படிப்பதற்கு பொருளாதாரமும், சூழலும் தடையாக இருக்க கூடாது! - ஆனந்த் குமார், பீகாரின் சூப்பர் ஆசிரியர்!

 

 

 

 

 

 

 

 

 

 

பொருளாதாரம் எனது படிப்பை குலைத்துவிட்டது!


ஆனந்த்குமார்.


பாட்னாவில் வாடகைவீட்டில் இருந்த அந்த சிறுவனை பள்ளி செல்வதற்காக அதிகாலையில் காலைத் தொட்டு எழுப்புவது தந்தை ராஜேந்திர பிரசாத்தின் வழக்கம். ஒருநாள் அப்படி எழுந்த சிறுவன், எதற்கு இப்படி எழுப்புகிறீர்கள் என்று கேட்டான். நான் நீ பிற்காலத்தில் செய்யும் சாதனையைப் பார்க்க இருப்பேனா என்று தெரியவில்லை. ஆனால் நீ அந்த உயரத்திற்கு செல்ல நான் என் பங்கினை செய்துவிடவேண்டும். எழுந்து பள்ளிக்கு கிளம்பு என்று சொன்னார். கணிதத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த் குமாருக்கு கேம்பிரிட்ஜில் படிக்க இடம் கிடைத்தும் கையில் பணம் இல்லாத சூழ்நிலையில் அக்கனவு கனவாகவே போய்விட்டது. இவரது பல்வேறு கட்டுரைகளை ஆய்வு இதழ்கள் வெளியிட்டுள்ளன. 1994ஆம் ஆண்டில் இவரது தந்தை இறந்துவிட பொருளாதார சிக்கலால் படிப்பை கைவிடவேண்டிய சூழல். நகரத்தின் தெருக்களில் அப்பளம் விற்றபடி நிலைமையை சமாளித்திருக்கிறார். பிறகு பல்வேறு தனியார் நிறுவனங்களில் கணிதம் கற்பித்திருக்கிறார். 1992இல் கணிதம் தொடர்பான கிளப் ஒன்றை தொடங்கியவர் பின்னாளில் அதனை ராமானுஜம் இன்ஸ்டிடியூட் என்றபெயரில் மாணவர்களை கற்பிக்கத் தொடங்கியிருக்கிறார்.

Super 30 by Anand Kumar - Patna, Bihar - Yewosab

2001ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை 510 பொறியாளர்களை உருவாக்கியிருக்கிறார் ஆனந்த்குமார். அரசு செய்யவேண்டிய வேலையை தானே தோளில் சுமந்து ஆண்டுதோறும் 30 மாணவர்களைத் தேர்நெடுத்து அவர்களுக்கு உணவு, இருப்பிடம், கல்வி கொடுத்து தேர்வுகளை எழுத வைத்து வருகிறார். ஐஐடியில் சேருவதற்காக மட்டுமே 440 பேர் தேர்வாகியிருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய சமாச்சாரம்.


பாட்னாவில் கணக்கில் திறமையான மாணவர்கள் இருந்தாலும் அரசு பள்ளிகளில் உள்ள வசதிகளைக் கொண்டு அவர்கள் மேலே படிக்க முடியாமல் போகிறது. பொருளாதார இடைவெளியோடு கல்வியும் சேர்ந்துகொள்கிறது. அவர்கள் வாழ்க்கை நம்பிக்கையின்றி உள்ளது எனும் ஆனந்த்குமார் அவர்களுக்கு உதவி செய்து வாழ்க்கை மேம்பட முயன்று வருகிறார். இவரது வாழ்க்கை சூப்பர் 30 என்ற பெயரில் திரைப்படமாகி இருக்கிறது. முகமூடி அணியாத சூப்பர் ஹீரோக்களும் உலகில் உண்டு என்பதை நிஜமாக்கியிருக்கிறார் ஆனந்தகுமார்.



இந்தியா டுடே


அமிதாப் ஶ்ரீவஸ்தவா



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்