இடுகைகள்

தன்னார்வலர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சதுப்புநிலத்தைக் காக்கும் இந்திய அரசின் திட்டம்!

படம்
  சூழலைக் காக்கும் சதுப்புநில நண்பன்  திட்டம்! இந்தியா முழுவதும் உள்ள சதுப்பு நிலங்கள், சூழலின் பல்லுயிர்த்தன்மைக்கு உதவுகின்றன. இவற்றை பாதுகாப்பதும், ஆக்கிரமிப்பிலிருந்து தடுப்பதும் சவால் நிறைந்ததாக உள்ளது. இதற்கான தீர்வை வெட்லேண்ட் மித்ரா (Wetland Mitra) எனும் திட்டத்தை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.  தற்போது, சென்னையில் 'சதுப்புநில நண்பன்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதன்படி, சூழலியலில் ஆர்வம் உள்ளவர்கள், தன்னார்வலராக இதில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட இடைவேளையில் ஏரி, சதுப்பு நிலங்களைக் கண்காணிக்க வேண்டும். இதுதான் அவர்களது பணி. இதன்மூலம் ஏரி, சதுப்புநிலங்களின் பாதுகாப்பு உறுதிப்படுகிறது. அங்கு வரும் பறவைகள், பட்டாம்பூச்சிகள் பற்றிய துல்லியமான தகவல்களும் சதுப்புநில ஆணையத்திற்கு கிடைத்துவிடுகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியர் உள்ளார். தேவையான அரசு அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க தன்னார்வலர்களின் தகவல்கள் உதவுகின்றன.  “தற்போது சென்னையில் 106 சதுப்பு நில நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களைப் பெற்று சதுப்புநிலங்களைப் ப

இந்திய மக்கள் இறப்பதற்கு அரசின் செயலற்ற தன்மைதான் காரணம்! - ஶ்ரீனிவாஸ் பி.வி. இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர்

படம்
            கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக அரசு முழுக்கவே செயலிழந்துவிட்டதாக என நினைக்கத்தோன்றும் அளவுக்கு நிலை மோசமாக உள்ளது . பேஸ்புக்கில் மோடிபதவிவிலகு என எழுதும் அளவுக்கு மக்கள் விரக்தி நிலைக்கு வந்துவிட்டார்கள் . கோபம் கொள்வது சரி , செயல்வேகம் கொண்ட மனிதர்கள் இந்தியாவில் வேறு யாரும் இல்லையா ? என்றால் இருக்கிறார்கள் என உற்சாகமாக கூறலாம் . இளைஞர் காங்கிரசின் தேசிய தலைவர் ஶ்ரீனிவாஸ் பிவி , கட்சி பேதமில்லாமல் பலருக்கும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறார் . நீங்கள் என்ன விதமான உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறீர்கள் ? நாங்கள் எங்களை தொடர்புகொள்ளும் நோயாளிகளிடம் பேசிவருகிறோம் . அவர்களை தனிமைப்படுத்தவும் , தேவையான தன்னார்வலர்களாக உள்ள மருத்துவர்களின் உதவிகளைப் பெற உதவுகிறோம் . நோயிலிருந்து மீண்டவர்களைப் பற்றிய பட்டியலைப் பெற்று அவர்களிடமிருந்து பிறருக்கு பிளாஸ்மா பெற உதவுகிறோம் . மேலும் மக்களுக்கு மருத்துவமனை படுக்கை , ஆக்சிஜன் சிலி்ண்டர்களையும் வழங்குகிறோம் . நாங்கள் ஆக்சிஜன் வழங்குபவர்களோடு தொடர்பில் இருக்கிறோம் என்வே , ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற முடியாத ஏழைகளுக்கு உ

அரசுக்கு உதவிய துறவி நடத்தும் இலவச மருத்துவமனை! - லடாக் ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனை

படம்
              கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய இலவச மருத்துவமனை ! லடாக்கில் உள்ளது ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனை . இதனை நடத்தி வருபவர் பௌத்த துறவியான லாமா தும்ப்ஸ்தான் சோக்யால் . இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் , செவிலியர்கள் என அனைவருமே சேவை நோக்கத்துடன் பகுதி நேரமாக செயல்படுபவர்கள் . இன்னும் ஒன்றை கூற மறந்துவிட்டேன் . இந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது . சோனம் நோர்பு நினைவு மருத்துவமனையை அரசு நடத்தி வந்தது . ஆனால் மாவட்ட நிர்வாகம் மெல்ல அதிகரித்து வந்த கொரோனா நோய்த்தொற்று காரணமாக சமாளிக்க முடியாத நிலை . உடனே லடாக் ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க உதவி கேட்டனர் . அதற்கு துறவி லாமா ஒரே ஒரு நிபந்தனைதான் விதித்தார் . இங்குள்ள மருத்துவர்கள் போதாது . கூடுதலாக மருத்துவர்களை அழைத்து சிகிச்சை செய்துகொள்ளுங்கள் என்றார் . முதலில் இந்த மருத்துவமனையில் நோய் உள்ளதாக சந்தேகப்பட்டவர்களை தங்க வைத்து கண்காணித்தனர் . நோய் உறுதியானதும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற்றிவிட்டனர் . இங்கு அதிக அறைகள் இல

வட இந்திய தொழிலாளர்களுக்கு உதவிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன்!

படம்
              டாக்டர் விஜய் கார்த்திகேயன் திருப்பூர் ஏராளமான வட மாநில தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் நகரமாக திருப்பூர் மாறியுள்ளது . இதனால் அங்கு பொதுமுடக்கத்தின்போது தேவையான உதவிகளை கவனமாக வழங்கும் தேவை இருந்தது . இதனை கச்சிதமாக நிறைவேற்றினார் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன் . விஜய் கார்த்திகேயன் மருத்துவராக இருந்து குடிமைப்பணித்தேர்வு எழுதி ஆட்சியரானரர் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக செய்து பல்வேறு உணவுப்பொருட்களை மக்களுக்கு வழங்கியுள்ளார் . இவர் மட்டுமே 62,744 மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார் . இருபத்து நான்கு மணிநேரமும் செயல்படும் மையம் ஒன்றைத் தொடங்கி அதில் பல்வேறு தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் . இதன்மூலம் தேவைப்படும் உதவிகளை களத்தில் வழங்க மட்டுமே நகரத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தயாராக இருந்தனர் என்பது விஜய்யின் திட்டமிடலுக்கு சரியான உதாரணமாக இருக்கும் . திருப்பூர் கொரோனா போராளிகள் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி கொரோனா நோய்த்தொற்றுக்கு பாதிப்புற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளனர் . இதற்கு பல்வேறு அரசு அதிகாரிகளும்