க்ரவுட் ஃபண்டிங் மூலம் தேர்தலில் ஊழல் குறையுமா?

 





Image result for crowdfunding



மக்களுக்காக மக்கள் பணம் தரலாமா?

தேர்தல் என்பது பெரும் பட்ஜெட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை நடத்துவதற்கு அரசுக்கு ஆகும் செலவைவிட கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அதிக செலவு பிடிக்கிறது. 

தொழிலதிபர்கள், நடிகர்கள் போட்டியிடும்போது, தொண்டர்களைத் திரட்டுவதற்கான செலவு, உணவு ஆகியவற்றை அவர்கள் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் சாதாரண நிலையில் உள்ள கம்யூனிஸ்டுகள் போன்றோர் போட்டியிடும்போது, உண்டியல் குலுக்கித்தான் நிலையை சமாளிக்க வேண்டி உள்ளது. ஆனாலும் இது போதுமானதல்ல. எனவே, தற்போது அவர் டெமாக்கிரசி என்ற இணைய வழி நன்கொடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு நீங்கள் நன்கொடைகளை வழங்கலாம். 

கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் பொருட்களை வெளியிட்டு, அப்பொருள் உங்களுக்கு பிடித்திருந்தால் நிதியுதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்களே அதே பாணிதான். தற்போது அவர் டெமாக்கிரசி நன்கொடைத் திட்டத்தில் 14 வகை நிதிகோரும் முறைகள் செயல்பாட்டில் உள்ளன. இதனை பிலால் ஸைதி தொடங்கினார். “எங்களுடைய திட்டத்தின் வெற்றியால், இன்று சர்வர் மீது சிலர் தாக்குதல் நடத்தி வலைத்தளத்தை மூட முயற்சிக்கின்றனர். டெல்லி ஆம் ஆத்மி வேட்பாளர், அதிஷிக்கு 42 லட்ச ரூபாய் பணம் பெற்றத் தந்தது எங்களது தளம்தான். எங்களது தளம் , சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது” என நெஞ்சுரத்துடன் பேசுகிறார் பிலால். 

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் கன்ஹையா குமார், இத்திட்டத்தின் வழியாக 35 லட்சரூபாய் தேர்தல் நிதியைப் பெற்றிருக்கிறார். இதற்கான நிதிகோரல் மார்ச் 26 அன்றுதான் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தயாரான 24 மணிநேரத்தில் மூன்றில் ஒரு பங்கு நிதி திரட்டப்பட்டு விட்டது. திரட்டப்பட திட்டமிட்ட தொகை 70 லட்சம் ரூபாய். 

அவர் டெமாக்கிரசி தேர்தலுக்காக தொடங்கப்பட்ட நிதி கோரும் வலைத்தளம். சமூகப் பிரச்னைகளுக்கான போராடும் கேட்டோ, மிலாப் ஆகிய வலைத்தளங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அவர் டெமாக்கிரசி தளத்தில், போட்டியிடும் வேட்பாளர்களின் வீடியோக்கள், ட்விட்டுகள், புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டு உள்ளன. 

நான் அதிஷிக்கு நிதியளித்ததன் காரணம், அவர் கல்வி முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவார் என்பதற்காகவே. இதனால், அவர் வெல்லவேண்டும் என்று விரும்பினேன். இதுபோல பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி தேவைப்படுகிறது. குறைந்தபட்ச நிதியாக ஒரு ரூபாய் முதல் எவ்வளவு தொகை வேண்டுமானால் நன்கொடை தரலாம் என்பது இதன் ஸ்பெஷல். 

காஷ்மீரில் ஆட்சியராக பணிபுரிந்து பதவி விலகிய ஷா பஷேல் இத்தகைய நிதி திரட்டும் முயற்சிகளை வரவேற்கிறார். இந்த நிதிதிரட்டும் முயற்சியில் பங்கேற்பவர்கள், பெரும்பாலும் இளைஞர்கள்தான். நேரடியான அரசியலை தீவிரமாக எதிர்க்கும் காஷ்மீரில், தேர்தல் நிதிக்காக நன்கொடை குவிவது ஆச்சரியமான ஒன்று. 

ஆம் ஆத்மியிலிருந்து விலகிய டாக்டர் தரம்வீர் காந்தி, தேர்தலை எதிர்கொள்ள இணையவழி நன்கொடை சரியான முயற்சி என்று கூறுகிறார். தற்போது நவான் பஞ்சாப் கட்சியைத் தொடங்கி செயல்பட்டுவருகிறார். மக்களவைத் தேர்தலுக்காக இணையத்தில் நன்கொடை கோரி 30 ஆயிரம் ரூபாய் வரையில் பெற்றிருக்கிறார்.  இது ஒன்றும் புதிய முறை அல்ல; அமெரிக்காவில் தேர்தல் நிதியை இம்முறையில் பெறுகின்றனர். இந்தியாவில் நாம் இப்போதுதான் இம்முறையைத் தொடங்கியுள்ளோம்.  

-தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்











கருத்துகள்