ஜாலி பிட்ஸ் 6 - விக்டர் காமெஸி


ஜாலி பிட்ஸ் - விக்டர் காமெஸி


நீலநாய் மர்மம்!

மும்பையின் தலோஜா பகுதியில் திடீர் பரபரப்பு. பின்னே தெருவில் இருந்த அத்தனை நாய்களும் ப்ளூ கலரில் இன்ஸ்டன்டாக மாறினால் எப்படி?தொழிற்சாலை கழிவினால்தான் நாய்கள் இப்படி மாறின என மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பெட்டிஷன் சென்றுள்ளது.

பிரமாண்ட திருட்டு!

இங்கிலாந்தின் ஹாட்டோனிலுள்ள ஏடிஎம் ஒன்றை நீட்டாக கொள்ளையடித்து வண்டியில் அட்டாச் செய்து, போலீஸ் வருவதற்குள் சிட்டாக பறந்துவிட்டனர் அசகாய திருடர்கள். கட்டிடத்தை உடைக்க யூஸ் செய்த பொருட்கள் அனைத்தும் செம காஸ்ட்லி.

பாரம்பரிய டான்ஸ் சாதனை!

இந்தோனேஷியாவில் கயோ லூசிலுள்ள தவுசண்ட் ஹில்ஸ் கிரவுண்டில்தான் பாரம்பரிய சாமன் டான்ஸ் சாதனை. 10,001 டான்ஸர்கள் இணைந்து உலகசாதனைக்காக இந்த டான்ஸ் முயற்சி. இதற்கு முந்தைய சாதனை, 2014 ஆம் ஆண்டில் 5,057 சாமன் டான்ஸர்கள் பங்கேற்று ஆடிய டான்ஸ்தான்.

கங்காருவின் பன்ச்!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னிலுள்ள கிளென் வேவர்லி பார்க்தான் கங்காருக்கு செம கோபம் வந்த ஸ்பாட். கங்காரு பக்கத்திலிருக்க அதை கண்டுகொள்ளாமல், ஈமுகோழிக்கு தானியம் தந்த சிறுவனின் செயல் கங்காருவுக்கு எரிச்சல் தர, உடனே ஓங்கி சிறுவனின் கன்னத்தில் கொடுத்த பன்ச்சில் அச்சிறுவனின் ஃபேமிலியே நடுங்கிவிட்டது.

நூறு வருஷ கேக்!

நியூசிலாந்தைச் சேர்ந்த அண்டார்டிக் ஹெரிடேஜ் டிரஸ்ட், கேக் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். கேக்கின் வயது 106. 1910-1913 இல் ஹண்டர் & பால்மர் நிறுவனத்தின் தயாரிப்பான கேக், இம்மியளவு கெடவில்லை. ட்ரஸ்ட், இதுவரை 1500 அரிய பொருட்களை கேப் அடேர் பகுதியில் கண்டுபிடித்துள்ளனராம். 

பிட்ஸ்!

பைக்கில் விஐபி சேர்!

விழாக்களில் விஐபிகளுக்கு சேர் ஓகே. ஆனால் ஆன் தி வே பைக்கிலுமா? யெஸ். தாய்லாந்தில் ஒருவர் தன் பைக்கில் பின் சீட்டில் விஐபியை சேரை பொருத்தியதோடு அதில் தன் செல்ல நாயையும் உட்காரவைத்து விர்ரென பறந்து செல்லும் வீடியோ பலருக்கும் செம கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறது. நாயின் மனதைரியம்தான் வீடியோவின் பெருமையே.

இனவெறி கருவி!

நைஜீரியரான சுக்வுஎமகா அஃபிக்போ என்பவரின் கைகழுவும் வீடியோதான் இன்றைய ஹாட் அண்ட் ஷாக். கைகழுவுமிடத்தில் டிஸ்பென்ஷரின் முன் வெள்ளையர் கைநீட்டி, கை கழுவுகிறார். ஆனால் கறுப்புநிறத்தவர் கைநீட்டினால் கருவி வேலை செய்யவில்லை. கையின் மீது வெண்ணிறடவல் வைத்தால் கருவி இயங்குகிறது. இது தொழில்நுட்ப பிரச்னை என்று கூறிவிட்டது அஃபிக்போவின் கம்பெனி.

டாக்டர் டான்ஸ்!

இந்தோனேஷிய டாக்டர்கள் முகத்தில் மாஸ்க் வித் கூலிங்கிளாசுடன் ஜாலி டான்ஸ் போடும் வீடியோ இணையத்தில் செம ஹிட். எதற்கு? மெசேஜ் சொன்னார்களே அதற்காகத்தான். கைகளை சுத்தமாக கழுவவேண்டும் என்ற உலக மகா மெசேஜை மக்களுக்கு சொல்லவே இந்த குத்தாட்ட டான்ஸ் சொல்கிறது இந்த டாக்டர்கள் குழு.

கிஃப்டை திருப்பிக்கொடு!

ஆஸ்திரேலியாவில் எட்வின், வின்னி என்ற ஜோடிக்கு மேரேஜ் பிக்ஸானது. ஏதோ காரணத்தால் மேரேஜ் நின்றுபோக, வின்னி தன் காதலருக்கு கொடுத்த ஷூ, பர்ஸ் என அனைத்தையும் சூதானமாக ரிடர்ன் வாங்கிவிட்டார். ஆனால் எட்வின் வின்னிக்கு கொடுத்த கிஃப்ட்களை திரும்ப கேட்க, வின்னி தரவில்லை.  கோர்ட் ஆர்டர் படி வின்னி தரவேண்டிய கிஃப்ட் மதிப்பு 15,500 டாலர்கள்.

ரோமியோவுக்கு காப்பு!

மும்பை பெண்ணான ஆசிராவை இரு ரோமியோக்கள் அந்தேரியிலிருந்து, ஜூகி சர்க்கிள் வரை பைக்கில் ஃபாலோ செய்தனர் அஞ்சா மனுஷியான ஆசிரா அதனை மும்பை போலீஸ் ஐடிக்கு  பைக் நம்பரோடு அனுப்ப, ரோமியோக்களை காலரை பிடித்து காப்பு மாட்டி பெண்களின் பெருமை சேர்த்திருக்கிறது மும்பை போலீஸ். சல்யூட் இந்தியன் போலீஸ்.

பிட்ஸ்!

புல் அப்ஸ் புலி!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் ஆடம் சாண்டல், புல்அப்ஸ் எடுப்பதில் சூரர். அதில் சாதிக்க பிளான் செய்தவர், அரைமணிநேரத்தில் 30 என தொடங்கி, இன்று செய்திருப்பது அசத்தல் கின்னஸ் ரெக்கார்ட், ஒரு மணிநேரத்தில் 51 புல்அப்ஸ் எடுத்து மிரட்டியிருக்கிறார்.

உடைகளில்லாமல் உலா!

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க ஆண்டுதோறும் செப்டம்பரில் பில்லி சைக்கிள் பேரணி நடைபெறுவது வழக்கம். இதில் முக்கிய கண்டிஷன், நிர்வாணமாக சைக்கிள் ஓட்டவேண்டும் என்பதுதான். நோ பயம்? உடலில் பெயிண்ட் செய்துகொண்டுகூட சைக்கிள் ஓட்டி உலகை காப்பாற்றலாம்.

சிலந்தி மீல்ஸ்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டேனியல் ராபர்ட்சுக்கு ஹாலோவீன் கொண்டாட்டத்தில் வேலை தேவை. தன் திறமையை நிரூபிக்க பிளாக் விடோ எனும் சிலந்தியை அப்படியே ஹார்லிக்ஸாக சாப்பிடுகிறார். ஏன் பாஸ் இப்படி? என்றால் சும்மா ஜாலிக்கு என்று சிரிக்கிறார் டேனியல்.

உலக சாதனை வேட்டை!

அமெரிக்காவின் மிசிசிபியில் முதலை வேட்டைக்காரர்கள் 14 அடிநீள ராட்சத முதலையை வேட்டையாடி சாதனை செய்திருக்கிறார்கள். இந்த gargantuan இன முதலையின் எடை 348 கி.கி. நான்குபேர் இதனை வேட்டையாடி தங்கள் பெயரை சாதனை கல்வெட்டில் பொறித்திருக்கின்றனர்.



 நன்றி: குங்குமம் வார இதழ்