அல்சீமர் நோயின் அறிகுறிகள்!
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
அல்சீமர் நோயின் அறிகுறிகள் என்னென்ன?
ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பது, ஒரே கதையை திரும்ப கூறுவது, கூறிக்கொண்டே இருப்பது, சமைப்பது, பழுதுபார்ப்பது போன்ற வேலைகளை மறந்துபோவது, திசை, முகவரி தெரியாமல் தடுமாறுவது, கட்டணம் செலுத்துவதை மறப்பது, குளிப்பதை மறப்பது, ஒரே உடையை அப்படியே அணிந்திருப்பது, இன்னொருவரின் முடிவுக்காக காத்திருப்பது, இன்னொருவரை சார்ந்திருப்பது.
புற்றுநோயின் வகைகள் என்னென்ன?
கார்சினோமா, சர்கோமா, லுக்குமியா, லிம்போமா
பாய்சன் ஐவி செடியை தொட்டவுடன் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுமா?
85 சதவீதம் பேருக்கு ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுகிறது. தோலில், உடையில் பாய்சன் ஐவி இலைகள் பட்டால், அந்த இடத்தை மென்மையான சோப்பு போட்டு கழுவவேண்டும். ஒவ்வாமை காரணமாக தலைவலி, காய்ச்சல், உடல் பலவீனம் ஏற்படலாம். இந்த பாதிப்பு ஆறு மணிநேரத்திற்கு நீடிக்கும்.
நன்றி
சயின்ஸ் ஹேண்டி புக்

கருத்துகள்
கருத்துரையிடுக