மாரடைப்பு வந்தாலும் மக்களுக்கு சிகிச்சை செய்வேன்! - அர்ப்பணிப்பான கேரள மருத்துவரின் கொரோனா சாதனை!

 

 

 

 

 

 

Picture of Dr Santosh Kumar SS (right) Dr Sajeesh Gopalan. (News18)
மருத்துவர் சந்தோஷ்(மஞ்சள் உடையில்)

 

 

 

 

சந்தோஷ்குமார்


மருத்துவர்


நோயாளியைத் தேடித்தான் மருத்துவர்கள் முன்னர் சென்று வந்தார்கள். ஏன் தெரியுமா? மருத்துவரை தேடி நோயாளிகள் அலைந்தால் அவர்களின் நோய் இன்னும் கூடுதலாக அதிகரித்துவிடும் ஆபத்து உள்ளது என்பதால்தான். மருத்துவர் சந்தோஷ்குமார் தொற்றுநோ்ய் பாதிப்புள்ள சியரா லியோன், போர் ஆபத்துள்ள சிரியா என எந்த இடத்திலும் தயக்கமே இல்லாமல் சென்று தனது மருத்துவச்சேவையை அளித்துள்ளார்.


இருபது ஆண்டுகாலத்தில் நாற்பது நாடுகளுக்கு சென்று மருத்துவச் சேவையை அளித்துள்ளார். கேரளத்தின் திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவக்கல்லூரியில் அவசரகால சிகிச்சைத் துறையின் டெபுடி சூப்பிரடெண்டாக பணியாற்றிவருகிறார். இந்த மருத்துவக்கல்லூரி தொடங்கியபோது இவர் உட்பட பல்வேறு மருத்துவர்களுக்கு எப்படி செயல்படுவது என்ற எந்த நூலும் பின்பற்றுவதற்கு கிடையாது. அனைத்துமே அனுபவ பாடங்களாக கற்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிகிச்சைய உயர்த்தியுள்ளனர். மாநிலத்தின் முக்கியமான மருத்துவமனை, பல்வேறு அதிகாரிகளால் அடிக்கடி பார்வையிடப்படும் இடமாகவும் உள்ளது.


ஜனவரியில் முதல் கொரோனா வழக்கு கண்டறியப்பட்டவுடன் இந்தியாவிலேயே முதல்முறையாக தனிமைப்படுத்தும் வார்டை உருவாக்கியுள்ளார் சந்தோஷ். இவர் முன்னரே எபோலா, நிபா வைரஸ்களை எதிர்கொண்ட திறமை கொண்டவர். இதனால் தனிமைப்படுத்தும் பகுதி, சோதிக்கும் பகுதி, சிறப்பு ஐசியு ஆகியவற்றை எளிதாக உருவாக்க முடிந்திருக்கிறது. 2018ஆம் ஆண்டு நிபா வைரஸ் தாக்குதலால் கோழிக்கோட்டில் 17பேர் பரலோக ப்ராப்தி அடைந்தனர். இரண்டாயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தியாவில் கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஐந்தாவது இடம் கேரளத்துக்கு. ஆனாலும் கூட இறப்பு சதவீதம் இங்கு பிற மாநிலங்களை விட குறைவுதான். மூவாயிரம் பேர்களுக்கு குறைவாகவே கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். முதலில் சரியான பொருட்கள், உடைகள் கிடைக்காமல் சிகிச்சை செய்துவந்தனர். மேலும் வீட்டுக்கு கூட போக முடியாதபடி நோயாளிகளின் வருகை இருந்துள்ளது.


நோயாளியில் ஒருவர் இறந்துவிட நிலைமை மோசமாகியது. அவரை முறையாக அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்வதுவிட்டு காசர்கோடு சென்று அங்குள்ள மருத்துவக்கல்லூரியில் கொரோனாவுக்கான மருத்துவமனையை தொடங்கினார் சந்தோஷ். அங்கு கூட பணிபுரிவதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் நிலையை சமாளித்து இருநூறு படுக்கைகளை ஏற்பாடு செய்தனர். அங்கு ஏழு நோயாளிகள் வந்து சேர்ந்துவிட்டது கூட விரைவிலேயே நடைபெற்றது. மகாராஷ்டிரத்தில் கொரோனா நோயாளிகள் அதிகரிக்க, அங்குள்ள அரசு சந்தோஷின் உதவியை நாடியுள்ளது. அங்கும் சென்று உதவிகளை வழங்கியுள்ளார். பின்னர் செப்டம்பரில் கேரளத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. அதற்கு முக்கியமான காரணம், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறைதான்.


இடையறாத பணி காரணமாக மாரடைப்பு வந்திருக்கிறது. இப்போதும் கூட நான் உயிரோடு இருப்பது சமூகத்திற்கு சேவை செய்வதற்குத்தான். சிரியா, இரான், ஈராக் ஆகிய நாடுகளில் பயின்ற மருத்துவ சிகிச்சைகளை மக்களுக்கு பயன்படுத்துவேன் என உறுதியாக பேசுகிறார்.


போர்ப்ஸ்

மனு பாலச்சந்திரன்











கருத்துகள்