சீனாவின் ஒரு குழந்தை புரட்சி: வெற்றியா? வீழ்ச்சியா?
மக்கள்தொகை கட்டுப்பாடு: மனித
உரிமை மீறலா?
உங்களுக்கு எத்தனை குழந்தைகள்
சார்? என்று அறிமுகமானவர்கள் கேட்டாலே சங்கடம். இதில் அரசு கேட்டால் மக்களுக்கு பயத்தில்
வயிற்றை பிசையுமா இல்லையா? சீனா தன்நாட்டில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை பாலிசியை
அமுல்படுத்தியதன் விளைவாக இன்று 30 மில்லியன் ஆண்கள் அங்கு உருவாகியுள்ளனர்.
மேற்குலகின் குடும்பக் கட்டுப்பாட்டை
சீனா அமுல்படுத்தி இரண்டு குழந்தைகள் பெற்றால் அபராதம், கருக்கலைப்பு ஆதாரங்கள், ரகசியமாக
குழந்தை வளர்த்தால் தண்டனை என தீவிரம் காட்டியது. இதன் விளைவாக வயதானவர்களின் எண்ணிக்கை
சீனாவில் உயரத்தொடங்கியது. இதனை தவிர்க்க இருகுழந்தைகள் பாலிசியை 2015 ஆம் ஆண்டு சீன
அரசு அமுல்படுத்தியும் பயன்கள் வேகமாக கிடைக்கவில்லை. மக்கள்தொகை கட்டுப்பாடு, உணவுத்தேவையை,
இயற்கை வளங்களை மையமாக கொண்டது என உலகநாடுகள் மக்களை நம்பவைக்கின்றன.
1970-2010 காலகட்டத்தில்
மனிதர்களால் 76% கானுயிர்கள் அழிக்கப்பட்டதை உலக கானுயிர் நிதியகம்(WWF) அறிக்கை கூறியுள்ளது.
“கல்வியறிவு கொண்ட பெண்கள், குறைவாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வார்கள் என்கிற எழுத்தாளர்
லைஹோங் ஷி கருத்து நாடுகளின் கொள்கைகளைப் போலவே புரிந்துகொள்ள சிக்கலானது.