இடுகைகள்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமலுக்கு வரும் சார்ஜ் கார்டுகள்! - ஜாலியாக செலவழிக்கலாம் வாங்க!

படம்
pixabay கிரடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை தேய்த்து சுகம் கண்டிருப்பீர்கள். டெபிட் கார்ட்டில் உங்கள் கணக்கில் உள்ள பணத்தை மட்டுமே பர்ச்சேஸ் செய்து அழிக்க முடியும். கிரடிட் கார்டில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக செலவழிக்கலாம். ஆனால் அதற்கும் சரியாக மாதாமாதம் பணம் கட்டவில்லையென்றால், குண்டர்கள் படை உங்களை சந்தித்து கையை காலை முறித்தாவது பணத்தை பெறுவார்கள். இதிலுள்ள கஷ்டம் இந்த இரண்டு கார்டுகளிலும் உள்ள குறிப்பிட்ட லிமிட்தான். எல்லை தாண்டி ஜியோவின் டேட்டா பயன்படுத்துகிறோம். காசையும் அப்படி செலவு செய்தால்தானே உங்கள் கௌரவம் உயரும். நாட்டின் பொருளாதாரமும் டிவிஎஸ் குதிரையாக மேலே பாயும். இதற்குத்தான் சார்ஜ் கார்டு எனும் புதிய அம்சத்தை கொண்டு வர கடன் அட்டை நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இதன் நோக்கம் உங்களை அதிகம் செலவு செய்ய வைப்பதுதான். இந்த கார்டு இன்றும் அதிக வரவு செலவு செய்கிற கடமையே கண்ணாக பணத்தை வங்கியில் கட்டி வருகிற ஆட்களுக்கு மட்டுமே வழங்கி வருகிறார்கள். அவர்களின் கடன் வரலாற்றை பார்த்துவிட்டுத்தான் சார்ஜ் கார்டுக்கான அப்ளிகேஷனை வங்கி கையில் எடுத்து போலிப்புன்னகையுடன்