ஜாலி பிட்ஸ் 3 - விக்டர் காமெஸி




ஜாலி பிட்ஸ் - விக்டர் காமெஸி 


வயிற்றுக்குள் மெகா குடல்!

சீனாவின் ஷாங்காய் டென்த் மருத்துவமனைக்கு கர்ப்பிணிபோல வீங்கிய வயிற்றுடன் வந்தார் 22 வயது இளைஞரான சூ ஹாய். ஸ்கேனில் அவரது குடலின் அளவு 76செ.மீ நீளம், எடை 13 கி.கி எனத்தெரிந்து உடனே டாக்டர்கள் கழிவோடு குடலை 3 மணிநேர ஆப்பரேஷன் செய்து டஸ்ட்பின்னில் போட்டுவிட்டார்கள். குடல் வளர்ச்சி குறைபாட்டு நோய்தான் வீக்கத்திற்கு காரணமாம்.

தள்ளிப்போகாதே என் அன்பே!

இந்தோனேஷியாவின் புகிட் லாவாங் வனப்பகுதியில்தான் இந்த அன்பு பரிமாற்றம். பழம் கொடுத்த இளம்பெண்ணின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்ட குரங்கின் முரட்டு அன்பால் அப்பெண்ணும், காதலரும் டென்ஷனாகிவிட்டனர்.   5 நிமிடம் நீடித்த இந்த மூர்க்கப்பிடி, பழம் கொடுத்ததும்தான் தளர்ந்திருக்கிறது. அன்புப்பிடி குரங்கு ஆணல்ல, பெண்.

பழத்திற்குள் தோட்டா!

அமெரிக்காவின் கொலராடோ நகரிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் அவகாடோ பழத்தை ஆசையாக வாங்கியுள்ளார் நிச்சேவின் நண்பர். வீட்டில் வந்து பழத்தை வெட்டினால் உள்ளே இருந்தது அசல் துப்பாக்கித்தோட்டா. மிரண்டுபோனவரை, அணில் பழத்தை சாப்பிடும்போது, விவசாயி துப்பாக்கியால் சுட்டு விரட்டியிருப்பார் என ஆறுதல் சொல்லி பழத்தை சாப்பிட வைத்திருக்கின்றனர் அவரது நண்பர்கள். அணிலுக்கே துப்பாக்கியா?

கடைக்குள் கார் பார்க்கிங்!


கொஞ்சம் சிப்ஸூம், யோகர்டும் அவசரமாக தேவை. பார்க்கிங்கில் காருக்கு இடம் தேடி பர்சேஸ் பண்ண சோம்பல். தடாலடியாக நேராக கடைக்குள்ளேயே வந்து காரை நிறுத்திவிட்டார் அந்த மர்ம மனிதர். சீனாவின் ஸென்ஜியாங் பகுதி சூப்பர் மார்க்கெட்டில் நடந்திருக்கிறது இந்த அவசர பர்சேஸ் விவகாரம். சிசிடிவியில் பதிவாகிய வீடியோதான் இன்று ஆன்லைனில் காமெடி ஹிட்.  

பேபிக்கு விமானம் தந்த கிஃப்ட்!

துருக்கிஸ் ஏர்லைன்ஸின் 971 விமானத்தில் கிரிஸ்டினா பென்டன் 36 வார கர்ப்பிணியாக விண்ணிலேறினார். நடுவானில் திடீரென குவா குவா சத்தத்தோடு குழந்தை டெலிவரியாக, உடனே நியூ ஆர்லியன்ஸ் நகரில் விமானம் இறங்கியது. கிரிஸ்டினாவின் குழந்தை ஆயுள் முழுக்க தங்கள் ஃபிளைட்டில் ஃப்ரீயாக பறக்கும் கிஃப்டையளித்து அசத்தியுள்ளது ஏர்லைன்ஸ் கம்பெனி.

யானை மாரத்தான்!

ஜிம்பாவேயில் நடந்த விக்டோரியா ஃபால்ஸ் மாரத்தானில் வீரர்கள் கால் நரம்பு துடிக்க ஓடிக்கொண்டிருந்தனர். திடீரென சாலை அருகிலிருந்த காட்டின் யானையும் அவர்களோடு இணைந்தால் எப்படியிருக்கும்? துரத்திய யானையால் பள்ளத்தில் விழுந்து எழுந்து ஓடிய வீரரின் வீடியோ பீதி கிளப்புகிறது.

டூத்பிரஷில் நின்ற பேஸ்கட்பால்!

பஞ்சாபின் உத்தம் சிங் வாயிலுள்ள டூத்பிரஷில்  அதன் மீது பேஸ்கட்பாலை நிற்க வைத்து கின்னஸ் ரெக்கார்ட் செய்திருக்கிறார். ஊரே சூழ்ந்து நிற்க, கையில் ட்யூன் செய்த பேஸ்கட்பாலை மெல்ல வாயில் வைத்திருக்கும் டூத்பிரஷூக்கு கொண்டுவந்து சுற்றியபடி நிற்க வைத்தது 53 நொடிகள் பாஸ்!

ஹைவே ஸ்டிக்கர் திருடர்!

அமெரிக்காவின் க்லீவ்லாண்டிலுள்ள அவோன் லேக் போலீஸூக்கு போர்டுகள் காணோம் என டஜன் புகார்கள் செய்தனர். செக்யூரிட்டி கேமராவில் செக் செய்தபோது, ஜான் ஹோய்ஸெல், ரோடிலுள்ள போர்டுகள், ஸ்டிக்கர்களை அபேஸ் செய்வது தெரிந்தது. அவரின் வீட்டில் நடத்திய ரெய்டில் கிடைத்த போர்டுகள் 500, மதிப்பு 5,500 டாலர்கள். இவர் வேறமாதிரி திருடர்!

பிகினியில் வேலைவாய்ப்பு!

செக் நாட்டு மின்சாரவாரியம் தனது ஃபேஸ்புக் கணக்கில் மிஸ் எனர்ஜி 2017 தலைப்பில் 2 மாத இன்டர்ன்ஷிப் அறிவித்திருந்தது. ஆனால் 10 பள்ளி மாணவிகளை பிகினியில் நிற்க வைத்து அதில் ஒருவரை மிஸ் எனர்ஜி என செலக்ட்  செய்யச் சொன்னதில்தான் விபரீதம். நாடே கூடி மீம்ஸ்களால் வறுத்தெடுக்க, கம்பெனி என்ன செய்யும்? அறிவிப்பு உடனே வாபஸ்தான்.  


பர்கர் ராணி!

அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த 8வது பர்கர் சாம்பியன்ஷிப்பில்தான் இச்சாதனை. 10 நிமிடத்தில் 21 ஹாம் பர்கரை மூச்சு முட்ட தின்று வென்ற சாதனை லேடி மோலி சூய்லெர், 3 ஆண்டுகளாக டைட்டில் வின்னர். கிடைத்த 4 ஆயிரம் டாலரில் தன் குழந்தைகளுக்கு உணவு வாங்கித்தருவாராம். நம்புவோம்!

ஆர்டிஸ்ட் வண்டு!

ஜப்பானைச் சேர்ந்த மாண்டி என்ற பெண் வளர்க்கும் ஆர்டிஸ்ட் வண்டுதான் இப்போது ஆன்லைன் சென்சேஷன். இந்த வண்டு தானாகவே பேனா பிடித்து வரையும் லைன் ஆர்ட்டுகளை ரசிக்க தானாகவே ஒரு கூட்டம் ட்விட்டரில் உருவாகிவிட்டது. ஜப்பான் சுட்டிகளிடம் பெட் ஆக வண்டுகள் வளர்ப்பதுதான் இப்போது அங்கே ட்ரெண்டிங்.

முட்டை உடையாமல் கின்னஸ்!

பாகிஸ்தானின் கராச்சியில் தற்காப்பு கலை வீரரான முகமது ரஷீத் 30 செகண்டில் 29 கூல்ட்ரிங்க் கேன்களை நொறுக்கி கின்னஸ் செய்திருக்கிறார். அதுவும் உள்ளங்கையில் முட்டையை வைத்துக்கொண்டு அது உடையாமல் இந்த வீரச்செயலை செய்ததுதான் மாஸ் ஹிட்.

 மேயரின் திகில் கல்யாணம்!

மெக்சிகோவைச்சேர்ந்த மேயர் விக்டர், தங்கள் மரபுப்படி பெண் தேடித்தான் திருமணம் செய்தார். விழாவில்   மணமகளைப் பார்த்தவர்களுக்குத்தான் செம பீதி. மணமகள் கெட்டப்பில் இருந்தது முதலையாச்சே! மேயரின் நகரில் மீன்வளம் டன் கணக்கில் பெருக நடந்த மேரேஜ் இது.

காற்றினால் கிடைத்த லக்!

நியூயார்க்கின் கிளிப்டன் பார்க்கைச் சேர்ந்த ஆண்டனி லவரோன், தன் கார் டயர்களில் காற்றுப் பிடிக்க ஸ்டீபர்ட் என்ற கடைக்குச் சென்றார். எதேச்சையாக அருகிலிருந்த கடையில்  லாட்டரிச்சீட்டை வாங்க, நம்புவீர்களா? அதற்கு கிடைத்த மிராக்கிள் பரிசு 1 மில்லியன் டாலர்கள். லக்கிமேன்!

நன்றி: குங்குமம் வார இதழ்




பிரபலமான இடுகைகள்