சுவாரசியமாக கத்துக்கலாம் வாங்க! - யூடியூப் இருக்க கவலை என்ன?

 



You Tube, Icon, Play Button, Logo, Red, Media




RealLifeLore

நம் வாழ்க்கையில் இப்படியெல்லாம் கேள்வி கேட்கமுடியுமா என்ற அளவில் ஏராளமான கேள்விகளைக் கேட்டு பதில் சொல்கிறது இந்த சேனல். 29 லட்சம் பேர் பின்தொடரும் இந்த சேனலில், இருவாரங்களுக்கு ஒருமுறை வீடியோக்களைப் பதிவிடுகின்றனர். மூன்றாம் உலகப்போரில் பாதுகாப்பான இடம் எது, பூமியை எவ்வளவு ஆழம் தோண்டலாம், நம்மால் கேட்க முடிந்த அதிகபட்ச ஒலி அளவு என கேள்விகளைக் கேட்டு வியக்க வைக்கின்றனர். 

https://www.youtube.com/channel/UCP5tjEmvPItGyLhmjdwP7Ww/featured

CrashCourse

தமிழ், ஆங்கிலம் என படித்தாலும் இதைத் தாண்டிய பல விஷயங்களைப் படிக்கும் ஆர்வம் மாணவர்கள் பலருக்கும் உண்டு. உதாரணமாக, நாடகம், புராணம், ஊடகம், அறிவியல் வரலாறு என பல்வேறு படிப்புகள் என கற்றுத் தருவது இந்த யூடியூப் சேனலின் சிறப்பு. அமெரிக்கர்களான நிக்கோல் ஸ்வீனி, கேரி அன்னே பில்பின், மைக் ருக்னெட்டா ஆகியோர் பாடங்களை சுவாரசியமாக கற்றுத் தருகின்றனர். 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த சேனலைப் பின்தொடர்கின்றனர் .

https://www.youtube.com/user/crashcourse/featured

Mike Boyd 

மாதம் அல்லது வாரம் தோறும் புதிய சவாலை ஏற்று சாதிப்பது மைக்கின் சிறப்பு. நான்கு நிமிடங்கள் மூச்சு தம் கட்டுவது, கண்களைக் கட்டியபடி ரூபி க்யூபை ஒன்றுசேர்ப்பது, கோடாரி, கத்தி எறிவது எப்படி, நெருப்பு உண்டாக்குவது என ஏன்?எதற்கு?எப்படி? ரக கேள்விகளுக்கு வீடியோ வழியாக பதில் சொல்லுகிறார் இந்த இங்கிலாந்து குடிமகன். 15 லட்சம் ரசிகர்கள் இவரைப் பின்தொடர்கின்றனர். 

https://www.youtube.com/user/microboyd/featured

Wisecrack

தத்துவம், கலை, அறிவியல் தொடர்பான கேள்விகளுக்கு இலக்கியம், சினிமா, அனிமேஷன் என பல்வேறு வடிவங்களைப் பயன்படுத்தி பதில் சொல்லுவது இந்த சேனல் பாணி. 26 லட்சம் பேர் பின்தொடரும் இந்த அமெரிக்க சேனலில் கல்வியாளர்கள், நடிகர்கள், திரைப்பட இயக்குநர்கள் என பலரும் இணைந்து பங்களிக்கின்றனர். 

https://www.youtube.com/user/thugnotes/featured

minutephysics

இயற்பியலை இவ்வளவு எளிமையாக சொல்லித்தர முடியுமா என ஆச்சரியப்படுத்துகிறது இந்த யூடியூப் சேனல். 39 லட்சம் பார்வையாளர்களைக் கொண்டுள்ள இந்த சேனல் முழுக்க இயற்பியலுக்கானது. ஹென்ரி ரெய்ச் என்பவர் தொடங்கிய இச்சேனலில், மிக கடினமான தியரியைக்கூட எளிமையாகப் புரிய வைக்கிறார்கள். 

https://www.youtube.com/user/minutephysics/videos

-ச.அன்பரசு




கருத்துகள்