இடுகைகள்

பீகார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கு ஆடுகள் தரும் பொருளாதார சுதந்திரம்! - ஆகாகான் பௌண்டேஷனின் உதவி!

படம்
 ஆடுகள் தரும் பொருளாதார சுதந்திரம்! இந்தியா, டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் உச்சம் தொட்டுள்ளது.  இக்காலத்திலும் கிராமப்புற இந்தியாவை வேளாண்மையும், கால்நடைகளும்தான் தாங்கிப்பிடிக்கின்றன. கிராமங்களில் வீட்டில் வாழும் பெண்கள், கால்நடைகளை வளர்த்தே குடும்பச் செலவுகளைச் சமாளிக்கின்றனர்.   பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கென, தன்னார்வ அமைப்பான  ஆகாகான் பௌண்டேஷன் திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பு, ஆடுகளுக்கான மருத்துவ உதவிகளை வழங்கும் வகையில்,  கிராம பெண்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கிறது. இதன்மூலம் பெண்கள், ஆடுகளுக்குத் தேவையான மருந்துகள், சிகிச்சையை வழங்கி அதற்கென குறிப்பிட்ட தொகையை சேவைக்கட்டணமாகப் பெறுகின்றனர். இது பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்குகிறது.  கிராமத்தில் ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்களுக்கு, பாசு ஷகி (pashu sakhi) என்று பெயர். இதற்கு இந்தி மொழியில், ’விலங்குகளின் நண்பன் ’என்று பொருள். இந்தியாவில் வாழும் கால்நடைகளின் எண்ணிக்கை, 13 கோடியே 50 லட்சம் ஆகும். நோய்க்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை 40 சதவீதமாக உள்

அன்பளிப்பு நூல் திட்டத்தை தொடங்கிய மாவட்ட நீதிபதி!

படம்
  அன்பளிப்பு நூல்களால் உருவாகும் வாசிப்பு பழக்கம்!  பீகாரின் புர்னியாவில்  மாவட்ட நீதிபதியாக ராகுல் குமார் ஐ.ஏ.எஸ் பணியாற்றி வருகிறார். இவர், நூல்களை அன்பளிப்பாக வழங்கும் அபியான் கிதாப் தான் (‘Abhiyan Kitab Daan’) திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.  நூலகத்திற்காக, மக்கள் தங்களிடமுள்ள நூல்களை அன்பளிப்பாக வழங்கும் திட்டம் இது.  இத்திட்டம், கடந்த இரு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதனை ராகுல்குமார், சிறியளவில் தொடங்கினார். இப்போது உள்ளூர் மக்களின் பங்களிப்பில் பெரிய திட்டமாக வளர்ந்துள்ளது. இதனால், மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராம, நகர்ப்புறங்களிலும் நூலகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  வரலாறு, புவியியல், போட்டித்தேர்வு, இலக்கியம் என பல்வேறு துறை சார்ந்து ஒரு லட்சத்திற்கும் மேலான நூல்களை உள்ளூர் மக்கள் வழங்கியுள்ளனர்.  இதனை மேலும் மேம்படுத்த ராகுல்குமார் மேசை, புத்தக அலமாரி, நாற்காலிகளை வாங்கித் தர திட்டமிட்டுள்ளார்.  ”கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் வயது வேறுபாடின்றி நூலகத்தால் பயன் பெறலாம். நூல்களை வாங்கிப் படிக்க முடியாத ஏழைமக்கள், நூலகத்தை ச

காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நம்பிக்கை - கன்னையா குமார், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்

படம்
இடதுசாரி அமைப்புகள் இவருக்கு ஆதரவாக இருந்தபோதிலும் கூட அதிகாரத்திற்கு வர காங்கிரஸ்தான் சரியான கட்சி என அதில் சேர்ந்துவிட்டார். இப்போது பீகாரில் செயல்பட்டு வருகிறார். நேரு பல்கலைக்கழக காலத்திலிருந்து ஜனநாயகத்தை காக்கும் புரட்சி குரலாக ஒலித்து வந்தார். நாடு முழுவதும் இவரது புகைப்படங்கள சென்றன. பிறகு தேர்தலில் நின்றார். பாஜகவின் கிரிராஜ் சிங் என்பவரிடம் தோற்றுப்போனார். ஆனால் இப்போது நாம் கன்னையாவைப் பற்றித்தானே பேசுகிறோம். கிரிராஜைப் பற்றி அல்ல. அதுதான் கன்னையாவின் செல்வாக்கு. இவரின் பேச்சுகளை சமாளிக்க முடியாத பாஜக, உதைப்பதற்குள் ஓடிவிடு என மிரட்டியும் பார்த்தது. அப்போதும் பணியாத ஆள் என்பதால், தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மூன்றாவது நினைவுநாளில் தேசவிரோத ஸ்லோகன்களை சொன்னதாக உபா சட்டத்தைப் பயன்படுத்தியது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரி இந்த சம்பவம் நடைபெற்றது. 2019இல் தேர்தலில் நின்று தோற்றுப்போனவரை காங்கிரஸ் கட்சி அரவணைத்து ஏற்றுக்கொண்டது. இந்த சம்பவம் நடந்தது செப்டம்பர் மாதம் 28. சவால்கள் இதோடு நின்றுவிடவில்லை. பீகாரில் புகழ்பெற்ற பெரிய கட்சி ஆர்ஜேடி. பெயரைப் பார்த்தால் ஏதோ ரியல் எஸ

சாணியைக் கொடுத்தால் கேஸ் இலவசம்!

படம்
  சாணியைக் கொடுத்தால் கேஸ் இலவசம்! உடனே எங்கே என்றுதானே அனைவரும் கேட்பார்கள். தமிழ்நாட்டில் அல்ல. பீகார் மாநிலத்திலுள்ள மதுபானி மாவட்டத்தில் இப்படி திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சுகேத் எனும் கிராமத்தில்  கிராம மக்களுக்கு இலவசமாக கிடைத்த கேஸ் சிலிண்டர்களை தொழுவத்திலுள்ள சாணி, குப்பைகளைக் கொடுத்து இலவசமாக எரிவாயும் நிரப்பிக்கொள்ளலாம். இதனை உருவாக்கியவர்கள் இருவர். இருவருமே சமஸ்பூர் மாவட்டத்தில் மத்திய விவசாய பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கிறார்கள். ஒருவரின் பெயர் ராஜேந்திர பிரசாத், மற்றொருவர் ரமேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா.  மத்திய அரசு கிராம மக்களுக்கென இலவசமாக கேஸ் சிலிண்டர்களை உஜ்வாலா திட்டத்தின்படி வழங்கி வருகிறது. இதை நான் ஆச்சரியமாக கவனித்தேன். அப்போதுதான் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதனை எரிவாயு நிரப்ப போதுமான பணம் கிராமத்து ஏழை மக்களிடம் இல்லை என்பதை அறிந்தேன். அதற்காகத்தான் பசுக்களின் சாணியைக் கொடுத்து எரிவாயுவை நிரப்பும் மாடலை உருவாக்கினோம் என்றார் ஸ்ரீவஸ்தவா. பீகாரின் முசாபர் நகர், ஜார்க்கண்டின்  டியோகர் நகரிலுள்ள கோவில்களுக்கு கடவுளுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், இலைகள் ஆகியவற்றை

படிப்பதற்கு பொருளாதாரமும், சூழலும் தடையாக இருக்க கூடாது! - ஆனந்த் குமார், பீகாரின் சூப்பர் ஆசிரியர்!

படம்
                    பொருளாதாரம் எனது படிப்பை குலைத்துவிட்டது ! ஆனந்த்குமார் . பாட்னாவில் வாடகைவீட்டில் இருந்த அந்த சிறுவனை பள்ளி செல்வதற்காக அதிகாலையில் காலைத் தொட்டு எழுப்புவது தந்தை ராஜேந்திர பிரசாத்தின் வழக்கம் . ஒருநாள் அப்படி எழுந்த சிறுவன் , எதற்கு இப்படி எழுப்புகிறீர்கள் என்று கேட்டான் . நான் நீ பிற்காலத்தில் செய்யும் சாதனையைப் பார்க்க இருப்பேனா என்று தெரியவில்லை . ஆனால் நீ அந்த உயரத்திற்கு செல்ல நான் என் பங்கினை செய்துவிடவேண்டும் . எழுந்து பள்ளிக்கு கிளம்பு என்று சொன்னார் . கணிதத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த் குமாருக்கு கேம்பிரிட்ஜில் படிக்க இடம் கிடைத்தும் கையில் பணம் இல்லாத சூழ்நிலையில் அக்கனவு கனவாகவே போய்விட்டது . இவரது பல்வேறு கட்டுரைகளை ஆய்வு இதழ்கள் வெளியிட்டுள்ளன . 1994 ஆம் ஆண்டில் இவரது தந்தை இறந்துவிட பொருளாதார சிக்கலால் படிப்பை கைவிடவேண்டிய சூழல் . நகரத்தின் தெருக்களில் அப்பளம் விற்றபடி நிலைமையை சமாளித்திருக்கிறார் . பிறகு பல்வேறு தனியார் நிறுவனங்களில் கணிதம் கற்பித்திருக்கிறார் . 1992 இல் கணிதம் தொடர்பான கிளப் ஒன்றை தொடங்கியவர் பின்னாளில்

வேலைவாய்ப்பு, மேம்பாடு ஆகிய நேர்மறை விஷயங்களை தேஜஸ்வி யாதவ் பேசி வாக்குகளைப் பெற்றார்!

படம்
            சஞ்சய் குமார் பேராசிரியர் சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டிஸ் காங்கிரஸ் கட்சி தான் நினைத்த இலக்கை எட்ட முடியவில்லை . கூட்டணிக் கட்சியாக இருந்தும் இந்த நிலை . மாநில கட்சிகள் வலுப்பெற்று வருவதை இந்த நகிழவுகள் காட்டுகின்ற்ன என்று கூறலாமா ? பீகாரில் 70 இடங்களை வாங்கி 19 இல் மட்டும் வென்ற காங்கிரஸ் , தனது அந்தஸ்தை இழந்துவிட்டது என்றுதான் கூறமுடியும் . மாநிலங்களில் வலுவாக உள்ள கட்சிகளோடு காங்கிரஸ் கூட்டணி வைத்துத்தான் சில மாநிலங்களை ஆண்டு வருகிறது . அந்த மாநில கட்சிகள் பலம் பொருந்தியவையாக மாறுகின்றன . காங்கிரஸ் அப்படி வலுவாக மாறவில்லை . இதனை பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் நிலையைப் பார்த்தாலே புரிந்துகொள்ளமுடியும் . லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சிராஜ் பாஸ்வான் மகாபந்தன் கூட்டணியை வெற்றிபெறச்செய்திருப்பாரா ? அப்படி முழுமையாக கூறிவிட முடியாது . நிதிஷூக்கு எதிரான ஓட்டுகளை சிராஜ் பாஸ்வான் பெற்றிருக்கிறார் . ஆனால் இது எப்படி ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு உத வும் . அவர்கள் சிராஜின் வாக்குகளைப் பெற முடியாது . பாஜகவின

பீகார் அரசியல், சாதியிலிருந்து விலகி மேம்படவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்! - முகேஷ் சாஹ்னி

படம்
          நேர்காணல் முகேஷ் சாஹ்னி விகாஷீல் இன்சான் கட்சி உங்கள் சாதி சார்ந்த சமூகம் பெரிதாக இல்லாத நிலையில் நீங்கள் அதிக சீட்டுகளை கேட்பது எப்படி சரியாக இருக்கமுடியும்? பொதுவான நம்பிக்கையாக குறிப்பிட்ட சாதி சார்ந்த ஆதரவு இருந்தால்தான் ஒருவர் பதவியில் இருக்க முடியும் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. 1990களுக்குப் பிறகுதான் இந்த எண்ணம் அதிகரித்துள்ளது. லாலுபிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான், நிதிஷ்குமார் ஆகியோர் இப்படி வென்று வந்தவர்கள்தான்.  என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது விபத்துதான். நிதிஷ்குமார் ஆட்சியை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்? இன்னும் இந்த மாநிலத்திற்கு செய்யவேண்டிய வேலைகள் அதிகம் உள்ளன. பிற மாநிலங்களை ஒப்பீடு செய்தால் பீகார் இன்னும் கீழேதான் உள்ளது. தேஜஸ்வி யாதவை விட நிதிஷ்குமார் தெளிவான திட்டங்களை உடையவர். முதல்வர் பதவிக்கு சரியான தேர்வாகவும் இருப்பார். பீகாருக்கான உங்கள் பார்வை என்ன? 2015ஆம் ஆண்டு நான நிஷாத் என்ற எங்கள் இனம் சார்ந்து குரலை எழுப்பினேன். நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால், எங்கள் இனம் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை தீர்க்க முயல்வேன். நீண்டகால நோக்கில்

மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது! - புதிய ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்

படம்
    பிக்சாபே     2019ஆம் ஆண்டில் நான்கு நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை நடந்துள்ளதை ஆய்வுகள் கூறியுள்ளன. 2009ஆம் ஆண்டில் 109 முதல் 10.4 என்ற அளவில் இருந்த தற்கொலை அளவு நடப்பில் 9.4 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. இருக்கும் மாநிலங்களிலேயே சிக்கிமில் 33.1 சதவீத தற்கொலை நடைபெற்று வருவதால் முதலிடத்தைபை் பெற்றுள்ளது. குறைவான தற்கொலை நடக்கும் மாநிலமாக பீகார் உள்ளது. யூனியன் பிரதேசத்தில் அந்தமான் தீவு 45 சதவீத தற்கொலையுடன் முதலிடத்தில் உள்ளது. தற்கொலைகள் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. நடக்கும் தற்கொலைகளில் மூன்றில் ஒன்று குடும்ப பிரச்னைகள் காரணமாக நடைபெறுகிறது. அடுத்த முக்கியமான காரணமாக வங்கியில் வாங்கும் கடன், திவால் பிரச்னை உள்ளது. குடும்ப பிரச்னை, நோய், கடன், போதைப்பொருட்கள், மது பயன்பாடு ஆகியவை அடுத்தடுத்த முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. 2019ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொள்பவர்களில் சுயதொழில் செய்பவர்கள், மாணவர்கள் அதிகளவு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மணமான பெண்கள் தற்கொலை செய்துகொள்வது 2009இல் 19.7 சதவீதமாக முன்னர் இருந்து இப்போது குறைந்துள்ளது. ஆனால் மாணவர்களின் தற்கொலை சதவீதம்

பள்ளியை மாற்றிய ஆசிரியர்! -பீகாரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் அகிலேஸ்வர் பதக்

படம்
                               பள்ளி ஆசிரியர் அகிலேஸ்வர் பதக்   பள்ளியை மாற்றிய ஆசிரியர் பீகாரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் அகிலேஸ்வர் பதக், 2020ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதை வாங்கியுள்ளார். பீகாரிலுள்ள சரண் மாவட்டைச்சேர்ந்த சன்புரா பைஸ்மாரா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இவர். என்ன செய்தார் என்று இவருக்கு நல்லாசிரியர் விருது? இந்த அரசுப்பள்ளிக்கு மாற்றலாகி வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. முதலில் வந்தபோது பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிவறை குடிக்க குடிநீர் என எந்த வசதியும் இல்லை என்பதைக் கவனித்தார். இதனால் அங்குள்ள மக்களை சந்தித்தார் அவர்களிடம் பள்ளியின் நிலையைச் சொல்லி நிதியுதவியைக்கேட்டார். அவர்கள் மூலம் 98 ஆயிரம் ரூபாய் நன்கொடை கிடைத்துது. தனது சேமிப்பிலிருந்து 21 ஆயிரம் ரூபாயை அதில் தன் சார்பில் கொடு்த்தார். பள்ளி ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து 5 ஆயிரம் ரூபாய் தந்தனர். இதன் காரணமாக இன்று பள்ளியில் சிசிடிவி கேமரா உள்ளது. சாப்பிடுவதற்கான அறை உள்ளது. மாணவர்களுக்கான வருகைப்பதிவு முறை டிஜிட்டலாக மாற்றப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவிகள் எண்ணிக்கை குறைந்து வந்தது. அப்படி வந்தவர்களும் கழிவறை இல்ல

ஊரடங்கு விதிகளால் மாணவர்களை அழைத்து வர முடியவில்லை! - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

படம்
commonwise மொழிபெயர்ப்பு நேர்காணல் நிதிஷ்குமார், மாநில முதல்வர், பீகார் பல்வேறு மாநிலங்களில் பீகாரைச் சேர்ந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு வரமுடியாமல் தடுமாறி வருகின்றனர். முகாம்களில் அவர்களை தங்க வைத்து இந்திய அரசு உணவுகளை வழங்கி வருகிறது. இதுபற்றி பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரிடம் பேசினோம். பீகாரிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கேரளம் என பல்வேறு மாநிலங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் பீகாரில் நோய்பரவல் சதவீதம் குறைவாக இருக்கிறது. என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள்? ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5 மணிப்படி பீகாரில் 329 நோயாளிகள் அடையாளம் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். அதில் 57பேர் முழுக்க குணமாகியுள்ளனர். இதில் 270 பேர் இன்னும் கண்காணிப்பில் உள்ளனர். நாங்கள் எங்கள் மாநிலத்தில் உள்ள ஆறு மையங்கள் மூலம் நோயாளிகளின் மாதிரிகளை சோதித்து வருகிறோம். 75 லட்சம் வீடுகளில் 4 கோடி மக்களுக்கு சோதனைகளை நடத்தி நோய்ப்பரவலைக் குறைத்துள்ளோம். மருத்துவமனைகள், சிகிச்சை வசதிகள், தனிமைப்படுத்தல் வசதிகளை செய்துள்ளோம். மத

மூன்று வேலைகளில் முன்னேறிய அரசு ஊழியர் - பீகார் பரிதாபம்

படம்
ஆஹா! மூன்று வேலையில் முப்பது வருடங்கள்! அரசு வேலை கிடைத்தால் சந்தோஷம். அதுவும் விண்ணப்பித்த மூன்று வேலைகளுமே கிடைத்தால் என்ன செய்வீர்கள்? நல்ல சம்பளம், எதிர்கால புரமோஷன் ஆகியவற்றை யோசித்து ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பீர்கள். பீகார்காரர் தனக்கு மூன்று வேலைகளும் தேவை எனத்தேர்ந்தெடுத்து 30 ஆண்டுகள் பணியாற்றி சம்பளம் வாங்கியிருக்கிறார். தற்போது ஆதார் கார்டு கேட்க தடுமாறி மாட்டிக்கொண்டுவிட்டார். இதன் அர்த்தம் அவரைப்பிடித்து விட்டார்கள் என்பதல்ல; தப்பித்து தலைமறைவாகிவிட்டார் என்பதுதான். கிஷன்கன்ச் பகுதியில் கட்டுமானத்துறை உதவிப் பொறியாளராக வேலை பார்த்த சுரேஷ் ராம்தான் இத்தகைய வேலையைப் பார்த்த திறமைசாலி. 1988 ஆம் ஆண்டு பாட்னாவில் ஜூனியர் பொறியாளராக பணிக்குச் சேர்ந்தார் ராம். பின்னர்தான் நீராதாரத்துறை உள்ளிட்ட பிற துறைகளில் பணி வாய்ப்பு கிடைத்தது. அனைத்தையும் ஆண்டவனே கொடுத்தான் என வாங்கிப்போட்டுக்கொண்டவர், அத்தனைக்குமான சம்பளம், பதவி உயர்வு என அனைத்தையும் பெற்றிருக்கிறார். அப்போதுதான் நிதிதொடர்பான பணிக்கான அவரது பணி, சம்பளம், ஆதார் கேட்க தயங்கியவர் பின்னர் தலைமறைவாகியிருக்கிறார்