கிடைத்த அன்பை பற்றிக்கொள்ள காதலன் எடுக்கும் முடிவு! - நீ கோசம் - ரவிதேஜா, மகேஸ்வரி
நீ கோசம்
ஓவியங்களை வரைந்துகொடுக்கும் கலைஞர், கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் பெண்ணை காதலிக்கிறார். அவரது அப்பா தீவிரமான சாதி வெறியர். தனது தம்பி பெண்ணை அவரே கைப்பட கொன்றிருக்கிறார். இந்த காதல் ஜோடியின் திருமணத்தை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
ரவிதேஜா முடிந்தவரை எளிமையான கதைக்கு நியாயம் சேர்க்க நடித்திருக்கிறார். மகேஸ்வரியும் அப்படியே. ரவிதேஜாவின் மீது காதல் வந்துவிட்டபோதும், அதை எப்படி சொல்வது, வீட்டில் ஏற்கமாட்டார்களே என தடுமாறுவது, இறுதியில் ரவியின் நிர்பந்தத்தால் அதனை ஏற்பது என கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார்.
படம் வணிகப்படமாக இருக்கவேண்டுமா, உணர்ச்சிகளைக் கொட்டும் இயல்பான படமாக வரவேண்டுமா என்பதில் இயக்குநருக்கு பல்வேறு குழப்பங்கள் உள்ளன. குத்துப்பாட்டு இல்லாத குறையை இறுதிப் பாடலில் கவர்ச்சிகர ஆடையை நாயகிக்கு கொடுத்து பீச்சில் ஆடப்பாடச்சொல்லி நிவர்த்தி செய்திருக்கிறார்கள்.
மகேஸ்வரியின் அப்பாவை சமாதானம் செய்து கல்யாணம் செய்துகொள்ள ரவி முனைகிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கிறார். ஆனால் மகேஸ்வரியின் அன்பையும் ரவியால் கைவிட்டுவிடாத சூழல். காரணம், ரவி ஆதரவற்றவராக வளர்ந்தவர். நண்பர்கள் மட்டுமே துணை. இந்த சூழலில் அவர் தனது வாழ்க்கைக்கான எடுக்கும் முடிவு, அவரது காதலை முடிவுக்கு கொண்டு வருகிறது. அப்படி என்ன முடிவு எடுத்தார் என்பதுதான் இறுதிக்காட்சி.
தியாகம்!
கோமாளிமேடை
கருத்துகள்
கருத்துரையிடுக