பச்சோந்தியாக குணம் மாறினாலும் காதலை மறக்காதவன்தான் டோனி! - ஊசரவெலி - சுரேந்தர் ரெட்டி
ஊசரவெல்லி
காஷ்மீரில் என்டிஆர் ஜூர்(டோனி), தமன்னாவை(நிகாரிகா) சந்திக்கிறார். தீவிரவாதிகள் ஒவ்வொருவராக பிடித்து வைத்துள்ளவர்களை கொன்று கொண்டு இருக்கிறார்கள். இதனால் என்டிஆர், தான் இன்னும் காதல், முத்தம், கல்யாணம் என எதுவுமே செய்யவில்லை என ஆதங்கப்பட அவருக்கு நச்சென முத்தம் கொடுத்து வாழ்க்கையை பூரணமாக்குகிறார். பின்னர் அங்கிருந்து தப்பிவிடுகிறார்கள்.
பின்னர் இருவரும் சந்திக்கிறார்கள். டோனி நிகாரிகாவை காதலிக்க தொடங்குகிறான். அது அவளது தோழிக்கு வித்தியாசமாக தோன்றுகிறது. ஆனால் டோனிக்கு முன்பாகவே மந்திரியின் மகன் நிகாரிகாவை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுவிடுகிறான். ஆனால் டோனியைப் பொறுத்தவரை அதனால் என்ன என்று பதினைந்து நாள் டைம் கொடுங்கள் என்று நிகாரிகாவிடம் நேரம் கேட்டு காதலிக்கிறான். படத்தில் என்னதான் கதை என இந்த இடத்தில் நிறையப் பேர் பொறுமையிழந்து விட வாய்ப்பு அதிகம்.
ஆனால் இது சுரேந்தர் ரெட்டியின் படம். எனவே படத்தின் பின்பகுதி அழுகையான
படத்தின் பெயரை பச்சோந்தி என தமிழில் சொல்லலாம். மனதில் நினைப்பது ஒன்று, கண்ணில் காட்டுவது ஒன்று, பேசுவது மற்றொன்று. இதைத்தான் தொடக்க காட்சியில் பிரபாஸ் சீனு முரளி சர்மாவுக்கு புரிய வைப்பார்.
உண்மையில் நிகாரிகா யார், அவளை தோழி என்று சொல்லும் சித்ராவுக்கு அவள் என்ன உறவு, அவளை சுற்றி வரும் டோனி நண்பனா, காதலனா என்ற விஷயங்களை தெரிந்துகொண்டால் படம் முடிந்துவிடும்.
படத்தின் கதை, காமெடி, நெகிழ்ச்சி, வன்மம், காதல் என அத்தனையையும் ஆல்ரவுண்டராக தோளில் ஏற்றி பின்னி எடுப்பவர் என்டிஆர் ஜூர்தான். படம் முழுக்க நடிப்பு ஆகட்டும், நிகாரிகா என துள்ளி ஆடும் நடனம் ஆகட்டும் இறுதிக்காட்சியில் நம்பிக்கையிழந்து பார்க்கும் காட்சியாகட்டும் அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். நிகாரிகாவான தமன்னாவிற்கு பிளாஷ்பேக் காட்சியில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். என்டிஆரை பணம் கொடுத்து வேலையை செய்ய வைக்க முயலும் காட்சி இதற்கு உதாரணம்.
காமெடி கிங்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக