மீண்டும் அணுஉலைகள்!
மீண்டும் அணுஉலைகள்! இந்தியா 100 ஜிகாவாட் அளவிலான அணுஉலைகளை 2047ஆம் ஆண்டுக்குள் அமைக்க திட்டமிட்டுள்ளது. உலக நாடுகள் அணுஉலைகள் ஆபத்தானவை என உணர்ந்து பின்வாங்கும் நிலையில், இந்தியா அணுஉலைகளை அதிகமாக அமைப்போம் என களமிறங்கி நாட்டை ஒளிரச்செய்ய முடிவு செய்துள்ளது. 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் இடிந்தகரை, திருநெல்வேலியிலுள்ள கூடங்குளம் ஆகிய இடங்களில் அணுஉலைகளுக்கு எதிரான அமைதிப்போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது. அதே ஆண்டில் ஜப்பானின் புகுசிமா அணுஉலை விபத்தில் கதிரியக்க பாதிப்பு தீவிரமாக உணரப்பட்டது. கசிவு ஏற்பட்டு கடல் நீரில் கலந்தது. இதை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டு போராட்டக்காரர்கள், அணு உலை ஆபத்து என வாதிட்டனர். அறிவு, புத்திசாலித்தனம் என இரண்டுமே வடக்கு நாட்டு ஆட்களுக்கு கிடையாது என்பதால் எப்போதும் போல போராட்டக்காரர்கள் மீது வழக்கு தொடுத்தனர். 2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி போல ஒரு சம்பவம் நடந்தால், அதில் கூடங்குளம் அணுஉலை மாட்டினால் என மக்கள் பீதியுற்றனர். மக்கள் மீது அரசு ஏராளமான வழக்குகளை பதிவு செய்தது. இப்போதும் கூட முக்கியமான போராட்டக்காரர...