மீண்டும் அணுஉலைகள்!

 



மீண்டும் அணுஉலைகள்!


இந்தியா 100 ஜிகாவாட் அளவிலான அணுஉலைகளை 2047ஆம் ஆண்டுக்குள் அமைக்க திட்டமிட்டுள்ளது. உலக நாடுகள் அணுஉலைகள் ஆபத்தானவை என உணர்ந்து பின்வாங்கும் நிலையில், இந்தியா அணுஉலைகளை அதிகமாக அமைப்போம் என களமிறங்கி நாட்டை ஒளிரச்செய்ய முடிவு செய்துள்ளது.

2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் இடிந்தகரை, திருநெல்வேலியிலுள்ள கூடங்குளம் ஆகிய இடங்களில் அணுஉலைகளுக்கு எதிரான அமைதிப்போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது. அதே ஆண்டில் ஜப்பானின் புகுசிமா அணுஉலை விபத்தில் கதிரியக்க பாதிப்பு தீவிரமாக உணரப்பட்டது. கசிவு ஏற்பட்டு கடல் நீரில் கலந்தது. இதை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டு போராட்டக்காரர்கள், அணு உலை ஆபத்து என வாதிட்டனர். அறிவு, புத்திசாலித்தனம் என இரண்டுமே வடக்கு நாட்டு ஆட்களுக்கு கிடையாது என்பதால் எப்போதும் போல போராட்டக்காரர்கள் மீது வழக்கு தொடுத்தனர்.

2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி போல ஒரு சம்பவம் நடந்தால், அதில் கூடங்குளம் அணுஉலை மாட்டினால் என மக்கள் பீதியுற்றனர். மக்கள் மீது அரசு ஏராளமான வழக்குகளை பதிவு செய்தது. இப்போதும் கூட முக்கியமான போராட்டக்காரர்களை பேசவிடாமல் செய்ய வழக்குகள் நடந்தபடியே உள்ளன. இதில், உதயகுமார் முக்கியமானவர். வன்முறை இல்லாத போராட்டம் பற்றிய நூலை எழுதியவரை, தேசதுரோக வழக்கு போட்டு இன்றுவரை சித்திரவதை செய்து வருகிறார்கள். அதை அவர் எப்போதும் போல மாறாத புன்னகையுடன் எதிர்கொண்டு வருகிறார்.

2023ஆம் ஆண்டு நிதிஆயோக் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், புதுப்பிக்கதக்க ஆற்றல் ஆதாரங்களின் வழியாக ஆற்றலை உற்பத்தி செய்வது பற்றி பேசப்பட்டிருந்தது. அந்த வகையில் மீண்டும் அணுஉலைகளை அமைப்பது, முக்கிய பங்களிப்பாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டது.

செர்னோபில், மூன்று மைல் தீவு, புகுசிமா ஆகிய இடங்களில் நடந்த அணு உலை விபத்துகள் சாதாரணமானவை அல்ல. பல நூறு ஆண்டுகளுக்கு கதிரியக்க பாதிப்பு தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவில் 102 அணு உலைகள் உள்ளன. இதில் ரியாக்டர்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. பிரான்சில் 64 அணு உலைகள் உள்ளன. எழுபது சதவீத மின்சாரத்திற்கு அணுஉலைகளே உதவுகின்றன. புதிய ரியாக்டர்களை நிறுவும் முயற்சியில் அரசு உள்ளது. சீனாவில் 58 அணு உலைகள் உள்ளன. காலநிலை மாற்றத்திற்காக நிலக்கரியை விடுத்து அணுஉலை பக்கமாக அரசு சாய்ந்து வருகிறது. திட்டங்களை விரிவாக்கியுள்ளது. புகுசிமா பாதிப்புக்கு பிறகு, ஜெர்மனி தனது கால்வாசி அணுஉலைகளை மூடிவிட்டது.

இந்தியா, அணு உலைகளை அமைப்பதில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம், ரஷ்யாவின் அணுஉலை கார்ப்பரேஷனான ரோசாட்டம் உடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அணுஉலை பாதுகாப்பு பற்றிய மசோதா 2011ஆம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அணுஉலை பற்றிய புகார்களை விசாரிக்க விதிகளை வகுக்க ஏஇஆர்பி எனும் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் பொறுப்பேற்றுள்ளது. தன்னாட்சி கொண்ட அமைப்பு என்று கூறினாலும், நடைமுறையில் அப்படி இருக்க வாய்ப்பு குறைவு. ரியாக்டர்களை வாங்குவதில் வெளிநாட்டினரை சார்ந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இப்போது நாட்டின் ஆற்றல் தேவை 250 ஜிகாவாட்டாக உள்ளது. 2032ஆம் ஆண்டு, தேவையான ஆற்றல் 366ஜிகாவாட்டாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் மாற்று தொழில்நுட்பத்தில் விலை குறைவானவற்றை தேடுவது கடினமாக மாறிவருகிறது.

மூலம் எகனாமிக் டைம்ஸ் - நிர்மல் ஜான்  
தமிழில்
இலியா









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!