இடுகைகள்

கோமாளிமேடை விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூல் அறிமுகம்! எனது போராட்டம் - ஹிட்லர்

படம்
எனது போராட்டம் ஹிட்லர் தமிழில்: கோலாலம்பூர் சுப்ரமணியம் சாந்தா பப்ளிஷர்ஸ் ரூ.200 மெயின் கெம்ப் என்ற நூலை இன்றும் புத்தக திருவிழாவில் தேடித்திரிபவர்கள் உண்டு. யூதர்களை கொன்றழித்தவர், சாத்தானின் நரவடிவம் என்றெல்லாம் கூறப்பட்டது இந்த கவர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். மெயின் கெம்ப் நூல், ஜெர்மானியர்களுக்கு திருமண பரிசாக வழங்கப்பட்டது என்று கூறுவார்கள். அப்படியென்ன இந்த நூலில் இருக்கிறது. அடால்ஃப் ஹிட்லரின் சிறுவயது தொடங்கி 1926 ஆம் ஆண்டு அவரது அபேதவாத தொழிற்கட்சி கலைக்கப்படும்வரை தனது அனுபவங்களை இந்நூலில் பேசியுள்ளார் ஆசிரியர். ஹிட்லர் தனது கருத்துக்களை நூல் வழியே வாசித்து உருவாக்கிக் கொண்டது மகிழ்ச்சிக்குரியது. என்றாலும் அரசியலில் ஈடுபடும்போது அதை தூக்கி எறிந்து விடுங்கள் என வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறார். தேசத்தை வஞ்சனையற்று நேசித்த ஹிட்லரைப் பற்றி இந்நூலில் தெளிவாக உணர முடியும்படி மொழிபெயர்ப்பு மொழி உள்ளது. இளமையில் படிக்கும்போதே பல்வேறு அமைப்புகள், நிகழ்வுகளில் கலந்துகொண்டு மக்களிடம் பேசுவது குறித்த திறமையை வளர்த்துக்கொண்ட ஹிட்லரின் திறமை மூக்கில் விரலை வைக்க வைக்கிறது.

புத்தக அறிமுகம்.:ஆதவன் சிறுகதைகள்!- தொகுப்பு இ.பா

படம்
ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு: இந்திரா பார்த்தசாரதி என்பிடி ரூ.120 மொத்தம் பனிரெண்டு சிறுகதைகள். மூன்றாமவன், சிவப்பா உயரமா மீசை வச்சுக்காமல், இறந்தவன் ஆகிய சிறுகதைகள் படிக்க ஈர்ப்பானவையாக இருந்தன. மொத்த கதைகளும் ஆதவனின் டிரேட்மார்க் இளமைக் கொண்டாட்டம் வரிக்கு வரி ந்ம்மை உற்சாகப்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. கிழவரின் உலகம் சிறுகதையில் வரும் அவரின் சம்பந்தி பற்றிய வர்ணனைகள்  இதற்கு சூப்பர் உதாரணம்.  அண்ணன் தம்பிக்குள் வரும் போட்டி, ஒப்பீடு எப்படி வாழ்க்கையை சிதைக்கிறது என்பதை பகடியாக எழுதியுள்ளார் ஆதவன். இரண்டாவது சிறுகதையாக மறக்க முடியாமல் பதிவாகியுள்ளது இக்கதை. அடுத்து சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல் என்ற சிறுகதை, நீலாவின் காதல் வேட்கையை குறும்பும் இளமையுமாக முன் வைக்கிறது. காதலில் பிளான்கள் எப்படி சொதப்புகிறது என்பதற்கு காபியை டேபிளில் வைப்பதே சாட்சி, ஆதவனின் பிராண்ட் கதைகள் எந்த காலத்திற்கும் பொருத்தமானவை. ஏனெனில் அவை எழுதப்படும் நவீன மொழி. சிறிது இன்டலெக்சுவல்தனமான பெண்ணிய முற்போக்கு கதைகளையும் எழுதியிருக்கிறார் அதில் கட்டாயம் இடம்பிடிப்பது இறந்தவன் சிறுகதை. ஆத

சென்னை புத்தக திருவிழா 2018! நோர்வீஜீயன் வுட்- ஹாருகி முரகாமி

படம்
புத்தக அறிமுகம் நோர்வீஜியன் வுட் ஹாருகி முரகாமி எதிர்வெளியீடு ரூ.350 டோரு வாட்டனபி என்ற ஜப்பானிய இளைஞனின் பள்ளி, கல்லூரிப்பருவ காதலும் காதல் நிமித்தமுமான வாழ்க்கையே நோர்வீஜியன் வுட் நாவலாக நம்மை வசீகரிக்கிறது. டோரு வாட்டனபி, கிஸூ, நவோகோ, நவகாசா, ஹாட்சுமி, ரெய்கோ, மிடோரி ஆகியோர் மட்டுமே முதன்மை பாத்திரங்கள். இவர்களுக்கிடையேயான உரையாடல்கள் வழியே கனவுபோல காலம் நகர்கிறது. இன்பமும் துன்பமுமான வெறுமை நிலை நம் மனதில் சீனாவின் மாசுபட்ட காற்றைப் போல நீங்காமல் படிகிறது. கிஸூவின் தற்கொலை ஆர்ப்பாட்டமின்றி சாதாரணமாக சில வரிகளில் முடிந்துவிடுகிறது. அவன் எவ்வளவோ முயன்றும் நவோகோவுடன் உறவு கொள்ள முடியாத தோல்வி பற்றிய காரணங்கள்  திடீர் தற்கொலையை மீண்டும் நினைவுபடுத்தியபடியே இருக்கிறது. டோரு வாட்டனபி நினைவுகளின் தாக்குதலுக்குட்பட்டாலும் சுயநிலை மாறாத பாத்திரம். நவோகோ, ரெய்கோ, மிடோரி(செக்ஸ் அல்ல முத்தம் மட்டும்) என பிறரின் மனநிலை அறிந்து அச்சூழலுக்கு உவப்பானதை செய்கிறான். பாரில் அறிமுகமாகும் காதல் தோல்வி பெண்ணுடன் உடலுறவு கொள்வது உட்பட. இதை எப்படி புரிந்துகொள்வது எனில், மனதின் சுமை இ