம்.ஆற்றல் குறைபாடு என்பதே போலியான பேச்சு. சூழலுக்கேற்ப பொருளை கையாள்வது தெரியாததன் விளைவே இந்த சிக்கல்என பளிச் உண்மை பேசுகிறார் வில்லியம் மெக்டோனஹ்

 இயற்கையான காற்றோட்டம், சூரியவெளிச்சம், ஆற்றலை சேமிக்கும் கருவிகள் என இன்ச் பை இன்ச் செதுக்கி பசுமை கட்டிடங்களை உருவாக்கும் அழகே தனி. சூழல் கட்டிடங்கள் குறித்த கட்டுரைகளை தி கார்டியன், ஹஃப்பிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்தார் வில்லியம் மெக்டோனஹ். "கார்பன் அதிசயமான ஒரு பொருள். உங்களுக்குள்ளும  எனக்குள்ளும் கூட கார்பன் உண்டு. காற்றிலுள்ள கார்பனை நச்சு என கூற காரணம், அதனை தவறான இடத்தில் வைத்ததுதான்" என சூழலியலை வேறுபட்ட கோணத்தில் பார்க்கும் பார்வைதான் வில்லியமை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி உயரிய அங்கீகாரங்களை பெற்றுத்தர காரணமும் கூட.  

நன்றி:முத்தாரம் வார இதழ்





பிரபலமான இடுகைகள்