யாரும் ரீடேக்கை தேவையின்றி எடுக்க மாட்டார்கள்! - சஞ்சய் மிஸ்ரா, இந்தி நடிகர்
சஞ்சய் மிஸ்ரா
இந்தி நடிகர்
இந்நாட்களில் உங்களை இயக்குவது எது?
நான் இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன். முதலில் ரோகித் ஷெட்டியின் சர்க்கஸ் படத்தில் நடிக்கிறேன். இரண்டாவது, சினிமாவில் சிறந்த திறமையுள்ளவர்களுடன் பணியாற்றுவது. அந்த வகையில் நான் சந்தோஷ் சிவனுடன் பணியாற்றுகிறேன். அவரிடம் உதவியாளராக வேலை செய்யவேண்டும் என்பது எனது ஆசை. அவர் இயக்கும் படத்தில் நான் நடிக்கவுள்ளேன். அடுத்து பச்சன் பாண்டே படத்தில் நடிக்கவுள்ளேன். இப்போதைக்கு நான் கவனத்தில் கொண்டுள்ளது இவைதான். அடுத்து மார்ச்சுக்குப் பிறகுதான் பார்க்கவேண்டும்.
நீங்கள் சாணக்யா படத்தில் 25 டேக்குகளை எடுத்தீர்கள் என்று ஒருமுறை கூறினீர்கள். அது ஏன்?
இல்லை. உங்களுக்கு நீங்கள் நடிக்கும் ஷாட் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். அதனால்தான் அந்தளவு எண்ணிக்கை தேவைப்படுகிறது. இப்போது நடிக்கும் சர்க்க்ஸ் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு காட்சிக்கு 19 டேக்குகள் எடுத்தேன். ரோகித்திற்கும் எனக்கும் அதில் ஏதோ தவறு தென்பட்டது. நாங்கள் அதை வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டோம். ரீடேக் எடுப்பதில் தவறு என்ன இருக்கிறது? படம் பார்க்கும்போது காட்சி நன்றாக வருவதுதானே முக்கியம். ஒரே டேக்கில் நடிப்பது சிறப்பானது என்று மக்கள் சொல்வதும் சிறப்பானது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
இயக்குநர்களின் கதைகளை படிப்பதில்லை. அவர்கள் சொல்வதைக் கேட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிடுகிறீர்களாமே?
எனக்கு இயக்குநர் கதையை காட்சிரீதியாக விளக்கினால் போதும். அதற்கு அக்கதையை மனதால் நான் உணரவேண்டியதில்லை. அது என்னுடைய பழக்கமில்லை. ஸ்கிரிப்டை நான் படிப்பது அதிலுள்ள வசனங்களுக்காகதான். மற்றபடி இயக்குநருக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமைதான் முக்கியம். இயக்குநர் சிறப்பாக இருந்தாலும் ஒளிப்பதிவாளர் சரியாக வேலை செய்யவில்லை என்றால் பயனில்லை. இயக்குநரால் நிறைய துறைகளை நிர்வகிக்க முடியவில்லையென்றாலும் கூட பிரச்னைதான்.
நீங்கள் அமிதாப் பச்சனைப் பார்த்து வியந்தவர். இன்று இளைஞர்களான நடிகர்கள் உங்களுடன் நடிப்பது குறித்து வியக்கிறார்கள் எப்படி?
நான் அவர்களுடன் உட்கார்ந்து பேசுகிறேன். இது வேடிக்கையானதுதான். இளைய
நடிகர்களுக்கு ஏதாவது சொல்லித்தருமளவு நான் புத்திசாலி அல்ல.
என்னிடமும், அவர்களிடமிருந்தும் நான் கற்றுக்கொண்டு வருகிறேன். அவர்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் நான் கற்றுக்கொண்டு வருகிறேன்.
சினிமா மீதான காதல்லால் மும்பைக்கு வந்தீர்கள். நடிக்கவேணும் என்பதற்காக வரவில்லை?
சினிமாவின் மீதான காதல் எனக்கு இப்போதும் குறையவில்லை. நான் சினிமாவை விரும்பி செய்யவில்லை. ஆனால் அதனை செய்யும்போது விரும்பி செய்கிறேன். அதுதான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது
டெய்லி பயனீர்
கருத்துகள்
கருத்துரையிடுக