இடுகைகள்

உலகம் - சீனா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய எல்லையில் சீனா செய்வது நண்பனின் முதுகில் குத்தும் துரோகச்செயல்! - ஏ.கே. அந்தோணி

படம்
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏ.கே. அந்தோணி முன்னாள் ராணுவத்துறை அமைச்சர் இந்திய வீரர்கள் பலியாவதை தடுத்திருக்க முடியுமா? சீனர்கள் நாம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும்போது தாக்கியிருப்பது நம்பிக்கை துரோகம். நமது ராணுவத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினால் நம் வீரர்கள் பலியாவதை தடுக்கலாம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 43 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சீனர்கள் இந்தியாவின் இடத்தை ஆக்கிரமித்தனர். 600க்கும் மேற்பட்ட முறை அத்துமீறல் நடந்தது என பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளாரே? அது தவறான தகவல். 1962ஆம் ஆண்டுதான் சீனா முன்னேறி தாக்கி இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தது. அதற்குப் பிறகு எங்களுடைய ஆட்சியில் அதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. சீனாவை எப்படி சமாளிப்பது? இந்தியா 1962இல் இருந்த நிலையில் இல்லை. இன்று நம்மிடம் திறன் வாய்ந்த ஆயுதப்படைகள் உள்ளன. அவர்களை வைத்து தாக்கி பதிலடி கொடுக்கவேண்டும். காங்கிரஸ் அரசு இரண்டாவது முறை ஆட்சியில் இருந்தபோது, சுமார், டெப்சங் ஆகிய பகுதியில் முன்னேற முயன்றனர். ஆனால் அதனை முழுமையான செயலாக செய்யவில்லை. அப்போது சீனா தென்சீனக்கட

லடாக்கை சீனா தாக்குவது புரியாத புதிராகவே இருக்கிறது!

படம்
outlook பீட்டர் ஃபிராங்கோபன், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக உலக வரலாற்று பேராசிரியர். இந்தியா – சீனாவுக்கு இடையிலான மோதலை எப்படி பார்க்கிறீர்கள்? இந்தியாவின் பிரதமர் மோடி, சீன பிரதமர் ஜின்பிங் இருவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக தங்களது எல்லைப் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் இருநாட்டு உறவுகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. டோக்லாம் விவகாரமே இன்னும் இரு நாடுகளும் மறந்திருக்க முடியாது. இதனால் திரும்பவும் ஆறிய புண்ணை கீறிவிடுவது பெரிய காரியமல்ல. இரு நாட்டு தலைவர்களும் ஒருமனதாக சேர்ந்து ஒப்பந்தத்தை உருவாக்குவதே நல்லது. லடாக் பகுதியை சீனா ஏன் ஆர்வமுடன் கவனிக்கிறது. அங்கு நீர், கனிமங்கள் ஏதேனும் உள்ளதா? நீரும், கனிமங்களும் எந்த நாட்டுக்கும் முகிகயமானதுதான். ஆனால், லடாக் அனைத்து நாடுகளும் எளிதாக வந்து கனிமங்களை, வளங்களை எடுத்துச்செல்லும் இடமல்ல. இந்த நேரத்தில் எதற்கு சீனா, இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. பெருந்தொற்று பிரச்னை சீனாவிற்கு வரும் முதலீடுகளை தடுத்துள்ளதா? பெருந்தொற்றுக்கு முன்னேயும் முதலீட்டில்

ஜின்பிங்கின் ஆட்சியில் திட்டமிட்டு எல்லைமீறல்கள் நடத்தப்படுகின்றன!

படம்
மொழிபெயர்ப்பு நேர்காணல் ஜெயதேவ் ரானடே முன்னாள் கூடுதல் செயல், அமைச்சரவை செயலர், சீன உறவு ஆய்வு மையத் தலைவர் சீனா தற்போதுள்ள பொருளாதார சிக்கலில் தைவான், இந்தியா ஆகியவற்றை தாக்கி வருகிறது என்கிறார் ஜெயதேவ் ரானடே. சீனா – இந்தியா எல்லைப்பகுதியில் என்ன நடந்து வருகிறது. எதற்கான படைகளை நிறுத்தியபடி இருநாடுகளும் சண்டையிட்டு வருகின்றன? சிக்கிமின் நாகு லா, வடகிழக்கு எல்லைப்பகுதிகள், நேபாளத்தின் எல்லை ஆகிய இடங்களில் சீனா முதலிலிருந்தே அத்துமீறி வருகிறது. ஜின்பிங் பதவியேற்றபிறகு இந்த அத்துமீறல்கள் கவனமாக, வேகமாகவும் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றன. எல்லைப்பகுதி தொடர்பான அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் கருத்துகளை நீங்கள் ஏற்கிறீர்களா? அவர் கூறும் கருத்துகளை நான் மறுக்கிறேன். குறிப்பிட்ட இடங்களில் இத்தனை முறை அத்துமீறல்களை நடத்துவது இயல்பான விஷயமாக பார்க்கவே முடியாது. கால்வான் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எந்த அத்துமீறல்களும் நிகழவில்லை என்று யோசித்தாலே எனது சிந்தனைக்கோணம் உங்களுக்குப் புரிந்துவிடும். சீனா காலவான் பகுதியை கவனிப்பது எதற்காக? அங்கு சீனா –

உலக நாடுகளை தலைமையேற்று நடத்துவதை அமெரிக்கா சுமையாக கருதுகிறது! பேராசிரியர் யான் சுவா டாங்

படம்
pixabay உலகம் , வலிமையான தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை ! யான் சுவாடாங் , வெளியுறத்துறை பேராசிரியர் , சிங்குவா பல்கலைக்கழகம் சீனா . பெருந்தொற்று சூழ்நிலை வலிமையான உலக நாடுகளிடையே எந்த விஷயத்தை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது ? கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக உலகம் சரியான ஊக்கமும் உத்வேகமும் கொண்ட தலைமையின்றி தவித்து வருகிறது . பெருந்தொற்று காலம் இந்த கருத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது . அமெரிக்க அதிபர் டிரம்ப் , உலக நாடுகளுக்கு தலைமை தாங்கி வழிநடத்துவதை தேவையில்லாத சுமை என்று கருதுகிறார் . அது உண்மையாகவும் இருக்கலாம் . பிற நாடுகள் தலைமை தாங்குவதற்கான வளம் அல்லது மனம் என இரண்டுமே இல்லாமல் இருக்கின்றன . அதிகாரப்போட்டியில் சீனா , அமெரிக்கா தீவிரமாக போரிட்டு வருகின்றன . எதிர்காலத்தில் இந்த தலைமைப் பொறுப்பை பிற நாடுகள் ஏற்க முன்வருமா என்பதும் கூட சந்தேகமே . தனது நாட்டை ஓர் நாடு வலிமையாக வைத்திருப்பதும் , வழிநடத்துவதும் முக்கியம் என்று உங்கள் நூலில் கூறியிருக்கிறீர்கள் . உலக நாடுகளை பெருந்தொற்று எப்படி பாதித்துள்ளது ? ஓர் நாடு எப்படி தன் நாட்டு மக்களை பெருந்தொற்

சிறுமியைக் காக்க போராடும் முன்னாள் ராணுவ வீரர் - மை பிலவ்டு பாடிகார்டு

படம்
மைடிராமா லிஸ்ட் தி பாடிகார்டு - சீனா 2016 இயக்கம் - சாமோ ஹங்   மிஸ்டர் டிங் ஓய்வுபெற்ற ராணுவ ஆசாமி. அவர் மனதுக்குள் இருக்கும் வலி ஒன்றுதான். அவர் மகள் வயிற்றுப் பேத்தியை நகரில் தொலைத்துவிடுகிறார். இதனால் குடும்பத்தில் நேரும் பிரச்னைகளால் மகள், அவரை எப்போதும் உன்னைப் பார்க்கமாட்டேன். செத்தொழி என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். வயதான காலத்தில் வரும் பிரச்னையான டிமென்ஷியா அவரை மெல்ல தாக்கத்தொடங்குகிறது. ராணுவத்தில் வரும் பென்ஷன் பணத்தில் வாழ்ந்து வரும் அவருக்கு துணையாக பக்கத்துவீட்டு சிறுமி இருக்கிறாள். pinterest குடிநோய், சூ தாட்ட அடிமையான அப்பாவுக்கு பயந்து அந்த சிறுமி பெரும்பாலான நேரங்களில் டிங்கின் வீட்டில்தான் இருக்கிறாள். அங்குதான் டிங்கோடு சாப்பிடுகிறாள். இருவரும் சேர்ந்து மீன் பிடிக்க செல்கிறார்கள். ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறார்கள். உறவுகள் யாருமே இல்லாத நிலையில் அவர் குடியிருக்கும் வீட்டு ஓனரான பெண்ணும், பக்கத்து வீட்டுச் சிறுமியும் காட்டும் அன்பு மட்டுமே டிங்கிற்கு ஆறுதலாக இருக்கிறது. இந்த நேரத்தில் சூதாட்டத்தில் 20 லடசம் ரூபாய் கடன் ஏற்பட்டு விடுகிறது சிறுமியின் தந்தைக்கு. அ

சீனாவின் ஒரு குழந்தை புரட்சி: வெற்றியா? வீழ்ச்சியா?

படம்
மக்கள்தொகை கட்டுப்பாடு: மனித உரிமை மீறலா? உங்களுக்கு எத்தனை குழந்தைகள் சார்? என்று அறிமுகமானவர்கள் கேட்டாலே சங்கடம். இதில் அரசு கேட்டால் மக்களுக்கு பயத்தில் வயிற்றை பிசையுமா இல்லையா? சீனா தன்நாட்டில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை பாலிசியை அமுல்படுத்தியதன் விளைவாக இன்று 30 மில்லியன் ஆண்கள் அங்கு உருவாகியுள்ளனர். மேற்குலகின் குடும்பக் கட்டுப்பாட்டை சீனா அமுல்படுத்தி இரண்டு குழந்தைகள் பெற்றால் அபராதம், கருக்கலைப்பு ஆதாரங்கள், ரகசியமாக குழந்தை வளர்த்தால் தண்டனை என தீவிரம் காட்டியது. இதன் விளைவாக வயதானவர்களின் எண்ணிக்கை சீனாவில் உயரத்தொடங்கியது. இதனை தவிர்க்க இருகுழந்தைகள் பாலிசியை 2015 ஆம் ஆண்டு சீன அரசு அமுல்படுத்தியும் பயன்கள் வேகமாக கிடைக்கவில்லை. மக்கள்தொகை கட்டுப்பாடு, உணவுத்தேவையை, இயற்கை வளங்களை மையமாக கொண்டது என உலகநாடுகள் மக்களை நம்பவைக்கின்றன.  1970-2010 காலகட்டத்தில் மனிதர்களால் 76% கானுயிர்கள் அழிக்கப்பட்டதை உலக கானுயிர் நிதியகம்(WWF) அறிக்கை கூறியுள்ளது. “கல்வியறிவு கொண்ட பெண்கள், குறைவாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வார்கள் என்கிற எழுத்தாளர் லைஹோங் ஷி கருத்

சீனாவின் கெமிக்கல் தாக்குதல்!

படம்
கெமிக்கல் வலையில் சீனா! அமெரிக்கா, சீனாவை அச்சுறுத்த வணிகத்திற்கான வரிகளை அதிகரித்துள்ளது. இதுகுறித்த சர்ச்சை தீராத நிலையில் அந்நாட்டின் சட்டத்திற்கு புறம்பான வேதிப்பொருட்களின் வணிகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செயற்கை ஹெராயின் ஃபென்டைல் பெருமளவு சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகி வருகிறது.   இதுபற்றி ட்ரம்ப் நேரடியாக ட்விட்டரில் சீனாவை குற்றம்சாட்டியும் சீன போதை தடுப்பு பிரிவு அதிகாரி யு ஹைபின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மறுத்துள்ளார். சீனாவில் தயாராகும் செயற்கை வேதிப்பொருட்கள் இணையத்திலும் தபாலிலும் இம்மருந்துகள் உலகெங்கும் சப்ளை செய்யப்படுகிறது. 0.25 மி.கி அளவு ஃபென்டைல் கூட உடலுக்கு ஆபத்துதான் என்கிறது அமெரிக்காவின் மருந்து அமலாக்கத்துறை(DEA). கடந்தாண்டில் அமெரிக்காவில் 40% இறப்புகள்(72,000), கனடாவில் 72% இறப்புகள் செயற்கை வேதிப்பொருட்களால் நிகழ்ந்துள்ளன. சீனாவில் 4 லட்சம் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்(2015) உண்டு. ஆண்டு வருமானம் நூறு பில்லியனுக்கும் அதிகம். உலக நாடுகளில் நெருக்கடியினால் 150 க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களை சீன அரசு தடைசெய்து