நவீன ஜனநாயக இந்தியாவிற்கான கனவு எளிதாக இருக்கப்போவதில்லை! - ஜவாகர்லால் நேரு

 

 

 

 

 


 

 

விதியுடன் ஒரு போராட்டம்!


பல்லாண்டுகளுக்கு முன்னர் இந்தியா விதியுடனான போராட்டத்தை தொடங்கியது. அதற்கான உறுதிமொழியையும் எடுத்தது. இன்று நாம் அதே நிலையை எட்டியுள்ளோம். முன்னர் நாம் செய்த உறுதிமொழியைப் போல அல்லாமல் இம்முறை தற்போதைய சூழலுக்கு ஏற்ப போல முடிவெடுக்கலாம். முழு உலகமும் அமைதியாக உறங்கும் நேரம் இந்தியா தனது சுதந்திரம் மற்றும் வாழ்க்கைக்காக விழித்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலமாக கஷ்டப்பட்டு வந்த மக்கள் பழைய காலம் முடிந்து அனைவரும் புதிய உலகில் நுழைகிறோம். நாம் இந்தியாவிற்கான சேவைக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வதோடு, ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தீர்க்கவும் உறுதிபூணவேண்டும்.


இந்தியாவின் வரலாற்றில் நாம் கண்டறிய முடியாத நூற்றாண்டுகளாக வெற்றியும் தோல்வியும் உள்ளன. அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டமான நிகழ்ச்சிகள் நடந்தபோதும் இந்தியா தனது பார்வையை இழக்கவில்லை. அவற்றின் வழியே தன்னை மீண்டும் கண்டுபிடித்துக்கொண்டது. நாம் இன்று இந்தியாவின் சாதனைக்காக கொண்டாடிக்கொண்டிருந்தாலும் இன்னும் பெரும் சாதனைகள் எதிர்காலத்தில் நமக்காக காத்திருக்கின்றன. எதிர்காலத்தில் காணப்போகும் இவற்றை நாம் சந்திக்க தயாராக உள்ளோமா?


சுதந்திரமும், அதிகாரமும் நமக்கு பெரும் பொறுப்பை தருகின்றன. மக்களவையைத் தாண்டி இறையாண்மை மிக்க அமைப்பு, இறையாண்மை கொண்ட மக்களை வெளிப்படுத்தி வருகிறது. சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலங்களில் கடுமையான வேதனைகளை இதயங்களில் அனுபவித்துள்ளோம். அவற்றில் சில இப்போதும் கூட தொடர்கின்றன. எது எப்படியோ, கடந்த காலம் என்பது முடிந்துவிட்டது. நம் கண் முன் நிற்கும் எதிர்காலத்தை எதிர்கொண்டாக வேண்டும்.


எதிர்காலம் என்பது நமக்கு எளிதாக இருக்கப்போவதில்லை. முன்னர் நாம் எடுத்துக்கொண்டதைப் போல இன்று எடுக்கும் உறுதிமொழி அமையாது. வேதனையில் வாடும் இந்தியாவுக்கான சேவை என்பது வறுமையில் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு செய்யும்பணிகள்தான். நான் இங்கு கூறுவது, வறுமை, வாய்ப்புகளை வழங்குவதில் காட்டும் பாகுபாடு, புறக்கணிப்பு ஆகிய பிரச்னைகளைத்தான். நம் தலைமுறையில் உள்ள ஒருவரின் பேராசை என்பது நம் மக்கள் அனைவரின் கண்களில் பெருகும் கண்ணீரைத் துடைத்தெறிவதுதான். கண்ணீரும், வேதனையும் இந்திய மக்களிடையே இருக்கும்வரை நாம் அவர்களுக்கு செய்யும் பணிகள் நிறைவடையாது.


நாம் நமது கனவுகள் நிறைவேற கடுமையாக உழைத்தாக வேண்டும். இது இந்தியாவுக்கான கனவு. இந்தியாவுடன் சேர்ந்து உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாகவே இணைந்துள்ளன. இன்று வாழும் மக்கள் இதனை எளிதாக நினைத்துப் பார்க்க முடியும். அமைதி என்பதை பிரிக்க முடியாது. அதைப்போலவேதான் வளர்ச்சி என்பதும் கூட. ஒரே உலகமாக நாம் இல்லாமல் தனித்தனி நாடுகளாக பிரிந்திருப்பது ஆபத்து விளைவிக்க கூடிய ஒன்றே.



இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளான நாம் உண்மை, நம்பிக்கையுனன் பெரும் சாகசத்திற்கு தயாராக இருக்கவேண்டும். இந்த நேரத்தில் நாம் சிறுசிறு, அழிவு ஏற்படுத்தும் விமர்சனங்களில் ஈடுபட நேரத்தை செலவிட வேண்டாம். அடுத்தவர்களை பழித்துப்பேச, நம்பிக்கையின்றி பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்தியாவை அனைத்து மக்களும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக கட்டுவது முக்கியமானது.


இறுதியாக இந்த நள்ளிரவில் மக்களவையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் கீழேயுள்ள உறுதிமொழியை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.


இந்த நேரத்தில் இந்திய மக்கள் சுதந்திரம் பெறுவதற்கான பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரான நான் இந்தியாவிற்கான மனிதநேய சேவைகளை நாட்டிற்கும், மக்களுக்கும் செய்வேன் என்றும், தொன்மை தேசமான இந்தியா உலக அமைதி மற்று்ம நலத்திற்காக பாடுபடும் என்று உறுதிகூறுகிறேன். தற்போது அவையில் இல்லாத உறுப்பினர்களுக்கு அடுத்த அமர்வில் குடியரசுத்தலைவர் உறுதிமொழியை சொல்லி ஏற்க வைப்பார்.


Vincent kabo





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்