அரசுக்கு உதவிய துறவி நடத்தும் இலவச மருத்துவமனை! - லடாக் ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனை

 

 

 

 

#CoronaWarrior: This Monk’s Free Hospital Is Helping Ladakh Battle COVID-19

 

 

 

கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய இலவச மருத்துவமனை!


லடாக்கில் உள்ளது ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனை. இதனை நடத்தி வருபவர் பௌத்த துறவியான லாமா தும்ப்ஸ்தான் சோக்யால். இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருமே சேவை நோக்கத்துடன் பகுதி நேரமாக செயல்படுபவர்கள். இன்னும் ஒன்றை கூற மறந்துவிட்டேன். இந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.


சோனம் நோர்பு நினைவு மருத்துவமனையை அரசு நடத்தி வந்தது. ஆனால் மாவட்ட நிர்வாகம் மெல்ல அதிகரித்து வந்த கொரோனா நோய்த்தொற்று காரணமாக சமாளிக்க முடியாத நிலை. உடனே லடாக் ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க உதவி கேட்டனர். அதற்கு துறவி லாமா ஒரே ஒரு நிபந்தனைதான் விதித்தார். இங்குள்ள மருத்துவர்கள் போதாது. கூடுதலாக மருத்துவர்களை அழைத்து சிகிச்சை செய்துகொள்ளுங்கள் என்றார்.


முதலில் இந்த மருத்துவமனையில் நோய் உள்ளதாக சந்தேகப்பட்டவர்களை தங்க வைத்து கண்காணித்தனர். நோய் உறுதியானதும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற்றிவிட்டனர். இங்கு அதிக அறைகள் இல்லாத காரணத்தால் நோயுற்றவர்களை தனிமைப்படுத்தி வைக்கும் வசதியை மட்டும் செய்து வந்தனர். இதில் அதிகளவு குழந்தைகள் இருந்தது துறவி லாமாவை வருந்தவைத்துள்ளது. இவர் தென்கொரியா சென்று கொரிய மொழியையும் ஜென் மதம் தொடர்பாகவும் கற்று வந்துள்ளார். லெவிலுள்ள ஸ்பைடுக் எனும் கிராமத்தில் பிறந்த துறவி இவர். 1999இல் லடாக் ஹார்ட் பௌண்டேஷனைத் தொடங்கியுள்ளார். இங்கு அதிகளவு இதயநோய்கள் அதிகரித்து வந்தன. இதற்கான சிகிச்சைக்கு மக்கள் டில்லிக்கு செல்லவேண்டியிருந்தது. முதலில் இதற்கான மருந்துகளை நன்கொடை பெற்று வாங்கிக்கொடுத்த லாமா சோக்யால் பின்னரே மருத்துவமனை கட்டும் ஐடியாவிற்கு வந்தார்.


இதற்கு முக்கியமான காரணம் பல்வேறு மருத்துவ வசதிகளை உள்ளூரில் வழங்கினால் மக்களுக்கு அலைச்சல் குறையும் என்ற நல்ல நோக்கம்தான். 2002இல் தொடங்கிய மருத்துவமனை கட்டுமானப் பணி 2007இல் நிறைவு பெற்றது. பெரும்பாலும் மருத்துவ வசதி கிடைக்காத மக்கள்தான் இங்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். லடாக்கின் புகழ்பெற்ற மருத்துவர்கள் இங்கு பணியாற்றியுள்ளனர். தற்போது நான்கு மருத்துவர்கள் தன்னார்வலர்களாக ஹார்ட் பௌண்டேஷனில் பணியாற்றி வருகி்ன்றனர். இம்மருத்துவமனையில் மாதம் 700 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து சேர்கின்றனர். இதுவரை 300க்கும் அதிகமான இதய அறுவைசிகிச்சைகள் செய்துள்ளனர்.


https://www.thebetterindia.com/221431/leh-coronavirus-covid19-ladakh-heart-foundation-lama-thupstan-chogyal-india-inspiring-nor41/










கருத்துகள்