பிழைத்திருப்போம்! மின்சாரம் என் மீது பாய்கின்றதே?

 



பிழைத்திருப்போம்!
மின்சாரம் என் மீது பாய்கின்றதே?
மின்சாரம் இல்லாமல் மனிதர்கள் வாழ்ந்த காலம் ஒன்றுண்டு. இன்று அப்படியான காலம் சாத்தியமில்லை. அதை சாத்தியப்படுத்த இயற்கை பேரிடர்கள் முயல்கின்றன. மின்சாரம் இல்லையென்றாலும் எப்படி சமாளிப்பது என்று பார்ப்போம்.

ஜெனரேட்டர்களை வாங்கவில்லையா? வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். கூடவே அதற்கான பெட்ரோல், டீசலும் போதுமான அளவுக்கு தேவை. அடிப்படையில் உணவு, நீர், தங்கும் இடம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகவே மின்சாரம் வரும். எனவே மின்சாரத்தையே நினைத்து அடிப்படை விஷயங்களை கோட்டை விட வேண்டாம்.

செல்போன், இபுக் ரீடர், ஷேவிங் கருவிகள், அடுப்பு என அனைத்துமே மின்சாரத்தில் இயங்குபவை என்றால் மின்சாரத்தை ஜெனரேட்டர் வழியாக பெறுவதற்கு முயலவேண்டும். வேறு வழியே இல்லை. வீட்டில் சோலார் முறையில் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்தாலும் நன்மையே.

ஆபத்துகாலத்தில் ஜெனரேட்டர்களை அதிக விலைக்கு விற்பார்கள். எனவே, முன்னமே வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. பவர் பேங்குகளின் காலம் இது. எனவே, அவற்றை சார்ஜ் போட்டு வைத்தால் போன்களை உயிரோடு வைத்துக்கொள்ளலாம். மின்சாரம் இல்லாதபோது போனில் பணத்தைக் கட்ட முடியாது. எனவே, கையில் கொஞ்சம் ரொக்கம் வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து காலங்களிலும் அரசின் டிஜிட்டல் பரிமாற்றம் உதவாது. கையில் பணம் இருந்தும் சாப்பிட உணவில்லாமல் வாழ்வது கொடுமையான நிலைமை அல்லவா?

மின்சாரம் இல்லாமல் போவது உங்கள் வாழ்க்கையை ஒரே நாளில் மோசமாக்கும். 20000 மில்லி ஆம்பியர் ஹவர்ஸ் சக்தியில் பவர் பேங்குகளை வாங்குவது முக்கியம். அப்போது போன்களை மட்டுமல்லாது டேப்லட்களைக் கூட சார்ஜ் செய்துகொள்ளலாம்.

டிஜிட்டல் பொருட்களை சார்ஜ் செய்வதை விட குறிப்பிட்ட தனித்தனி கேபிள்களை தேடி எடுத்து வைத்து செய்வது கடினமான பணி. எனவே, டிஜிட்டல் பொருட்களுக்கு ஏற்ப பொருத்தமான அசல் அல்லது போலி கேபிள்களை முன்னமே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வயர்லெஸ் பவர் பேங்குகளும் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றையும் கவனமாக பயன்படுத்தினால், போன்கள் உயிரோடு இருக்கும்.

எங்கு வேண்டுமானாலும் தூக்கிச்செல்லும் வடிவில் ஜெனரெட்டர்கள் சந்தையில் வருகி்ன்றன. இவற்றை முறையாக பராமரித்தால்தான் தேவைப்படும் பேரிடர், கலவர சூழலில் உங்களை, அன்புக்குரியவர்களை காக்க முடியும்.

ஜெனரேட்டர்களை உள் அறைகளில் வைத்து பயன்படுத்தாதீர். அதி்ல கார்பன் மோனாக்சைடு அதீதமாக உருவாகும், அது அப்படியே குளிர்சாதன எந்திரக் காற்றோடு கலந்தால் நமக்கே ஆபத்தாக முடியும். வீட்டில் இருந்து இருபது அடி தள்ளி வைத்து இயக்குவது நல்லது. ஜெனரேட்டர் பனி, மழையில் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும்.

சோலார் ஜெனரேட்டர்களை அபார்ட்மென்ட் மனிதர்கள் பயன்படுத்தலாம். சத்தம் வராது. மின்சாரமும் கிடைக்கும். சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகின்றன. அவ்வளவேதான் இதன் பணி. இன்வெர்டர் இணைந்து வரும் ஜெனரேட்டர்கள் விலை கூடுதலாக இருந்தாலும் அதை பயன்படுத்தலாம். அதன் பயன்கள் சாதாரண ஜெனரேட்டர்களை விட அதிகம்.

2

பேரிடர் காலத்தை எதிர்கொள்வது எப்படி?

நீங்கள் வசிக்கிறீர்களா, வாழ்கிறீர்களா எது எப்படி இருந்தாலும் சரி, உங்களை உயிரைக் காக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதற்கு இடம்தேவை. ஒன்று வாங்கினால் ஒன்று என உடைகளை நிறைய வாங்கி குவித்திருந்தால், அதை பிறருக்கு தானம் கொடுத்தாவது இடத்தை தயார் செய்யவேண்டும்.

உணவுகளை சமையல் அறையில் பாதுகாக்க வேண்டும். முதலுதவி பொருட்களை வேறு இடங்களைக்  கண்டுபிடித்து வைக்கலாம். கிடைக்கும் இடங்களையெல்லாம் பொருட்களை சேகரித்து வைக்க பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.

வீட்டுத்தோட்டத்தில் தேவையான மூலிகைகளை விதைத்து வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். புதினா, ரோஸ்மேரி, கற்றாழை ஆகிய மூலிகைகள் சிகிச்சைக்கு பயன்படும். வீட்டில் உணவுப்பொருட்களை பிறருக்கு தெரியாமல் வைக்க வேண்டும். பார்க்க வேறு ஏதாவது பொரு்ட்கள் கண்ணுக்கு என தெரியும். ஆனால், அதன் கீழே உண்மையான பொருட்கள் இருக்கும்.

மனிதர்கள் மூன்று நாட்கள் மட்டுமே நீரை அருந்தாமல் இருக்க முடியும். எனவே, அதற்குள் பாதுகாப்பான குடிநீரை அடைந்தே ஆக வேண்டும். நீரை பிடித்து கேன்களில் அடைத்து வைத்து பாதுகாக்கலாம். உறைபனி பொழியும் நாடு என்றால், உறைந்த ஐஸ்கட்டியைக் கூட குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எங்கும் தங்க முடியாமல் அலைந்துகொண்டிருக்கும்போது நீரால் வரும் வியாதிகள் தாக்கலாம். நீரை சுத்திகரிக்கும் மாத்திரைகள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் கன்டெய்னர்கள் தயாரிக்கும் கம்பெனிகளை பார்த்து வைத்து எது சிறந்ததோ அதை பயன்படுத்திக்கொள்ளலாம். முடிந்தளவு இடத்தை மிச்சம் பிடிக்கவேண்டும். பொருட்களை பெட்டியில் இட்டு அடைக்கும்போதே  அதில் லேபிள் ஓட்டிவிடவேண்டும். இல்லையெனி்ல குழப்பம் உருவாகும்.

இன்றைக்கு இடத்தை மிச்சம் செய்யும் படுக்கைகள் வந்துவிட்டன. அவற்றை வாங்கி பயன்படுத்துங்கள். கிடைக்கும் இடங்களில் எல்லாம் உணவுப்பொருட்களை சேமிக்கலாம். வீட்டில் தேடினாலே இப்படி நிறைய இடங்களைக் கண்டுபிடித்தால் நல்லது.

பல்வேறு இடங்களில் உள்ள பொருட்கள் என்னென்ன என்பதை எழுதி லிஸ்ட் எழுதிவைத்துக்கொண்டால் மறந்துபோகாது. வெறும் நினைவுகளை மட்டுமே நம்ப முடியாது.

பயன்படாத எந்திரங்களில் பணத்தை கவரில் போட்டு வைக்கலாம். அவசர காலங்களில் உதவும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!