அறியப்படாத கணித மேதைகள்! -ப.அனுஷா





அறியப்படாத கணித மேதைகள்! -.அனுஷா

மிகச்சிறந்த கணிதமேதைகளான ஆர்க்கிமிடிஸ், ஐசாக் நியூட்டன் ஆகியோர்களின் பிரதாபங்களை நூல்கள் வழியாகவும், படங்களின் மூலமும் உலகமே அறிந்துள்ளது. ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. அப்படிப்பட்ட கணக்கு மாஸ்டர்களைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

முகமது அல் க்வாரிஸ்மி

கி.பி. 800 இல் காலிப் அல் ரஷீத் பல்வேறு கலாசாரங்களிலுள்ள முக்கிய நூல்களை அரபி மொழியில் மொழிபெயர்த்து விஸ்டம் என்ற பெயரில் நூலகத்தை நடத்தி வந்தார். அதில் படித்து வளர்ந்த மாணவர் க்வாரிஸ்மியின் பூர்வீகம் பெர்ஷியாவின் க்வாராஷிம். நம் அக்கவுண்டை காலி செய்து காசை எடுப்பதற்கும், நாம் என்ன சர்ச் செய்கிறோம் என்பதை நாசூக்காக கூகுள் சுடுவதற்கும் உதவும் அல்காரிதத்தை முதலில் சூடம் காட்டி தேங்காய் உடைத்து தொடங்கி வைத்தவர் க்வாரிஸ்மிதான். இன்றுவரையும் ஹிட்ஹாட்டாக விற்கும் இரண்டு கணிதநூல்களை எழுதியவர் க்வாரிஸ்மி. al-Kitab al-mukhtasar fi hisab al-jabr wal-muqabala என்ற தலைப்பிலான இவரது நூல் என்ன சொல்கிறது? அல்ஜீப்ராவின் நுணுக்கங்களைத்தான். சிம்பல்களை பற்றி முழுக்க விவரிக்கவில்லையெனினும் அதனை பயன்படுத்துவது பற்றி இந்நூலில் பேசியுள்ளார்.

நிகோலாய் இவனோவிச் லோபசெவ்ஸ்கி

ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோடில் ஆண்டில் பிறந்த கணிதமேதை நிகோலாய்(1792-1856) Euclidean geometry எனும் புதிய கணித முறையை உலகிற்கு கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியவர். கண்டுபிடித்த காலத்தில் பெரிய அங்கீகாரமின்றி வறுமையில் அலைகழிந்த வாழ்வு இவருடையது. பின்னர் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற சார்பியல் கொள்கைக்கே ஆதாரமாக அமைந்ததால் உலகம் முழுக்க பிரபலமானார்.

அகஸ்தா அதா கிங்

இங்கிலாந்தின் லண்டனில் பிறந்த அகஸ்தா(1815-1852) உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர். செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்த வளர்ந்த அகஸ்தா, 1833 ஆம் ஆண்டு கணிதவியல் அறிஞரான சார்லஸ் பாப்பேஜை ஒரு பார்ட்டியில் சந்தித்தார். பின் கணித எந்திரங்களை உருவாக்கிக்கொண்டிருந்தவரின் ஆராய்ச்சியில் இணைந்த அகஸ்தா, அவை இயங்கும் முறைகளை டிசைன் செய்தார். இன்றைய செயற்கை அறிவு ஆராய்ச்சிக்கும் இவர்தான் ஆதாரம் என்ற சர்ச்சை கருத்து நிலவுகிறது.

சோஃபியா கோவலெவ்ஸ்கயா

ரஷ்யாவின் மாஸ்கோவில் பிறந்த சோஃபா சிறுவயதிலேயே கணிதவியலாளராக மனதில் பிளான் செய்தவர். பின்னாளில் அதை நிறைவேற்றினாலும் பெண் படிக்க அன்றிருந்த சமூக தடைகளோடு கடுமையாக போராட வேண்டியிருந்தது. 1870 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் விதிகளையும் மீறி கணிதவியலாளரான Karl Weierstrass யிடம் கசடற கணிதம் கற்றார். 1874 ஆம் ஆண்டு சோஃபியா எழுதிய சனியின் வளையங்கள், பகுதி வேறுபாடு சமன்பாடு, நுண்கணிதம் குறித்த ஆராய்ச்சிக்கட்டுரைகள் இன்றும் மதிக்கப்படுபவைஐரோப்பாவில் ஸ்டாக்ஹோம் பல்கலையில் பணியாற்றிகாலத்தில்,சோஃபியா மட்டும்தான் ஒரே பெண். கணிதம் மட்டுமல்ல நாவல்கள் நாடகம் ஆகியவற்றிலும் கலக்கியவர்.


எம்மி நோதர்

ஜெர்மனியின் எர்லாங்கன் பகுதியில் பிறந்தவரான எம்மி நோதர்(1882-1935) பாரம்பரிய கணித ஃபேமிலி பெருமையுடையவர். நாம் இன்றைக்கும் மக்கப் பண்ணும் நவீன அல்ஜீப்ராவை உருவாக்கிய பிரம்மா எம்மி நோதர்தான். தந்தை மேக்ஸின் கால்தடம் வழியாக கணிதத்தில் ஆர்வமானார் எம்மி. எர்லாங்கன் பல்கலையில் படித்தபோது  அப்போது படித்த 986 மாணவர்களில் எம்மி உட்பட இருவர் மட்டுமே பெண்கள். அல்ஜீப்ராவின் இன்வேரியன்ட் தியரியில் பிஎச்டி படித்தவர், பேராசிரியர்களின் பர்மிஷன் கேட்டுத்தான் கிளாசில் அமர்ந்து படித்தவர். கணக்குகளை சால்வ் செய்து பல சான்ஸ்களை பிடித்து முன்னேறியவர் பின்னாளில் நோதர் தேற்றத்தை உருவாக்கினார்.

நன்றி: முத்தாரம் வார இதழ்