நேர்காணல்: பேரி W. ஃபிட்ஸ்ஜெரால்டு, டெல்ஃப்ட் யுனிவர்சிட்டி.




நீங்களும் சூப்பர் ஹீரோ ஆகலாம்!
நேர்காணல்: பேரி W. ஃபிட்ஸ்ஜெரால்டு, டெல்ஃப்ட் யுனிவர்சிட்டி.
தமிழில்: .அன்பரசு

டெல்ஃப் பல்கலையின் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளரான பேரி ஃபிட்ஸ்ஜெரால்டு சூப்பர் ஹீரோக்கள் பற்றிய புத்தகம் எழுதியதோடு, அவர்களின் சூப்பர் பவர் குறித்த பத்திரிகை ஒன்றையும் தொடங்கவிருக்கிறார். அதில் மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள், பொறியியல் ஆகியவை மக்களுக்கும் சூப்பர்ஹீரோ சக்தியை கொண்டுவந்து சேர்க்கும் என என நம்புகிற வித்தியாசமான ஆராய்ச்சியாளர் இவர். தகவல் தெரிந்ததும் உடனே மிஸ்டுகால் கொடுத்து எடுத்த பேட்டி இது.







சூப்பர்ஹீரோ பற்றிய ஆராய்ச்சியில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

நான் தீவிர காமிக்ஸ் விசிறியெல்லாம் கிடையாது. 1985 ஆம் ஆண்டு சூப்பர்மேன் படம் பார்த்தேன். பறப்பது, சுவர்களை லேசரால் துளைப்பது என அந்த வயதில் எனக்கும் சூப்பர்பவர் தேவை என நினைக்க வைத்த படம் அது. அதன்பின் பேட்மேன்(1980), எக்ஸ்மேன்(2000) ஆகிய படங்கள் மனிதர்களுக்கு இந்த அபூர்வ சக்தி இருந்தால் நன்றாயிருக்குமே என பேராசைப்பட வைத்தன. அப்போது லீமெரிக் பல்கலையில் அப்ளைடு பிசிக்ஸ் படித்துக்கொண்டிருந்தேன். விரைவிலேயே அதுபோன்ற சூப்பர் பவர் மனிதர்களுக்கு சாத்தியமாக என கேள்வி எனக்குள்ளே வர ஆரம்பித்துவிட்டது. கேள்விகள், அதற்கான பதில்கள் என ஆராய்ச்சி செய்து தேட ஆரம்பித்த அந்த பயணத்தைப் பற்றி எழுதிய புத்தகம்தான் Secrets of Superhero Science,    
சூப்பர் பவர் குறித்த பத்திரிகையின் தேவை என்ன?

சூப்பர்மேன்களின் அத்தனை சக்திகளுக்கும் அடிப்படை அவர்களின் டிஎன்ஏதான். எனவே நான் படித்த இயற்பியலோடு உயிரியலையும் கற்கத் தொடங்கினேன். .கா:மரபணு தொகுப்பு, புரதம் தயாரிப்பு. மனிதர்கள் சூப்பர் மனிதர்களாக மாற இந்த விஷயங்களை கற்பதைத் தவிர வேறு வழியில்லை. சூப்பர்ஹீரோ பத்திரிகையில் நீங்கள் புதிய ஆராய்ச்சிகளை மக்களுக்கு புரியும் மொழியில் வெளியிடமுடியும். பெரும்பாலான பல்கலைக்கழக இதழ்கள் கடின மொழியில் திருகலாக இருக்கும். ஆனால் எங்கள் இதழ் அறிவியல் முயற்சிகளின் விமர்சனமாக சிம்பிள் மொழியில் மக்களை உடனே சென்றுசேரும்வகையில் இருக்கும். அறிவியல் பின்புலம் கொண்ட என் பெற்றோர்களே இதழை வரவேற்றனர் என்பதே எனக்கு பெருமை.

சூப்பர்ஹீரோ படங்கள் எப்படி விஞ்ஞானிகளுக்கு உதவும்?

உலகிலுள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும் என்பதே என் கனவு. உலகில் சூப்பர்மேன், பேட்மேன் படங்களை பார்க்காதர்களோ, அறியாதவர்களோ இருப்பது அரிது. சூப்பர் ஹீரோ விஷயங்களை ஆராய்ச்சியில் இணைத்தால் இன்னும் பலகோடி மக்கள் அதில் கவனம் செலுத்து படிப்பார்கள் என்ற அம்சம் இருக்கிறதே!

தினசரி வாழ்க்கையில் சூப்பர் பவர் மக்களுக்கு கைவசமாகும் என நம்பலாமா?

இது இன்ஸ்டன்ட் மக்களின் காலம். ஆனால் சூப்பர் பவர் மக்களுக்கு கிடைக்க சிறிது காலம் தேவை. யார் கண்ணுக்கும் தெரியாத உடை பற்றி ஆராய்ச்சி ரோச்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் 2014 ஆம் ஆண்டிலிருந்து 4 லென்ஸ்களை ஆராய்ச்சி செய்து நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சிக்கு அமெரிக்க ராணுவம் உதவி செய்கிறது. இன்று அந்த உடையில் சில தடைகள் இருந்தாலும் நாளை இது சாத்தியமாகும். அயர்ன்மேன் உடைகளோ, கண்களில் வைக்கும் அதிநவீன லென்ஸ்களோ அவை இருக்கலாம்.

நன்றி - முத்தாரம் வார இதழ்