ஜாலி பிட்ஸ் 7 - விக்டர் காமெஸி


ஜாலி பிட்ஸ் 7 - விக்டர் காமெஸி




ஜப்பானின் பூனை கஃபே!

ஜப்பானின் ஓஹாகி டூ இல்கெனா வரையிலான ரயில் தடத்தில் ரயிலில் திடீரென பூனை கஃபே உதயம். 30 பூனைகள் செய்த குறும்பில் பயணிகள், உற்சாகமாகி நெகிழ்ந்து போனார்கள். ஆதரவற்ற பூனைகளுக்கு ஆதரவு தரும் விதமாக யோரோ ரயில் நிலையத்துடன் பூனைகள் காப்பகம் ஒன்று இணைந்து செய்த ஒருநாள் நிகழ்ச்சி இது.

போர்வெல் விளக்கு!

கர்நாடகாவின் விஜயபுரா நகரில் போர்வெல்லில் டார்ச் தவறிவிழுந்துவிட்டது. அப்படியே விட முடியுமா? என எடுக்க முயற்சித்தார் மிஸ் செய்த வாலிபர். அவரது நண்பர் குழு அதற்கு செய்த ஹெல்ப் ஆசம். அப்படியே நண்பரை தலைகீழாக கால்களை பிடித்து போர்வெல் குழியில் இறக்கி சகாயம் செய்த வீடியோ ஸ்லீப்பர் ஹிட்.

மெட்ரோவில் மங்கி!

ஜில் ஏசியில் மெட்ரோவில் செல்ல யாருக்குத்தான் பிடிக்காது! குரங்குகளுக்கும் மனிதர்களுக்கு நிறைய விஷயங்கள் தாறுமாறு தகராறாக இருந்தாலும் ட்ராவல் என்பது இருவருக்கும் பிடித்தமானதுதானே! டெல்லியில் மெட்ரோ ரயிலில் குரங்கு ஆசையாய் பாய்ந்து ஏறி பயணித்த வீடியோதான் இன்று செம ஹாட் வைரல்.

நீளக்கால் அழகி!

ரஷ்யாவைச் சேர்ந்த மாடல் அழகி இகாடரினா லிசினா நீளக்கால் அழகியாக கின்னஸ் புகழ் பெற்றிருக்கிறார். இருகால்களின் அமேசிங் நீளம் 132 செ.மீ. சாதனை ஓகே. பிராக்டிகலாக அம்மணி சைசுக்கு செருப்பே கடையில் கிடையாது. காரில், விமானத்தில் உட்கார்ந்து போவதும் கஷ்டமாக இருக்கிறது என அலுத்துக்கொள்கிறார் அழகி.

நன்றி: குங்குமம் வார இதழ்