இடுகைகள்

கோமாளிமேடை எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடலில் மூழ்கிய பொக்கிஷக் கப்பல்கள்!

படம்
கடலில் மூழ்கிய பொக்கிஷக்  கப்பல்கள் !     உப்புக்காற்று பிசுபிசுக்க த்ரில்லான கப்பல் பயணங்கள் விடுமுறையைக் கழிக்க ஏற்றவைதான் என்றாலும் அதில் ஏற்படும் ஆபத்துக்கள் நிலத்திற்கு சற்றும் குறைந்ததல்ல . கப்பல் பயணம் ஆபத்து நிறைந்தது என்றாலும் அதன் சாகச அனுபவம் பலரையும் ஈர்த்து கடலோடு போராட வைக்கிறது . புயல் , சுறாமீன் , கொள்ளையர்கள் , அரசுகளின் துப்பாக்கிச்சூடு என இதையெல்லாம் தாண்டி கப்பல்கள் கடலில் நடமாடிக்கொண்டு இருக்கின்றன . விபத்தில் சிக்கிய கடலில் மூழ்கும் கப்பல்களை   மீட்பது நவீன காலத்திலும் மிகவும் கடினமான ஒன்றுதான் . கடலில் மூழ்கிய சில புகழ்பெற்ற கப்பல்களைப் பற்றித்தான் இங்கு தம் பிடித்து மூழ்கி காணப்போகிறோம் . வாருங்கள் ! மேரி ரோஸ் , இங்கிலாந்து     1511 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடற்படையில் இணைந்த மேரி ரோஸ் கப்பல் 33 ஆண்டுகள் சளைக்காமல் உழைத்து 1545 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில்புகழ்பெற்ற சிறப்பாக செயல்படும் திறன் கொண்ட ஆயுதம் தாங்கிய நெம்பர் 1 போர்க்கப்பலாக பலராலும் பாராட்டப்பெற்றது . 38 மீட்டர் நீளமும் , 600 டன்கள் எடையும் கொண்ட மேரி ரோஸ் கப்பல் வணிக கப்பலின் வட

கல்வி மொழி -முன்னோர்களின் வாய்மொழி

படம்
நம் முன்னோர்களின் வாய்மொழியாக . கல்வி மொழி மோகன்தாஸ் காந்தியின் கல்வி மொழி பெண்களிடையே கல்வியறிவின்மை     பெண்கள் சமுதாயத்தில் கல்வியறிவின்மை தோன்றியதற்கு வெற்றுச் சோம்பல் , செயல்திறனற்ற எண்ணம் என்று மட்டும் வரையறுத்துவிட முடியாது . இதுவே ஆண்களின் விஷயத்தில் தலைகீழாக நடக்கிறது . மேலாதிக்க ஆணவத்தில் ஆண்கள் சமுதாயம் பெண்களை மேலெழவே விடவில்லை என்பதே நிஜம் . ஆண்கள் பெண்களை போகப் பொருளாகவும் மனைவி என்ற பெயரில் வீட்டுவேலைகளை செய்யும் அடிமையாகவுமே நடத்தி கபட நாடகமாடுகின்றனர் . மனித சமூகத்தையே கருவில் சுமந்து உருவாக்கும் பெண்ணுக்கு கல்வியறிவைத் தராமல் மிகப்பெரிய பிழையை இழைத்துள்ளோம் . உழைப்போடு இணைந்த கல்வி     பள்ளிக்கல்வியில் அனுபவம் , சோதனை உள்ளிட்டவைகளுக்கு வாய்ப்புண்டா என்பதில் எனக்கு சந்தேகமே . தம் வாழ்வின் வழியே பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு உண்மையான கல்வியை அளிக்க முடியும் என்று திடமாக நம்புகிறேன் . இப்பண்ணையில் இருக்கும் இளைஞர்களுக்கு கல்வி கற்றுத்தரும் பணியை என் தோளில் ஏற்றுள்ளேன் . இங்கே குழுமியுள்ள இளைஞர்கள் பலரும் வேறுபட்ட வாழ்வியல் சூழலிலிருந்து வந்